Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, November 5, 2010

நிஜமாவே இந்த உருவத்தில் தான் கடவுள் இருப்பாரா?

உருவ வழிபாடு ஏன் வந்தது?
        படைப்பு, நகைச்சுவை, கதை, புதிர், சினிமா, பொது  னு எல்லா Field யும் தொட்டாச்சு. ஆன்மீகத்துலயும் try பண்ணி பாக்கலாமே னு யோசிச்சதுல இந்த மேட்டர் தான் சிக்குச்சு. படிச்சுட்டு  சொல்லுங்க நான் Pass or Fail னு.
 
பெரும்பாலானவர்களுக்கு இந்த சந்தேகம் வரும். கடவுளுடைய உருவம் நிஜமாகவே இப்படி தான் இருக்குமா என்று. நான் படித்த பெரும்பாலான புத்தகங்களும், கடவுளை கண்டவர்களாக சொன்னவர்களும் கூறுவது ஒன்றை தான். கடவுள் ஜோதி வடிவம்,  ஒளி வடிவம், பிரகாசமானவர். செத்துப் பிழைத்தவர்களாக (உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி) எண்ணப்படுபவர்கள் கூறும் அனுபவங்களும் ஒன்று தான். அவர்களுடைய உடலை விட்டு உயிர் பிரிந்து மேலே சென்று ஒரு பேரோளியைத்தான் சந்திப்பதாக கூறி இருக்கிறார்கள்.

                 அப்படி இருக்க, எதற்காக நம் முன்னோர்கள் இப்படி வித விதமான கடவுள் உருவங்களை உருவாக்கினார்கள்? இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, அன்றே கண்டுபிடித்து வைத்த அன்றைய ஞானிகள் இந்த விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டிருக்கவா போகிறார்கள்? இதற்கெல்லாம் என்னால் முடிந்த வரை பதில் தர முயற்சி செய்கிறேன்.

இப்ப என் பெயர் சாதாரணமானவள் னு மட்டும் போட்டா, நீங்க என்னை, என் முகத்தை, என் குணத்தை எப்படி வேணாலும் கற்பனை பண்ணலாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகம் தோன்றலாம். ஆனா, இப்ப நான் வைச்சிருக்கற போட்டோ இருக்கே, அது என்னை பத்தி கொஞ்சமாச்சும் உங்க மனசுல சில அபிப்ராயங்கள ஏற்படுத்தி இருக்கும்.

உதாரணமா,
1 அதில் இருக்கும் முகம் போல நானும் சாந்தமா இருப்பேன்
2 இளமையா இருப்பேன்
3 மிருதுவா, அமைதியான குணமா இருப்பேன்
4 அதில் உபயோகித்திருக்கும் நீல நிறம் ஆழமான தன்மையை குறிப்பதால், என் கருத்துகளும் ஆழமாக இருக்கும்.
5 ரகசியதன்மையையும் கலந்து  இருக்கும்
6 ஒற்றை மரம் காணப்படுவதால் தனிமை விரும்பி
(என் Profile photo வ இப்ப ஒரு தடவை நல்லா பார்த்தீங்க தான :-) ) 
என எப்படி வேணும்னாலும் உங்களுக்கு தோன்றலாம்.

மேற்கூறியதில் ஒன்றாவது நீங்கள் என்னைப்பற்றி நினைத்திருப்பீர்கள்.  நான் இந்த குணங்கள் கொண்டவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் வைத்திருக்கும் படத்தின் மூலம் ஏதாவது விதத்தில் நான் உங்களுக்கு ஒரு message சொல்லி இருப்பேன்.

அதே போல இந்து மத ஞானிகளும் ஒரு இறை உருவத்தை, அதுவும் உருவமல்லாத ஒன்றை குறிப்பிட ஒரு உருவத்தை உருவாக்கினார்கள். எதுவும் இல்லாத ஒன்றை வழிபட வெற்று சுவற்றை நோக்கினால் சுவரில் உள்ள விரிசல் தெரியும். வானத்தை நோக்கினால் மேகம் தெரியும், கடலை நோக்கினால் அலை தெரியும். கண்ணை மூடினால் கண்டதெல்லாம் தெரியும். இப்படி அருவத்தை வழிபட முயற்சித்தால் நம் மனம் உருவத்தை நிர்மானித்துக்கொள்கிறதே என்று  'இதை பார்த்து கற்பனை செய்யும் மனதை குவிச்சுகோங்கடா' னு லிங்க உருவத்தை படைச்சாங்க.

டிபார்ட்மென்ட் ஸ்டோரில் எல்லாம் கிடைத்தாலும் அது அதுக்குன்னு தனி தனி பிரிவு, தனி தனி சூபர்வைசர்கள் இருப்பது போல, நம்ம ஆளுங்களுக்கு தனிதனி கவலைகளுக்கு தனிதனி சாமி தேவைபட்டாங்க. குழந்தை பிறப்புக்கு, ஆரோக்கியத்துக்கு, காசுக்கு, படிப்புக்கு, தைரியத்துக்கு, தொழிலுக்கு, காவலுக்கு, வீட்டுக்கு,  சாவுக்கு,  பாவ புண்ணியத்துக்கு என பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாத்துக்கும் தனி தனி சாமியை உருவாக்கி அவர்கள் கையில் அந்தந்த தேவைக்கேற்ப பொருட்களை சொருவி வச்சுட்டாங்க.

கான்செப்ட் என்னன்னா, நாம எது வேணும்னு நினைக்கறமோ, அதையே நினைச்சுட்டு இருந்தா, அந்த எண்ண அலைகள் மேலே இருக்கக்கூடிய காஸ்மிக் கதிர்களில் பதிவாகி அதை நடக்க வைக்குமாம். அப்படி நமக்கு வேணும்கற விஷயத்தை நாம் கும்பிடும் சாமியின் கைகளில் பார்க்கும்போது நமக்கு அது கிளிக் ஆகி விடுகிறது. ஸோ, நாம் திரும்ப திரும்ப பார்த்து, நம் எண்ண அலைகளை அனுப்ப வைக்கும் வேலை தான் இந்த உருவ வழிபாடு. (இந்த விஷயம் நாத்திகம் போல இருந்தாலும், நான் ஆத்திகவாதி என்பதால் 'அப்படி பதியப்பட்ட விஷயங்களை  நடக்க வைப்பது கடவுள்' என்றுதான் கூறுவேன். எனவே இதற்கு தனியாக பின்னூட்டம் இட வேண்டாம் :-)  )

இந்த மேட்டர் சாமி கைல இருக்கற விஷயங்களுக்கு ஓகே. ஆனால் சாமி முகங்கள் வித விதமான  மிருகங்களையும் சுமந்திருக்கிறதே அது எதற்காக?

