Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, October 22, 2010

இப்பவே கண்ணை கட்டுதே...

ஸ்ஸ்ஸ்.... ஊர்ல மெசேஜ் அனுப்பறவன், சாட் பண்றவன், ஈமெயில் அனுப்பறவன், ட்வீட் பண்றவன் எல்லாம் நல்லா தான் இருக்காங்க. ஒரே ஒரு BLOG அ வைச்சுட்டு நான் படற பாடு இருக்கே.....
        
             என்னங்க பண்றது... எல்லாரும் புதிர் போடறாங்களே னு நானும் போட்டா சேலம் ரமேஷ் வந்து என்னங்க விடை வெளிப்படையா தெரியுது னு திட்டறாரு. 'எனக்கு அந்த செட்டிங் எல்லாம் தெரியாதுப்பா' னு அசின் கணக்கா சரண்டர் ஆக வேண்டி இருக்கு. ஏங்க... இதுக்கெல்லாம் guide கிடைக்காதா?


             இந்த நாள்.... உங்க மொபைல் ல reminder போட்டு வைச்சுகோங்க... நானும் உங்கள விட அதிகமா ப்ளாக் எழுதி, என்னை மாதிரி புதுசா வரவங்க 'எங்கே சாதாரணமானவள்  blog... எங்கே சாதாரணமானவள்  blog...' னு தேடி அவங்க ப்ளாக் போட என்னென்ன டிப்ஸ் குடுக்க முடியுமோ அதெல்லாம் குடுக்கல.... (அய்யய்யோ....இதுக்கு மேல எப்படி பில்ட் அப் குடுக்கறது னு தெரியலையே...) நான் சாதாரணமானவள் இல்ல... (உங்க மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்... அதேதான்) :-)


               ஓகே .... இப்ப மேட்டருக்கு வரேன்... எப்டிங்க மத்தவங்க கமெண்ட்ஸ மறைக்கவும்  , மத்தவங்கள கமெண்ட் கொடுக்க முடியற மாதிரியும்  செட் பண்றது? மேற்கொண்டு வேறு ஏதேனும் சந்தேகம் வந்தால் எந்த ப்ளோகில் தேடலாம்? புதிய பதிவர்களுக்கும் வழி காட்டுங்களேன்...

7 comments:

வெங்கட் said...

என்ன சந்தேகம்..?

எல்லாமே Dashboard --> Settingsல
தான் இருக்கும்..!

வெங்கட் said...

Settings -- > Comments

Comments - Show

இங்கே Comment moderation - Always

Show word Verifiaction - No

இப்ப மத்தவங்க போடற Comments
உங்க Dashboard-ல வரும்..

நீங்க பாத்துட்டு Publish or Reject பண்ணலாம்.

....

Welcome 2 Blog World..

இப்பவே ஒரு ஆட்டோகிராப் போட்டு குடுத்துடுங்க..
பெரிய ஆளானதுக்கு அப்புறம் வாங்கறது
கஷ்டமா போயிட்டா என்ன பண்றது..?!

:-)

சாதாரணமானவள் said...

கத்துக்குடுத்தவங்கள மறக்க மாட்டேங்க... ஆட்டோக்ராஃப், மாயக்கண்ணாடி, பொக்கிஷம் எல்லாமே கொடுக்கறேங்க. :-)

எஸ்.கே said...

இனி தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்!

எல் கே said...

நீங்க என்ன தப்பு பண்ணீங்கன்னு இப்ப சொல்றேன். வந்த விடைகளில் எது சரியோ அதை நீங்கள் பப்ளிஷ் பண்ணி இருக்கக் கூடாது அவ்வளவுதான்

சாதாரணமானவள் said...

Oh.... you are right

Avargal Unmaigal said...

ஹலோ சதாரணமானவள் im simple guy so we are like a family. if you get any good idea share with me. வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்