Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, December 6, 2010

ஏற்கனவே அழகா இருக்கறவங்க இதை படிக்க வேண்டாம்.

                     எண்ணை சருமம் கொண்டவர்களுக்கு எப்போதும் முகத்தில் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை அதிகம். அதற்கு காரணம் அழுக்குகளும் இறந்த செல்களும். நார்மல் ஸ்கின் உள்ள முகத்தில் உள்ள அழுக்குகளை விட ஆயில் ஸ்கின் உள்ள முகங்கள் விரைவில் அழுக்கடையும். எனவே தான் முகப்பரு, கரும்புள்ளிகள், ப்ளாக்ஹெட்ஸ், எண்ணை வடியும் முகம் என பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க சில டிப்ஸ்.

First Step :
                       எந்த ஒரு அழுக்கையும் முகத்தில் இருந்து எடுப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது நம் முகத்தில் உள்ள நுண்ணிய துளைகளை OPEN செய்வது. இதற்கு நாம் ஆவி பிடிக்க வேண்டும் (உடனே சுடுகாட்டுக்கு சுற்றுலா செல்லாதீர்கள். நான் சொல்வது நீராவி). கொதிக்க வைத்த நீரில் முகம், கழுத்து, மூக்குப்பகுதி ஆகியவற்றில் நன்கு படுமாறு ஆவி பிடியுங்கள். நன்கு வியர்த்தும், ஆவி முகத்தில் பட்டும் வெளிவரும் நீரை நல்ல காட்டன் துணியால் அழுத்தி துடைத்துக்கொள்ளுங்கள்.

Second Step:
                       ஒரு சேப்டி பின்னை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின் பக்கம் உள்ள வட்டத்தின் நடுவில் black head இருக்குமாறு வைத்து, அதை கொஞ்சம் இலேசாக அழுத்தி பலமுறை வெளிப்பக்கமாக தள்ளவும். ஒவ்வொருமுறை தள்ளும்போதும், blackhead இல் இருந்து  கொஞ்சம் கொஞ்சமாக முடி போல் அழுக்கு வெளியே வருவதை காண்பீர்கள். இப்படி ஒவ்வொரு அல்லது ஒரே பக்கமாக வெளிவரும் தன்மையுள்ள blackhead களையும் அழுத்தி அழுத்தி வெளியேற்றுங்கள்.  (ஜாக்கிரதை. மிக அழுத்தமாக அழுத்தி எடுத்தால், முகத்துளை பெரிதாகிவிடும்)
                       ப்யூட்டி பார்லர்களில் இதையே தான் கொஞ்சம் வேறு விதமான (மேலே உள்ள படத்தில் உள்ள) ஊசியை வைத்து செய்கிறார்கள். வெளியில் வர அடம் பிடிக்கும் அழுக்கை நுனியில் உள்ள ஊசியால் குத்தி பின் அழுத்தி வெளியேற்றுகிறார்கள். இதே பொருளை வைத்து இதே வேலை தான் முகப்பருவுக்கும் செய்கிறார்கள். ஆனால் முகப்பருவை பொறுத்தவரை அது அதிகமாகி விடும் அல்லது வீங்கிவிடும்  என்று நான்  அஞ்சுவதால், பர்சனலாக  நான் அதை சப்போர்ட் செய்யவில்லை.  (பயப்படாதவர்கள் செய்து பார்க்கலாம். உங்கள் இஷ்டம்)

Third Step:
               பின் மூல்தானி மிட்டி போட்டுக்கொள்ளுங்கள். அது எண்ணைபசையை உறிஞ்சிக்கொள்ளும். (இது மூல்தான் என்னுமிடத்தில் உள்ள களிமண். கடைகளில்  கிடைக்கும்)

Last Step: 
                  இப்படி முகத்துளைகளை விரிவடையச்செய்து, அழுக்குகளை வெளியேற்றிய பின், அந்த துளையை மூட வேண்டும். இல்லாவிட்டால் அது இன்னும் அதிக அளவில் அழுக்குகளை சேகரித்துக்கொள்ளும். எனவே விரிவடைய வெந்நீர் உபயோகித்தது போல, முகத்துளைகளை மூட ஐஸ் கட்டி அல்லது ஐஸ் வாட்டர் உபயோகித்து முகத்தை கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை  செய்யலாம்.