நீங்கள் இடும் பின்னூட்டமும், ஓட்டும் தான் என் போன்ற புதிய பதிவர்களுக்கு ஊக்கி. இவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு யோசித்து (நம்புங்கப்பா..) டைப் செய்த இந்த விஷயங்களுக்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை பொறுத்து அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

52 comments:

உமர் | Umar said...

//நாம எது வேணும்னு நினைக்கறமோ, அதையே நினைச்சுட்டு இருந்தா, அந்த எண்ண அலைகள் மேலே இருக்கக்கூடிய காஸ்மிக் கதிர்களில் பதிவாகி அதை நடக்க வைக்குமாம். //

அப்படின்னு யாரு சொல்லியிருக்குறது? அந்த ஆராய்ச்சி முடிவுகள் எங்கே இருக்கின்றன?

//ஆரோக்கியத்துக்கு, காசுக்கு, படிப்புக்கு, தைரியத்துக்கு, தொழிலுக்கு, காவலுக்கு, வீட்டுக்கு, சாவுக்கு, பாவ புண்ணியத்துக்கு என பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாத்துக்கும் தனி தனி சாமியை உருவாக்கி அவர்கள் கையில் அந்தந்த தேவைக்கேற்ப பொருட்களை சொருவி வச்சுட்டாங்க.//

உருவங்கள் கற்பனை அப்படின்னு சொல்லிட்டீங்க. கான்ஸெப்டே கற்பனை அப்படின்னு எப்ப சொல்லப்போறீங்க?

-----
மேலும் உங்களுக்காக ஒரு தகவல்: உயிர் என்பது வேதிப்பொருட்களின் கலவைதான் என்பது பல ஆராய்ச்ச்களின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

ப.கந்தசாமி said...

ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட். ரொம்ப சிந்தனை பண்ணவேண்டும்.

"நாடி ஜோதிட நல்லாசான்"க.சேரன் D.A. said...

அன்புமிக்க சகோதரி சாதரணமானவளுக்கு ஞானசூனியனின் வாழ்த்துகள்.

அருமை.. அருமை..

நமது கடவுள்களின் உருவத்தில் பொதிந்துள்ள அருமையான வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்துகொள்வதற்கு சற்று நிதானமும் அறிவும் தேவை. வெறும் பகுத்தறிவு மட்டும் போதாது.. மனவொருமைப்பாடும் தேவை...

முனைவர் P.கந்தசாமி சொன்னதுபோல நீங்கள் தொட்டிருப்பது கஷ்ட்டமான சப்ஜெக்ட்தான்.

இதற்கு கொஞ்சம் சகிப்புத் தன்மையும் பொறுமையும் தேவை.

சகோதரி நீ சாதாரணமானவள் அல்ல...அல்ல...

சாதிக்கப் பிறந்தவள்.

"கும்மி" போன்றோர் விமர்சனங்களைக் கண்டு துவண்டுவிடாதே....

அதையே ஊக்கமருந்தாக எண்ணி மேலும் மேலும் ஆழமாக சிந்தித்து விடைகாண்.

இந்த சகோதரனின் அன்பும் வாழ்த்துக்களும்....

"நாடி ஜோதிட நல்லாசான்"க.சேரன் D.A. said...

திரு/திருமதி கும்மி அவர்களுக்கு

பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரியாமலே பகுத்தறிவு பேசும் உங்களையெல்லாம்

லட்சம் விவேகானந்தர், வந்தாலும் திருத்த முடியாது.

உமர் | Umar said...

//பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரியாமலே பகுத்தறிவு பேசும் உங்களையெல்லாம்

லட்சம் விவேகானந்தர், வந்தாலும் திருத்த முடியாது. //

எங்களைத் திருத்தறது இருக்கட்டும். முதல்ல, நான் கேட்ட கேள்விக்கு பதில் இருந்தா சொல்லுங்க. அப்புறம் தெரியும் யாரு திருந்தணும்ன்னு?

எண்ண அலைகள் காஸ்மிக் கதிர்களில் பதிவாகும் என்று எந்த விஞ்ஞானி சொன்னது?

Atheist said...

******மேலும் உங்களுக்காக ஒரு தகவல்: உயிர் என்பது வேதிப்பொருட்களின் கலவைதான் என்பது பல ஆராய்ச்ச்களின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. ****

அதாவது கும்மி என்ன சொல்றார்னா ஒரு வாளிக்குள்ள உயிருக்கு தேவையான எல்லா வேதிப்பொருளையும் போட்டு நல்லா கலக்கினா ஒவ்வொரு உயிரா வந்து கொண்டே இருக்கும். இப்படிதான் புதுசு புதுசா உயிர்கள உற்பத்தி பண்றாங்க. எல்லாரும் தெரிந்சுக்குங்க.

கும்மி சார், ஆய்வு கூடத்துல செய்து பார்த்து நீங்க சொன்ன மாதிரி வேதியியல் பொருட்கள ஒன்னா சேர்த்து உயிர் வந்துட்டதா நிரூபிச்ச ஆய்வு முடிவுகள தாமதிக்காம வெளியிடுங்க. சார் நல்லா கவனிச்சுக்குங்க, "உயிர் வந்துட்டதா"...

எஸ்.கே said...

புரொஃபைல் படம் குறித்து நீங்கள் போட்டிருக்கும் விசயங்கள் சிறப்பாக உள்ளன!

சாதாரணமானவள் said...

http://www.aanmigakkadal.com/2009/09/blog-post_5548.html இந்த முகவரியில் காஸ்மிக் பற்றி ஆய்வு செய்த நிக்கோலோ டெஸ்லாவின் கருத்துகள் பதியப்பட்டுள்ளன. கும்மி அவர்கள் மேற்கொண்டு அங்கே தொடர்பு கொள்ளலாம். எதிர்ப்பு கருத்துகள் வருவதும் அவற்றுக்கு விளக்கம் தர முயற்சிப்பதும் நன்றாகத்தான் உள்ளது. இந்த நல்ல வாய்ப்பை தந்த கும்மி அவர்களுக்கு நன்றி. என் கருத்துகளுக்கு பரிந்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Anonymous said...

//இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, அன்றே கண்டுபிடித்து வைத்த அன்றைய ஞானிகள் //
முன்பே ஞானிகள் கண்டுபிடித்த விடயங்களை எதற்க்காக இந்த விஞ்ஞானிகள் திரும்பவும் கண்டுபிடிக்கிறார்கள்? பணத்தையும் நேரத்தையும் அநியாயமாக வீண்ணாக்குகிறார்கள்.

