Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, December 26, 2010

உங்கள் கையெழுத்தும் குணாதிசயமும்

நம்ம கையெழுத்து எப்படி இருக்கோ அப்படி தான் தலையெழுத்தும்னு  பொதுவா சொல்லுவாங்க. ஆனா, நம்ம கையெழுத்தை வச்சு நம்ம குணத்தை கண்டுபிடிக்கவும் முடியும். அதுக்கான சில குறிப்புகள் தான் இந்த பதிவு.

பெரிய எழுத்தாக எழுதுவோர்: 
 பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். 

சிறிய எழுத்தாக எழுதுவோர்: 
 எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்கள். 

வலப்பக்கம் சாய்த்து  எழுதுவோர்: 
எதிர்கால வாழ்வில் இன்பமாய் இருப்பார்கள். 

இடப்பக்கம் சாய்த்து  எழுதுவோர்:       
பயந்த சுபாவம் உள்ளவர்கள் , நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துவார்கள். 
 
எழுத்துக்களை நீட்டி எழுதுவோர்: 
எதிலும் பற்றற்று இருப்பார்கள்.

எழுத்துக்களை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுவோர்: 
எந்த காரியத்திலும் அசாதாரண துணிச்சலை காட்டுவார்கள்.


கிறுக்கலாக எழுதுவோர்: 
குழப்ப மனம் படைத்தவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துவர்.


கட்டமாக எழுதுவோர்: 
ஆடம்பரப்பிரியர்கள். சோம்பேறிகள்.

வட்டமாக முடிப்பவர்கள்: 
பயந்த சுபாவமுள்ள திறமைசாலிகள். 

நான் பரிசோதித்து  பார்த்த வரை பெரும்பாலும் உண்மையாகவே உள்ளது. நீங்களும் check பண்ணிக்கோங்க. (பத்து மொக்க பதிவு போட்டா ஒரு உபயோகமான பதிவும் போடணும்னு போட்டது. பாத்து சொல்லுங்க. இதாவது உபயோகமான்னு)
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

12 comments:

தினேஷ்குமார் said...

தகவல் நல்லாருக்கே ..........

மாணவன் said...

//சிறிய எழுத்தாக எழுதுவோர்: எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்கள். //ஆம் இது நான்....ஹிஹிஹி

மாணவன் said...

//(பத்து மொக்க பதிவு போட்டா ஒரு உபயோகமான பதிவும் போடணும்னு போட்டது. பாத்து சொல்லுங்க. இதாவது உபயோகமான்னு)//
மிக மிக பயனுள்ளது உபயோகமானதுதொடரட்டும் உங்கள் பொன்னான பணி....எப்படி நம்ம டெம்ளேட் கமெண்ட் ஹிஹி

மாணவன் said...

//நல்லா இருக்கா...பகிர்ந்த துன்பம் பாதியாகிறதுபகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறதுஇதுவும் நம்ம சரக்கு//

நல்லாருக்குங்க.....பகிர்வுக்கு நன்றி

Vaitheki said...

உண்மையா இருக்கு நல்லது. வாழ்த்துக்கள் !

Anonymous said...

அட !! சூப்பர் நல்ல பகிர்வு

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. மிக்க நன்றி.

Jaya Raman said...

nice .good

http://usetamil.net

சாதாரணமானவள் said...

தினேஷ், மாணவன், பாரதி வைதேகி, கல்பனா, வெங்கட், ஜெயா அனைவருக்கும் நன்றி.
டெம்ப்ளெட்டை மாத்த மாட்டிங்களா மாணவன்?

தமிழ்த்தோட்டம் said...

அருமையான தகவல்

goma said...

என் கையெழுத்து என்னம்மா சொல்லுது?

natchiar kothai said...

எளிமையாகவும் கச்சிதமாகவும் உள்ளது.பகிர்ந்தமைக்கு நன்றி.