திருக்குறள் ஒண்ணும் புரிஞ்சுக்க கஷ்டமான மொழி நடையில நம்ம தலைவர் திருவள்ளுவர் எழுதல. ரொம்ப ஈசியாதான் எழுதி இருக்கிறார். கொஞ்சம் முயற்சி செஞ்சு ஆர்வத்துடன் கவனிச்சா, ஒரே தடவையில அர்த்தம் பதிஞ்சு போகுது. இந்த தளத்துல நிறைய பெரியவர்கள் இதுவரை கொடுத்துள்ள அளவுக்கு திருக்குறள் விளக்கம் எதிர்பார்க்காதீங்க. ஒரு சாதாரண ஆளா, சாதாரண முறையில என் சிற்றறிவு புரிஞ்சுகிட்ட விதத்தில விளக்கம் குடுக்கறேன். முடிஞ்சவரைக்கும் விரிவா இல்லாம, சுருக்கமா தர முயற்சிக்கறேன். உங்களுக்கும் எளிதா புரியும்.
பகவன் முதற்றே உலகு
அதாவது: கடவுள் தான் எல்லாத்துக்கும் அடிப்படை
2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
அதாவது: கடவுளை கும்பிடாட்டி படிச்சும் வேஸ்ட்டு
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
அதாவது: கடவுளை நினைச்சுட்டே இருந்தா சாகாம ரொம்ப நாள் என்ஜாய் பண்ணலாம்.
4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
அதாவது: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளை சேர்ந்தா No Problem at all.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
அதாவது: கடவுளை உண்மையா விரும்பினா பாவம் புண்ணியம் எல்லாம் பிரச்சனை இல்ல
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
அதாவது: கண்டதையும் பண்ணாம கண்டிப்போட இருந்தா 'கன்' மாதிரி இருக்கலாம்.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அதாவது: கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான். ஆனா கைவிட்ருவான்
9. கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
தாளை வணங்காத் தலை.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவன் அடிசேரா தார்.
11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
அதாவது: மழை தான் அமிர்தம்
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
அதாவது: மழை தான் உணவு
13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள் நின்று உடற்றும் பசி
அதாவது: மழை மட்டும் இல்லாட்டி பசி நம்மள வாட்டிடும்
14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்அதாவது: மழை பெய்யாதுனா உழவர் உழ மாட்டார்
15. கேடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழைஅதாவது: கெடுப்பது - கொடுப்பது ரெண்டுமே மழை தான்.
16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.அதாவது: மழை இல்லாட்டி ஓரறிவுள்ள புல்கூட முளைக்காது.
17.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
அதாவது: மழை இல்லாட்டி கடலும் வத்திடும்
18.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
அதாவது: மழை இல்லாட்டி தேவர்களுக்கு பூஜையும் கிடையாது, ஒண்ணும் கிடையாது...
19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
அதாவது: மழை இல்லாட்டி மத்தவங்களுக்கான தானமும், தனக்கான தவமும் செய்ய முடியாது.
20. நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.அதாவது: தண்ணி இல்லாட்டி எப்படி உலகம் இல்லையோ அதே போல மழை இல்லாட்டி யாரும் ஒழுக்கமா இருக்க முடியாது.
21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. அதாவது: பற்றில்லாதவங்கள பெருமையா சொல்றதே நூல்களுக்கு துணிவு.
22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
அதாவது: பற்றில்லாதவங்கள பெருமையோட எண்ணிக்கையும் இதுவரை பிறந்து இறந்தவங்க எண்ணிக்கையும் சமம்
அதாவது: ஆராய்ந்து தெளிந்து அறத்தை மேற்கொண்டால் பெருமை.
23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகுஅதாவது: ஆராய்ந்து தெளிந்து அறத்தை மேற்கொண்டால் பெருமை.
24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
அதாவது: ஐம்புலன்களை அறிவால அடக்கினவன் வீடுங்கற உலகத்துக்கு விதை போன்றவன்
(Sorry Friends. இந்த குறளை என் ஸ்டைல்ல சுருக்கமா விளக்க முடியல. )
25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
அதாவது: ஐம்புலன்களை அடக்கினவனுக்கு உதாரணம் இந்திரன் தான்
அதாவது: முடியாததை முடிச்சு காட்டுறவன் தான் பிஸ்தா
27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
அதாவது: ஐந்து புலன்களின் வேலையின் வகையை அறிந்தவனிடம் உலகம் உள்ளது.
28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
அதாவது: ஒருத்தரோட வாக்கின் பெருமைய அவங்க சொல்லிட்டு போன வார்த்தைகளே காட்டிடும்
29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
அதாவது: நல்ல குணத்தை எல்லாம் மலை மாதிரி வெச்சிருக்கற நல்லவன் ஒரு செகண்ட் கோபப்பட்டாலும் கோபப்படுத்தினவன் முடிஞ்சான்
30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
அதாவது: எல்லோர்கிட்டயும் அருளோட இருக்கறவன்தான் அந்தணன் (ஐயர் as well as Higher)
அதாவது: சிறப்பும் செல்வமும் கிடைக்க அறவழியே நல்லது.
32.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
அதாவது: அறம் தான் top. அதை மறந்தா flop
33.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா எல்லாஞ் செயல்அதாவது: விடாமல் அறச்செயலை செய்யணும்
34.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
அதாவது: அப்பழுக்கில்லாத அறத்தை பின்பற்றுபவனே அறன். மத்ததெல்லாம் வெறும் ஆரவாரம்
35.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
அதாவது: அறம்னா வேற ஒண்ணும் இல்ல, பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இது நாலும் இல்லாம இருக்கறது தான்.