உமர் | Umar said...

@சாதாரணமானவள்
// இந்த முகவரியில் காஸ்மிக் பற்றி ஆய்வு செய்த நிக்கோலோ டெஸ்லாவின் கருத்துகள் பதியப்பட்டுள்ளன//

நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில், இருக்கும் தகவல்கள், அறிவியல் ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை. காஸ்மிக் கதிர்களின் ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்ட டெஸ்லா, Space cannat be curved என்று கூறியது பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், அந்தப் பதிவை மேற்கோளிட்டிருக்க மாட்டீர்கள்.

காஸ்மாலாஜி பற்றி பெரும் ஆராய்ச்சிகள் செய்து வரும் ஸ்டீபன் ஹாக்கிங், சமீபத்தில் தனது The Grand Design புத்தகத்தின் மூலம் வெளியிட்டிருக்கும் முடிவுகள், மதவாதிகள் கூறும் அனைத்து சித்தாந்தக்களுக்கும் சாவு மணி அடித்துள்ளதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் அறிவியல் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள முனைந்தாலே, மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் நபர்களை பற்றி முழுதாக அறிந்துகொள்ளலாம். அறிவியலை கற்க வாழ்த்துகள்.

உமர் | Umar said...

@atheists என்னும் பெயரில் வந்த அனானி.

ஏற்கனவே, வாங்குன ஆப்பு பத்தலைன்னு இப்ப அனானியா சுத்திக்கிட்டு இருக்கீங்க போல.

போங்க போய் புள்ளக் குட்டிங்கள அறிவியல் படிக்க வைங்க. சும்மா, யாரோ உளறுனதை எல்லாம், வேதம்ன்னு சொல்லிக்கிட்டு சக மனிதனை மனிதனாக கூட பார்க்காம துவேஷத்தை வளர்த்துக்கிட்டு திரியாதீங்க.

மதுரை சரவணன் said...

கடவுள் இருக்கிறார்.. அதுமட்டும் உண்மை. அவர் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர் நம் எண்ண அலைகளின் வழியாக பரவி நன்மை செய்வார் என்பது மட்டும் உண்மை. பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

கும்மி அவர்களே, atheists என்னும் பெயரில் வந்தவர் நான் இல்லை. இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதெல்லாம் முன்பே ஞானிகள் கண்டுபிடித்தவை தான் என்பதை படித்து குழம்பி உளற தொடங்கிவிட்டேன்.

எல் கே said...

@சாதாரணமானவள்

மிக அருமையான டாபிக். நீங்கள் சொல்லும் விஷயம் ஓரளவு சரிதான்.

கும்மி அண்ணே சும்மா காமெடி பண்ணாதீங்க. பொய் புள்ள குட்டிங்கள படிக்க வைக்கற வேலைய பாருங்க

Thamizhan said...

கதைகள் கதைகளாக மட்டும் இருந்திருந்தால் தொல்லைகள் இருக்காது. கதைகள் கடவுள்கள் ஆக்கப்பட்டதுதான் தொல்லைகளின் அடிப்படை.அப்பப்பா முப்பத்து முக்கோடி என்று மக்கள் தொகையைவிட அதிகமாக ஆணும்,பெண்ணும்,மிருகமும்,கலவையும் போதுமடா ஆசாமி!

Atheist said...

எல்லாரும் நல்லா பார்த்துக்குங்க.

கேள்வி கேட்டேன். ஆனா கும்மியோட பதில பார்த்தீங்களா. இதுதான் இவரோட லட்சணம். இவரையெல்லாம் சீரியஸா நினைச்சி யாரும் பதில் சொல்ல வேணாம்குறதுக்கு அவரோட பதிலே உதாரணம். இப்படிதான் அப்பப்ப முக்குடைபடுவாறு. அதனால கும்மி ஏதாவது சொன்ன ஜாலியா எடுத்துக்குங்க. ஓகேவா

Anonymous said...

அன்பு சகோதரி, நீங்கள் சாதாரணமானவள் இல்லை, அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!
யோவ் கும்மி, உன் உபதேசம் எல்லாம் ராஜனுக்கு தான் இப்போ தேவை. அங்கே போய் உளறு.

மருது said...

@ சாதாரணமானவள்.

அருமையா சொன்னீங்க. வாழ்த்துக்கள்.

@ கும்மி,

இன்னும் இந்த ஊருக்கு உபதேசம் ( ஊருக்கு மட்டும் )
செய்யறதை விடலையா? நாத்திகம் பேசிட்டு திரிஞ்ச
ராஜன் தன் மனைவி/ மாமனார் உணர்வுகளை புரிஞ்சிகிட்டு,
ஒரு சுபமுகூர்த்ததில, மேடையில் பின்னால் விநாயகர் படம் சாட்சியாக,
தாலி கட்டி, கல்யாணம் கட்டிகிட்டார்.கல்யாணத்தை கூட நின்னு
சிறப்பா நடத்தி வெச்சவங்க நீங்க.

எப்ப உங்க கொள்கையில உங்களால, உங்க
நண்பர்களால ( ராஜனால ) உறுதியா நிக்க முடியலையோ
அப்பவே நீங்கல்லாம் Unfit ஆயிட்டீங்க.மத்தவங்களுக்கு
உபதேசம் பண்ற தகுதியை இழந்துட்டீங்க.

ராஜனால தான் கட்டிக்க போற பொண்ணு, அவங்க அப்பா,
சொந்தம் இதையே Convience பண்ண முடியலையே. அப்ப எதுக்கு
மத்தவங்ககிட்ட பிலிம் காட்ற வேலை?

புளூகிராஸ்ல மெம்பரா இருந்துகிட்டு, தினமும் சிக்கன்
பிரியாணி சாப்பிடறவனுக்கு என்ன மரியாதையோ,
அதே மரியாதை தான் உங்களுக்கும். போயி வேற வேலை
இருந்தா பாருங்க.என்ன?

Anonymous said...

Well Said, Marudhu!

Anonymous said...

//நீங்கள் அறிவியல் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள முனைந்தாலே, மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் நபர்களை பற்றி முழுதாக அறிந்துகொள்ளலாம். அறிவியலை கற்க வாழ்த்துகள். //

அதே போல், மனிதவியலையும் வாழ்வியலையும் படித்திருந்தால், ராஜன், கும்மி, போன்று பிறருக்கு மட்டும் உபதேசிக்கும் போலி நாத்திகவாதிகளையும் கண்டுபிடிக்க முடியும்.

உமர் | Umar said...

@ஞானி, விஞ்ஞானி பற்றி பேசிய அனானி நண்பருக்கு.