    
               இவை தவிர, சுத்தமான தேனை தினமும் முகத்தில் தடவி வந்தால்  நல்ல பலனை அடையலாம். வேப்பங்கொளுந்தை அரைத்து தடவினாலும் அது நல்ல ஆன்டிசெப்டிக்காக செயல்படுகிறது. சுத்தமான நீரைஅதிகமாக குடித்து வந்தால் முக அழகு சம்பந்தமான பிரச்சனைகள் மட்டுமல்ல, உடல் ரீதியான பிரச்சனைகளும் பெருமளவில் சரியாகிறது. அனுபவத்தில் அனைவருக்கும் உபயோகித்து பார்த்த பின்பே இந்த பதிவை இடுகிறேன். ஸோ தாராளமாக ட்ரை பண்ணலாம்.

ஏற்கனவே அழகா இருக்கறவங்கனு குறிப்பிட்டதால் அநேகமாக அதிகமாக பின்னூட்டம் வராது னு நினைக்கறேன். ;) இருப்பினும்  இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

14 comments:

எல் கே said...

ரைட்டு .அழகு என்பதை விட, இது நமது முகத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய கவனம் என்று சொல்லலாமா ?? அழகு என்பதின் அளவுகோல் மாறுபடும்

Arun Prasath said...

சே சே, பின்னூட்டம் போடாம எல்லாம் போமாட்டோம், ஏன்னா, நாங்க அழகு இல்ல, பேரழகு.... (BBC ல கூட வந்துச்சு )

அருண் பிரசாத் said...

அழகா இருக்கவுங்களுக்கு இல்லையா? சரி அப்போ நான் எஸ்கேப்....

//கொதிக்க வைத்த நீரில் முகம், கழுத்து, மூக்குப்பகுதி ஆகியவற்றில் நன்கு படுமாறு //
முகம் வெந்துடாது?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் அழகா தான் இருப்பேன் .. நான் படிக்கலாமா..

Anonymous said...

அழகா இருக்கவுங்களுக்கு இல்லையா? அப்போ எனக்கு ...

ஹரிஸ் Harish said...

ஏற்கனவே அழகா இருக்கறவங்க இதை படிக்க வேண்டாம்.//அப்ப நான் கண்டிப்பா படிக்கணுமா..படிச்சிட்டு வர்றேன்,,

ஹரிஸ் Harish said...

நல்ல பயனுள்ள தகவல்..நாங்களும் அழகா மாறுவோமுல...

Anonymous said...

இந்தக் குறிப்புகள் ஆண்களுக்கா? இல்ல பெண்களுக்கா?
//சுத்தமான தேனை தினமும் முகத்தில் தடவி வந்தால் //
இந்த மாதிரி ஒரு குறிப்பு இதுக்கு முன்னாடி கேள்விப் பட்டதில்ல தோழி..

சாதாரணமானவள் said...

Well Said LK

//நாங்க அழகு இல்ல, பேரழகு.... (BBC ல கூட வந்துச்சு )//
நானும் பார்த்தேன் அருண். ஆமா, பேரழகுனா பேரழகன் சூர்யா மாதிரியா?

//முகம் வெந்துடாது?//
சாரி சாரி. கொதிக்க வைத்த நீரின் நீராவி படுமாறு'ன்னு மாத்தி படிச்சுக்கங்க.

@வெறும்பய, கல்பனா, ஹரிஸ்
அழகுக்கு எதுக்குங்க அழகு!!!!

@ பாலாஜி சரவணன்
இந்த குறிப்புகள் எல்லோருக்கும் தான்

மாணவன் said...

பயனுள்ள அருமையான குறிப்புகள்

பகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பணி

vista consultants said...

i have "mangu" in my face how to cure it.my skin is oily in nature

vista consultants said...

Hi

சாதாரணமானவள் said...

@stoxtrends
am sorry. I don't know much about it.
pls view this page

http://tamilkudumbam.com/-mainmenu-183/---mainmenu-185/2185.html?task=view

and also use sunscreen lotion.

vista consultants said...

thank you