36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
அதாவது: வயசுப்பசங்களா இருக்கறப்பவே அற வழில போங்க. வயசான காலத்துல பார்த்துக்கலாம்னு விட்ராதீங்க.
37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிபை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
அதாவது: பல்லக்குல போறவனுக்கும், பல்லக்கு தூக்கறவனுக்கும் அறத்தின் பயனை விளக்காதீங்க. ஏன்னா, அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறதுதான் அறம்
38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
அதாவது: தினமும் செய்யும் அறம், அடுத்தடுத்த பிறவி வருவதை அடைக்கும் கல்லாகும்
39. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இலஅதாவது: அறவழியில வர்றது தான் ஒரிஜினல் புகழ். ஒரிஜினல் இன்பம்.
இந்திரனே சாலுங் கரி.
அதாவது: ஐம்புலன்களை அடக்கினவனுக்கு உதாரணம் இந்திரன் தான்
26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.அதாவது: முடியாததை முடிச்சு காட்டுறவன் தான் பிஸ்தா
வகைதெரிவான் கட்டே உலகு.
அதாவது: ஐந்து புலன்களின் வேலையின் வகையை அறிந்தவனிடம் உலகம் உள்ளது.
மறைமொழி காட்டி விடும்.
அதாவது: ஒருத்தரோட வாக்கின் பெருமைய அவங்க சொல்லிட்டு போன வார்த்தைகளே காட்டிடும்
கணமேயுங் காத்தல் அரிது.
அதாவது: நல்ல குணத்தை எல்லாம் மலை மாதிரி வெச்சிருக்கற நல்லவன் ஒரு செகண்ட் கோபப்பட்டாலும் கோபப்படுத்தினவன் முடிஞ்சான்
30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
அதாவது: எல்லோர்கிட்டயும் அருளோட இருக்கறவன்தான் அந்தணன் (ஐயர் as well as Higher)
31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. அதாவது: சிறப்பும் செல்வமும் கிடைக்க அறவழியே நல்லது.
32.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
அதாவது: அறம் தான் top. அதை மறந்தா flop
33.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா எல்லாஞ் செயல்அதாவது: விடாமல் அறச்செயலை செய்யணும்
34.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
அதாவது: அப்பழுக்கில்லாத அறத்தை பின்பற்றுபவனே அறன். மத்ததெல்லாம் வெறும் ஆரவாரம்
35.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
அதாவது: அறம்னா வேற ஒண்ணும் இல்ல, பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இது நாலும் இல்லாம இருக்கறது தான்.
பொன்றுங்கால் பொன்றாத் துணை
அதாவது: வயசுப்பசங்களா இருக்கறப்பவே அற வழில போங்க. வயசான காலத்துல பார்த்துக்கலாம்னு விட்ராதீங்க.
37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிபை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
அதாவது: பல்லக்குல போறவனுக்கும், பல்லக்கு தூக்கறவனுக்கும் அறத்தின் பயனை விளக்காதீங்க. ஏன்னா, அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறதுதான் அறம்
38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
அதாவது: தினமும் செய்யும் அறம், அடுத்தடுத்த பிறவி வருவதை அடைக்கும் கல்லாகும்
புறத்த புகழும் இலஅதாவது: அறவழியில வர்றது தான் ஒரிஜினல் புகழ். ஒரிஜினல் இன்பம்.
உயற்பால தோறும் பழி
41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
அதாவது: குடும்பஸ்தன்னு யார சொல்வாங்க? அவன மையமா வெச்சு வாழும் பெற்றோர், மனைவி, குழந்தைக்கு துணையா இருக்கறவனை தான்.
43.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
அதாவது: முன்னோர்களையும், தெய்வத்தையும் , விருந்தாளிங்களையும், சொந்தக்காரங்களையும் கூடவே தன்னை தானும் அறநெறி தவறாமல் போற்றுவது இல்லறத்தானின் சிறந்த கடமை.
44.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்
அதாவது:சமுதாயத்துக்கு அஞ்சி நியாயமா வாழ்ந்தா குடும்ப வாழ்வில குறைவு இருக்காது.45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அதாவது: குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.
(இந்த போஸ்ட் வாரத்துக்கு ஒரு முறை குறளுக்கு விளக்கம் எழுதும்போது update ஆகிக்கிட்டே இருக்கும். )
.
9 comments:
வித்யாசமான விளக்கங்கள்
விளக்கமெல்லாமே ரொம்ப நல்லாயிருக்குங்க!
கடவுளை நினைச்சுட்டே இருந்தா ரொம்ப நாள் என்ஜாய் பண்ணலாம்.//////
ஹி ஹி ................
உங்கள் ஸ்டைலும் நல்லா தாங்க இருக்கு
இருங்க இருங்க வள்ளுவரை கூட்டிட்டு வந்து கேஸ் போடுறேன்
அட! நல்லாத்தான் இருக்கு
தொடருங்கள்.......
பகிர்வுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
செம விளக்கம்.. :)))) Please Continue.
இது போதுமே எதுக்கு வழ வழா கொழ கொழா
நல்ல விளக்கம் .ரொம்ப அருமை .பட்டவோன்ன பத்திக்கிற பாணி . பொருளையும் அதோட சின்னதா விளக்கி இருந்தால் தேசிய அவோர்ட தூக்கி தரலாம்.யெஸ் கொனுட்டையா !! மாரீசன் .
Post a Comment