எனது முந்தைய பதிலில், நான் உங்களைக் குறிப்பிடவில்லை. அது போன்ற தோற்றத்தைத் தந்திருந்தால், மன்னித்துக்கொள்ளவும். வேறொருவர், தற்பொழுது போலி ப்ரோபைலில் வந்திருக்கின்றார். அவருக்குதான் பதில் சொன்னேன்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு, இவர்கள் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். ஆனால், இந்தப் பதிவிலிருந்தே நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளலாம். முதலில், நமது வேண்டுகோள்களை கடவுள் கேட்பார்; அதற்கு ஏற்றார் போல் அவர் செயல்படுவார் என்று கூறினார்கள். இப்பொழுது, நமது எண்ண அலைகள், காஸ்மிக் அலைகளில் பதிவாகும்; அதற்கு ஏற்றார் போல் விளைவு இருக்கும் என்று கூறுகின்றனர். அப்படியானால், காஸ்மிக் அலைகள்தான் கடவுளா? அவர்களுக்கே, கடவுளைப் பற்றி தாங்கள் இதுவரை கூறியவைக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்று தெரிகின்றது. அதனால், ஏதேனும் அறிவியல் முலாம் பூசி, கடவுள் கோட்பாட்டை விற்பனை செய்ய முடியுமா என்று பார்க்கின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கோளிடும் அறிவியல் நிகழ்வுகளும் அவர்களது பித்தலாட்டங்களை அம்பலப்படுத்திவிடுகின்றன.

இதுபோன்றுதான், இன்னொரு குழுவும் 1400 வருடங்களுக்கு முன்னரே எங்கள் வேத புத்தகத்தில் அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். ஏதேனும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்ந்தால், தங்கள் வேத புத்தகத்தில் இருந்து ஏதேனும் ஒரு வரியை எடுத்துப் போட்டு, இதோ பாருங்கள் 1400 வருடங்களுக்கு முன்னரே, எங்கள் தூதர் மூலம் இறைவன் இதனைக் கூறிவிட்டான் என்பார்கள். ஜாகிர் நாயக் என்றொருவர் இருக்கின்றார். குர் ஆனை மனப்பாடமாக தெரிந்தவர். கடந்த வருடம், நிலவில் நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியதும், குர் ஆனில் அது பற்றி என்ன கூறியிருக்கிறது என்று ஆராயப்போகிறேன் என்று கூறியுள்ளார். இன்னும் சில வருடங்கள் கழித்து விஞ்ஞானிகள் உறுதியான முடிவுகளை அறிவித்தவுடன், தனது ஆய்வு முடிவுகளை அறிவிப்பார். அப்பொழுது பாருங்கள், மகா காமெடியாக இருக்கும்.

இந்தக் கூட்டத்தைச் சார்ந்த இன்னொருவர்தான், தற்பொழுது atheists என்னும் போலி பெயரில் வந்து பின்னூட்டமிட்டுள்ளார். அவருக்கு நான் அளித்த பதிலைத்தான் நீங்கள் உங்களுக்கானது என்று நினைத்துவிட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.

உமர் | Umar said...
This comment has been removed by the author.
உமர் | Umar said...

ப்ளாக்கரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரே பின்னூட்டம் இருமுறை வந்துவிட்டது. ஒன்றை நீக்கிவிட்டேன்.

உமர் | Umar said...

@atheists - அனானி
இப்பொழுது புது உயிரி எதுவும் உருவாக்கப்படவில்லை என்று கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். இந்தச் சுட்டியைப் பாருங்கள். பரிசோதனைக் கூடத்தில் எலிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த ஆராய்ச்சி முடிவுற்றதும் எலியைதானே உருவாக்கியுள்ளார்கள்; புலியை உருவாக்கவில்லையே என்று கூறுவீர்கள். அதற்குபிறகு அவர்கள், புலியையும் உருவாக்கியபிறகு ஏதும் கூற நீங்கள் இருக்க மாட்டீர்கள். அந்தப் புலிக்கான முதல் இரை நீங்களாகத்தான் இருப்பீர்கள். ஏற்கனவே ஆப்பு வாங்குனதுகூட தெரியாம இப்படி சுத்திக்கிட்டு இருக்கீங்களே. பாவம்.


அப்புறம், புது சகவாசம் நல்லா வேலை செய்யுது போல! நீங்க வந்தவுடனையே, உங்க பின்னாடியே ஏகப்பட்ட அனானி வந்திருக்காங்க. நடத்துங்க.

உமர் | Umar said...

@LK
என்ன கொஞ்சா நாளா மைனஸ் ஓட்டு போட வர்றதில்லை? அது எப்படிங்க ஒரு இடத்துல கூட, கருத்துக்கு பதில் சொல்ல வழியில்லை; இப்படி உதார் விட்டுக்கிட்டே திரியிறீங்க?

உமர் | Umar said...

ஒரு டவுட்டு.
யுககோபிகா மாதிரி இன்னும் நாலஞ்சு பேரு வந்திருப்பாங்களோ? வருவாங்களோ? தெரியலையே?

உமர் | Umar said...

இப்பதிவு சம்பந்தமாக, எண்ண அலைகள் காஸ்மிக் கதிர்களில் பதிவாகும் என்னும் அறிவியல் ஆராய்ச்சி எங்கே நடைபெற்றது? எப்பொழுது நடைபெற்றது? அதன் முடிவுகள் என்ன? என்பன போன்ற விபரங்களோடு யாரும் வந்தால், இன்னும் விரிவாக விவாதிக்க வசதியாக இருக்கும். பதில்களை எதிர்பார்த்து...

Atheist said...

கும்மி சார், என்ன லிங்க் இது...நான் என்ன கேட்டேன், நீங்க என்ன கொடுக்குறீங்க...mitochondrial genome குறித்தா நான் கேட்டேன். வேணும்னா இன்னொருதபா கேட்குறேன்.

//கும்மி சார், ஆய்வு கூடத்துல செய்து பார்த்து நீங்க சொன்ன மாதிரி வேதியியல் பொருட்கள ஒன்னா சேர்த்து உயிர் வந்துட்டதா நிரூபிச்ச ஆய்வு முடிவுகள தாமதிக்காம வெளியிடுங்க. சார் நல்லா கவனிச்சுக்குங்க, "உயிர் வந்துட்டதா"...//

"genome மற்றும் உயிர்" இவற்றுக்கு உண்டான வித்தியாசத்த கும்மி விளக்குவார். கும்மி சார் நீங்க பெரிய பித்தலாட்டகாரர்னு மறுபடியும் நிரூபிச்சதுக்கு தாங்க்சு சார்...

அப்புறம் இன்னொனையும் கவனிச்சீங்களா...கும்மி சொன்னாரு ***மேலும் உங்களுக்காக ஒரு தகவல்: உயிர் என்பது வேதிப்பொருட்களின் கலவைதான் என்பது பல ஆராய்ச்ச்களின் மூலம் நிறுவப்பட்டுள்ளது***

அதுக்கு தான் ஆதாரம் கேட்டேன். நிரூபிக்கபட்ட ஆய்வு முடியுகள தாங்கன்னு...(அவர் கொடுத்த ஆதாரம் செம காமெடி. அதுல உயிரை உருவாக்கவே இல்ல, Synthetic genome தான் உருவாக்கியிருக்காங்க அதனால அவர் கொடுத்த ஆதாரத்த தூக்கி அவர் மூச்சிலேயே வீசிடுவோம்) ஆனா அவர் கொடுத்த லின்க்குல சொல்றாங்க ***The researchers have not yet tested the functionality of the synthetic mouse mitochondrial genome, but Gibson said they intend to do such experiments in the future***

அதாவது இன்னும் இத டெஸ்ட் பண்ணலையாம்.

வெறும் வேதியியல் பொருளால உருவானது தான் உயிர்ன்னு சொன்னீங்களே அதுக்கு என்ன ஆதாராம்னு கேட்டா அதுக்கு ஆதாரமே இல்லாத ஒரு லிங்க்க கொடுத்தார். சரின்னு அங்கே போய் பார்த்தா இனிமே தான் டெஸ்ட் பண்ண போறாங்களாம்....

என்னோவோ ஏற்க்கனவே டெஸ்ட் பண்ணி ரிசல்ட் வந்த மாதிரி சொன்ன கும்மியோட முகத்துல கரிய பூசி இருக்கு அவர் கொடுத்த லிங்க்.

அப்படியே அவங்க இத டெஸ்ட்டு பண்ணி success ஆயிட்டாலும் அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்? நான் உயிரப்பத்தி பேசுறேன். இவர் genome பத்தி பேசுறார்...

இப்ப நான் கேட்டா கேள்வி அப்படியே நிக்குது. அதாவது கும்மி சார் எந்த ஆதாரத்தோட அந்த கருத்த சொன்னார்? சும்மா போற போக்குல சொல்லிட்டு போனா கும்மிய டம்மின்னு டோண்டு சொன்னது சரிதான் போலிருக்கு.

இது கும்மியின் முட்டாள் தனமான பதிலுக்கு இன்னொரு சாட்சி. கும்மிய ஜாலியா எடுத்துகுனும்நு நான் சொன்னத மறுபடியும் நிரூபிச்ச கும்மிக்கு தாங்க்ஸ்...

Thekkikattan|தெகா said...

சாதாரணம்... தேடலை விடாதிங்க அதுக்கு முன்னாடி தரோவா ஒரு முறை எல்லாத்தையும் கேள்விக்கு உட்படுத்திக்கோங்க. தெளிவா இருக்க உதவும்!

Take your time, you are not in a hurry... enjoy!

அதுக்கு இங்கிருந்து தொடங்குங்க.

http://dharumi.weblogs.us/2005/09/15/66

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே, வணக்கம்.

இந்த உரையாடலைக் கேளுங்கள்.


கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)


அடுத்த பதிவில் மீதம் தருகிறேன் (ஒரே போஸ்டில் போடமுடியலை)

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

அன்பு நண்பர்களே, வணக்கம்.

இந்த உரையாடலைக் கேளுங்கள்.

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

மாணவர் ……

மீண்டும் அடுத்த பதிவில்

"நாடி ஜோதிட நல்லாசான்"க.சேரன் D.A. said...

திரு கும்மி அவர்களே

திருமிகு மீ.பா. சோமு அவர்களால் எழுதப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பதிப்பிக்கப்பட்ட "சித்தர் இலக்கியம்" என்ற நூலை (3 பாகங்கள்) வாங்கிப் படியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் எதிபார்ப்பதற்கும் அதிகமான தகவல்கள் கிடைக்கும்.

தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவதுபோல நடிப்பவர்களை ....?

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

அன்பு நண்பர்களே, வணக்கம்

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத் தூண்டல்களினால்தான். ‎‎‎�
மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

மீண்டும் மறு பதிவில் ....

அன்புடன் கருணாகரன்.இடைப்பாடி.

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

அன்பு நண்பர்களே, வணக்கம்

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

"நாடி ஜோதிட நல்லாசான்"க.சேரன் D.A. said...

நண்பர் கருணாகரன் அவர்களே நீங்கள் சுட்டிக்காட்டிய உண்மை சம்பவத்தை உணர்ந்த பிறகும் அவர்கள் திருந்துவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை..

நான் முன்பே குறிப்பிட்டது போல இவர்களை லட்சம் கலாம்கள் வந்தாலும், லட்சம் விவேகானந்தர்கள் வந்தாலும் திருத்த முடியாது..

நண்பர் கும்மி அவர்களே

நண்பர் கருணாகரன் அவர்கள் சொன்ன உண்மை சம்பவத்தின் கதாநாயகன் யார் தெர்யுமா? நட்பே..?

பிரபல, உலகப்புகழ்பெற்ற,நமது முன்னால் குடியரசு தலைவர் மாண்புமிகு ஏ.பி.ஜே.அப்துல் கலாம்தான்..

உமர் | Umar said...

@atheists - அனானி

முக்காடு போட்டும் முகம் தெரிந்துவிட்டது. அடுத்தமுறை வேறு முக்காடு போட்டு வாருங்கள்.

உயிர் என்பது அல்லாஹ்வால் ஊதப்படுவது என்றும், அல்லாஹ்வால் கைப்பற்றப்படுவது என்றும் உங்கள் மதத்தில் இருக்கும்போது, நீங்கள் எப்படி உயிர் என்பது வேதிப்பொருட்களின் கலவை என்பதை ஒத்துக்கொள்வீர்கள்? அப்படி ஒத்துக்கொண்டால், உங்கள் மதத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டு விடுமே.

ஏற்கனவே, பல முறை உங்களுக்கு இந்த சுட்டிகளை அளித்திருந்தும் மீண்டும், மீண்டும் கேட்பதால் இன்னொரு முறை அளிக்கின்றேன்.


முதலில் ஒரு செய்தி

YouTube விடியோ

TED விடியோ

Science பத்திரிகையில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

இன்னுமொரு பத்திரிகைச் செய்தி

பிற விஞ்ஞானிகளின் பேட்டிகள்

நீங்கள் கூறுவதைப் பற்றியெல்லாம், அறிவியல் உலகம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அது அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இன்னும் புதியவற்றை கண்டுபிடிப்பதில்தான் முனைப்பாக இருக்கின்றது. அது குறித்த சுட்டியினைதான், உங்களுக்கான முந்தைய பின்னூட்டத்தில் அளித்திருந்தேன்.

வேதிப்பொருட்களின் கலவை என்பதற்கான சமீபத்திய ஆதாரம்தான் க்ரெய்க் வெண்டரின் ஆராய்ச்சி. இதை விடவும், நம் தினசரி நிகழ்வுகளிலிருந்தே பல விஷயங்களை நாம் அறிந்துகொள்ளலாம். நான் இங்கு கூறும் விஷயங்களை, நீங்கள் எந்த மருத்துவரிடமும் கேட்டு தெளிந்து கொள்ளலாம்.

ஒருவர் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கினால் அவதியுற்றால், அவரது உடலில் பொட்டாஸ்சியம் அளவு குறைந்து, இதயம் செயல்படுவது நின்று போய், மரணிக்க நேரிடலாம். எந்த அளவிற்கு பொட்டாஸ்சியம் குறைந்தால் மரணம் நேரிடும் என்று மருத்துவர்கள் அறிவார்கள்.

அதேபோல், ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கருக்களை சுமக்கும் சூழல் ஏற்பட்டால், மருத்துவர்கள் பொட்டாஸ்சியம் க்ளோரைட் ஊசியை நேரடியாக கருவின் இதயத்தில் செலுத்தி அந்த கருக்களை இறக்க வைப்பார்கள். (கரு உருவாகி 18 நாட்களில், இதயம் துடிக்க ஆரம்பித்துவிடும்; உங்கள் வேத புத்தகத்தில், மூன்று வாரங்களுக்கு வெறும் சதைப் பிண்டமாகவே கரு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாவம், அறிவியல் உங்களை சுத்தி சுத்தி அடிக்குது)

கருணைக்கொலை செய்யும்போதும் பொட்டாஸ்சியம் க்ளோரைட் ஊசியினை செலுத்தியே மரணம் ஏற்படுத்துவார்கள்.

ஒரு உயிரில் இருக்கும் வேதிப்பொருட்களின் அளவு கூடும்போதோ, குறையும் போதோ மரணம் சம்பவிக்கும். இந்த சிறிய விஷயத்தின் மூலமே, உயிர் என்பது வேதிப்பொருட்களின் கலவை என்பதை அறிந்துகொள்ள முடியும். மேலும் விபரம் வேண்டுமெனில், உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் கேளுங்கள். மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பொறுக்கிகளிடம் கேட்காதீர்கள்.

உமர் | Umar said...

@இர.கருணாகரன்

ஐன்ஸ்டீன் தொடங்கி அப்துல் கலாம் வரை நாயகர்களாக இடம்பெற்ற ஒரு கற்பனைக் கதையை நீங்கள் மீண்டும் அளித்துள்ளீர்கள்.

இது பற்றி கோவி.கண்ணன் முன்னரே தனது பதிவொன்றில் எழுதியுள்ளார்.


மேலும் கூகிளில் தேடினால், இதுபோன்ற இன்னும் ஆயிரம் கதைகள் கிடைக்கும். புரளிகளைப் பரப்பி, பொய்களை வைத்து கதை சமைத்துதான், கடவுள் என்னும் கற்பனை கதாபாத்திரத்தை நம்ப வைக்கும் நிலைக்கு நீங்கள் வந்துவிட்டதை பார்த்தால், ஐயோ பாவம் என்றுதான் தோன்றுகின்றது.

காஸ்மிக் கதிர்களை பற்றி கட்டுரையில் இருக்கும் விஷயத்தைப் பற்றி பேசினால் தொடர்வோம். நன்றி.

உமர் | Umar said...

@ஞானசூனியன்

நீங்கள் மேற்கோளிட்ட ""சித்தர் இலக்கியம்" நூலில், காஸ்மிக் கதிர்கள் பற்றியும் எப்படியெல்லாம் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை கூறுங்களேன். அனைவரும் பயன்பெறட்டும்.

இப்பதிவில்,
//கான்செப்ட் என்னன்னா, நாம எது வேணும்னு நினைக்கறமோ, அதையே நினைச்சுட்டு இருந்தா, அந்த எண்ண அலைகள் மேலே இருக்கக்கூடிய காஸ்மிக் கதிர்களில் பதிவாகி அதை நடக்க வைக்குமாம்.//
என்று சாதாரணமானவள் கூறியுள்ளார்.

சாதாரணமானவள் அவர்கள் கூறியிருக்கும் விஷயத்திற்கான ஆராய்ச்சிகள் எப்பொழுது, எங்கே நடைபெற்றன? அதன் முடிவுகள் என்ன? என்று கேட்டேன். அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேச வக்கில்லாமல், தூங்குவது, எழுப்புவது என்று உளறிக்கொண்டிருக்கிண்றீர்கள்.

என்ன விஷயம் என்றே தெரியாமல், சவுண்டு விடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

வால்பையன் said...

//எண்ண அலைகள் மேலே இருக்கக்கூடிய காஸ்மிக் கதிர்களில் பதிவாகி அதை நடக்க வைக்குமாம்.//

நான் பார்த்ததிலேயே இது தான் பெரிய மூட நம்பிக்கையா இருக்கு!

நான் ஒரு தொழில் தொடங்குறேன்னு வச்சுகோங்க, பார்பவர்களிடமெல்லாம் அதை பற்றியே பேசுவேன், எல்லாவற்றிலும் அதற்கு எதாவது உதவியா இருக்குமான்னு பார்ப்பேன்!, அது எண்ணம்.

இதுல காஸ்மிக் கதிர்கள் எங்கே வந்துச்சு!?

மங்குனி அமைச்சர் said...

குட் கோயிங்

Atheist said...

கும்மி,

டென்ஷன் ஆகி என்ன பேசறோம்னு தெரியாமையே பேசுறீங்க கும்மி. நீங்க கொடுத்த எல்லா ஆதாரத்தையும் பார்த்தேன் கும்மி. நேரம் வீணானது தான் மிச்சம். ஆனா ஒன்னு கூட நான் கேட்டது இல்ல. அது உங்களுக்கும் நல்லாவே தெரியும். பதில் சொல்லாம இருந்தா நம்ம கிட்ட ஆதாரம் இல்லேன்னு நினைச்சுகுவாங்கலோன்னு சும்மா ஏதாவது லிங்க கொடுக்குறீங்க.

உயிர் என்பது வெறும் வேதியல் பொருளால உருவானதுன்னு சொன்னீங்களே, அப்படி இது வரைக்கும் ஆய்வுக்கூடத்துல ஏதாவது செஞ்சி நிரூபிச்சுருக்காங்கலான்னு கேட்டேன். இதுவரைக்கும் ஒரு ஆதாரத்தையும் நீங்க கொடுக்கல.

குறைந்தபட்சம் ஒரு வாழும் 'செல்'ல தான் உயிர்னு சொல்லுவாங்க. இப்ப நீங்க என்ன செயுனும்ன "விஞ்ஞானிகள் செல்லுக்கு தேவையான வேதியல் பொருட்கள ஒண்ணா சேர்த்து உயிரை வர வச்சுட்டாங்க" ன்னு ஒரு ஆதரத்த காட்டுங்க. அத உட்டுட்டு செல்லுக்குள்ள இருக்குற genomeம உருவாக்கிட்டாங்க, அதுதான் நான் சொன்னதுன்னு காமெடி பண்ணீங்கன்னா, சாரி நீங்க பித்தாலாட்டகாரர்லேயே மிகப் பெரிய ஜாம்பவான்னு பட்டம் கொடுத்துட வேண்டியதுதான்.

ஒரே ஒரு ஆய்வு முடிவு, ஒரு வாழும் 'செல்'ல வேதியியல் பொருட்கள கொண்டு உருவாக்கிட்டங்கன்னு சொல்லுங்க, உயிர் என்பது வெறும் வேதியல் பொருட்களால மட்டும் ஆனதுதான் நான் ஒத்துக்குறேன்.

அதவுட்டுட்டு இப்படியே திசை திருப்புநீங்கன்னா, நீங்க எத்தன தடவ இங்க கமெண்ட் போடறீங்களோ அத்தன தடவ மூக்குடைபடுரீங்கன்னு அர்த்தம்.

grand design பத்தி வேற பேசுநீங்கள்ள?, சரி முதல்ல இத முடிச்சுடுவோம், அப்புறம் அதுக்கு போவோம்.

ஸ்டார்ட் கும்மி, ஒரே ஒரு ஆதாரம், வேதியியல் பொருட்கள சேர்த்து ஒரு வாழும் செல் (உயிர்) உருவாகிடுச்சுன்னு ஆதாரம் காட்டுங்க.....ப்ளீஸ் ப்ளீஸ்....

உமர் | Umar said...

@atheists - அனானி

விஞ்ஞானிகள் ஒத்துக்கிட்ட விஷயத்தை இவரு ஒத்துக்க மாட்டாராம். அப்படியே சொல்லிக்கிட்டு திரியுங்க.

ஏதாவது நல்ல மருத்துவரை பாருங்க. அவரு ஒரு மனநல மருத்துவராகவும் இருந்தா, இன்னும் நல்லது. உங்களுக்கு மருத்துவம் பார்த்த மாதிரியும் இருக்கும்; அப்படியே உடலில் வேதிப்பொருட்களின் பங்கு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவம் பார்த்துட்டு தெளிஞ்சி வாங்க. அப்புறம் பேசுவோம்.

Atheist said...

எல்லாரும் மறுபடியும் நல்லா பார்த்துக்குங்க....

**விஞ்ஞானிகள் ஒத்துக்கிட்ட விஷயத்தை***

ஒத்துக்கிட்டாங்க, ஆனா ஆதாரம் மட்டும் இல்ல. ஆதாரம் தான் இல்லையே, அப்புறம் எப்படி ஒத்துக்கிட்டாங்க...ஒ இதெல்லாம் ஒரு நம்பிக்கையா? நாத்திக நம்பிக்கை போல...

அப்ப ஆய்வுக்கூட ஆதரத்த காட்டவே மாட்டீங்க...

கும்மி டென்ஷன் ஆனாரே தவிர அவர் சொன்ன கருத்துக்கு, நான் கேட்டதுக்கு, ஆதாரத்த காட்டவே இல்ல. இது தான் இவரோட லட்சணம்.

நீங்க சும்மா இருக்குற வரைக்கும் தான் இவர் போன்ற போலி நாத்திகர்கள் அறிவியல பேசுறோம்னு எதையாவது சொல்லி காமெடி பண்ணுவாங்க. நீங்க அறிவியல நல்லா படிச்சி திரும்ப இவங்கள கேள்வி கேட்க ஆரம்பிச்சிங்கன்னா, இங்கே கும்மி டென்ஷன் ஆகி உளற ஆரம்பிச்சு காலி ஆன மாதிரி அவங்களும் காலி ஆகிடுவாங்க...

அதனால அறிவியல நல்லா படியுங்க, இவங்க முட்டாள்தனத்த தோலுறீங்க....வர்ட்டா...

நன்றி கும்மி...இங்கேயும் உங்கள பத்தி நல்லா தெரிஞ்சிருப்பாங்க. அப்புறம், நீங்க எந்தெந்த ப்ளோக்ல போய் நாத்திகம் சம்பந்தமா கமெண்ட் போடுறீங்கன்னு எனக்கு சொல்லிட்டா அங்கேயும் வந்து உங்க மூக்க உடைப்பேன். அதுக்கு எனக்கு ஒரு மெயில் அனுப்பிடுங்க expose.atheists@gmail.com

தாங்க்சு கும்மி....

Atheist said...

கும்மி மறுபடியும் மூக்குடைப்பட்டது எப்படி? - ஒரு அலசல்

முதலில் சொன்னார்
***உயிர் என்பது வேதிப்பொருட்களின் கலவைதான் என்பது பல ஆராய்ச்ச்களின் மூலம் நிறுவப்பட்டுள்ளது***

இங்கே கவனிக்க வேண்டிய சொல்கள், "பல ஆராய்ச்சிகள்" மற்றும் "நிரூவப்பட்டுள்ளது".

அவர் சொல்லிய இந்த கருத்துக்கு ஆதாரம் கேட்கபட்டது. ஆனால் கடைசிவரை கொடுக்கவே இல்லை....

கடைசியில் அடித்தார் பாருங்கள் பல்டி

***விஞ்ஞானிகள் ஒத்துக்கிட்ட விஷயத்தை***

ஒத்துக்கிட்ட விசயமாம்.

முன்னர் "பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூவப்பட்டுள்ளது" என்றார், கடைசியாக "ஒத்துக்கிட்ட விஷயம்" என்று சொல்கிறார்.

பைனலா அவர் சொன்னதுக்கு ஆதாரம்னு ஒண்ணுமில்ல...

இப்படி டகால்டி வேள காட்றதுனாலதான் இவர ஜாலியா எடுத்துக்க சொன்னேன்....நான் சொன்னத மறுக்கா நிரூபிச்ச கும்மிக்கு இன்னொரு முற தாங்க்ஸ்...

சாதாரணமானவள் said...

சண்டை போடாதீங்க ஏட்டையா...

உமர் | Umar said...

அறிவியல் கண்டுபிடிப்பினை ஆதாரம் அல்ல என்னும் அதி அற்புதமான அறிவிப்பை வெளியிட்ட மிஸ்டர் முக்காடு அவர்களுக்கு, உடனடியாக உட்டாலக்கடி நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. இங்கே சென்று பரிசினை பெற்றுக்கொள்ளலாம்.

.

Radhakrishnan said...

நீங்க தேர்வாகி விட்டீர்கள். ஒரு வாசகம் அதுவும் பொருந்தாத வாசகம். ஆனால் எப்படியெல்லாம் மனிதர்களை விவாதம் செய்ய வைத்துவிட்டது. அதிலும் கருணாகரன் அவர்கள் சொன்ன அப்துல் கலாம் நம்பிக்கை கதை எத்தனை பெரிய விஷயத்தை தொலைக்க வழி செய்துவிட்டது. மூளையை இப்பொழுது படம் பிடித்து காட்டி விடலாம். ஆனால் கடவுளை எவராலும் படம் பிடிக்க இயலாது. ;)

மயாதி said...

நண்பர் கும்மி கூறியுள்ள விடயங்களுக்கு சில விளக்கங்கள்....

கும்மி அவர்களே நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் genome உருவாக்கப்பட்டுள்ளது என்றுதானே உள்ளது தவிர உயிர் உருவாக்கி உள்ளது என்று எங்குமே இல்லை.நீங்கள் genome என்பதும் உயிர் என்பதும் ஒன்று என்று எண்ணிக் கொண்டுளீர்கள் என்று நினைக்கிறேன்.

genome என்பது குரோமசொம்களின் அடிப்படை அலகு. அந்த .. எப்போதோ இறந்தவரின் எலும்பிலே ஏன் நீங்கள் கழிக்கும் சிறுநீரிலே கூட இருக்கிறது.
இந்த genome உருவாக்கப்பட்டு மருத்துவ ரீதியாகக் கூடப் பயன்படுத்தப்படலாம்.அதாவதுgene எனப்படும் அலகிலே ஏற்படும் பாதிப்புக்கள் நமக்கு சில குறைபாடுகளை(நோய்களை) ஏற்படுத்தலாம். அந்த நேரத்தில் செயற்கையான genome மூலம் அது சரி செய்யப்படுவதற்கான முயற்சி நடை பெறுகிறது.

இதில் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் genome மூலம் உயிர் உள்ள ஒருவரில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காணப் படுவதற்கான முயற்சிதான் அதை விடுத்து இறந்து போன ஒருவருக்கு அந்த genome எந்தவகையிலும் உயிர் கொடுக்காது.


அடுத்து பொற்றாசியம் பற்றிய உங்கள் கருத்து....

பொற்றாசியம் குறைவதால் ஒருவர் இறக்கலாம் அதனால் பொற்றாசியம் போன்ற வேதியல் கலவைதான் உயிர் என்று சொல்லுகிறீர்கள்.
மீண்டும் அறிவியல் பற்றி எந்த அறிவும் இல்லாமல் கருத்துக்களை முன் வைத்து உள்ளீர்கள்.

நமது உடலும் ஒரு இயந்திரம் போலத்தான். ஒரு இயந்திரம் இயங்குவதற்கு அதற்கு மின் , காந்த, வெப்ப, எரிபொருள் ... எனப் பல மூலப் பொருட்கள் மூலம் சக்தி வழங்கப்பட வேண்டும். மேலும் எண்ணெய்(௦il), கிரீஸ் போன்றவை மூலம் அந்த இயந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இயந்திரம் பழுதடைந்து விடும்.
நமது உடலுக்கும் இவ்வாறான சக்திகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தேவை. அவை உணவுப் பொருட்கள் மூலம் வேதியல் பதார்த்தங்களாக உள்ளேடுக்கப் படுகின்றன.ஆனாலும் இயந்திரங்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்துவது உயிர்.

நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு பொற்றாசியம் தேவை. அது குறைவதால் அவற்றின் செயற்பாடு குறைந்து இதயத் துடிப்பு நிற்கலாம்.
அவ்வாறு நிகழும் முன் ஒருவருக்கு பொற்றாசியம் கொடுக்கப்பட்டால் அந்தப் பாதிப்பு சரி செய்யப் படலாம்.அதாவது உயிருடன் உள்ள ஒருவருக்கே பொற்றாசியம் மருந்து.
மாறாக பொற்றாசியம் குறைவதால் இறந்து போன ஒருவருக்கு நீங்கள் எத்தனை கிலோ பொற்றாசியம் கொடுத்தாலும் உயிர் வந்துவிடாது.

கும்மி! இது வெறுமனே நான் அறிந்த தகவல்களைச் சொல்லி இருக்கிறேன்.இதற்கு ஆதாரமாக என்னிடம் புத்தகங்கள் இருக்கின்றன(சர்வதேச ரீதியாக ஆராய்ச்சிகள் மூலம் அங்கிகரிக்கப் பட்ட புத்தகங்கள்) .விரும்பினால் தருகிறேன் ஆனால் எல்லாமே மருத்துவக் கலைச் சொற்களைக் கோடவை உங்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியாது.மிகவும் சிக்கலான விடயத்தி எளிமைப் படுத்திக் கூறி உள்ளேன் விளக்கம் குறைவாக இருந்தால் கேளுங்கள் சொல்லுகிறேன்.

(தோழி சாதாரணமானவள் இதை நீங்கள் விரும்பினால் உங்கள் தளத்திலே இடுகையாகவும் போட முடியும் )

thaniyan said...

கும்மி கம்மியாச்சு...
ஒரு தேக்கரண்டி பொட்டாசியம், இரண்டு தேக்கரண்டி சோடியம், ஒரு தேக்கரண்டி மகனீசியம், இப்படி பல கலவைகள் மூலம் உயிரை உருவாக்கி பிரமிட்டுகளில் இருக்கும் மம்மிகளுக்கும் , இறந்து போனவர்களுக்கும் கொடுக்கும் சேவையை நமது கும்மி எப்போது தொடங்குவார்?

அண்ணே உங்கள் வேதியல் கலவை மூலம் எனக்கும் ஒரு உயிர் செய்து தாருங்கள்.நான் இறந்த பின் பாவிப்பதற்காக..

சுபத்ரா said...

மயாதி அவர்களின் விளக்கம் அருமை.

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

arul said...

nice explanation