Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, December 28, 2010

தமிழ்மண விருதில் ஒரு சுயேட்சைக்கு டெபாசிட் கிடைச்சுடுச்சு

'தமிழ்மணத்தில் பதிவுகள் தேர்ந்தெடுத்து விருது தரப்போறோம். உங்களுக்கு எந்த பதிவை சேர்க்க விருப்பமோ சேருங்க' னு ஒரு மெயில் வந்துச்சு. நானும் எதார்த்தமா அவங்க குடுத்த டைம் ல போஸ்ட் பண்ணின  என்னுடைய மூணு பதிவ சேர்த்தேன்.

1 . ஆத்திகத்துக்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவு (சமூக விமர்சனம்)

2 . நிஜமாகவே கடவுள் இந்த உருவத்தில் தான் இருப்பாரா (சுய தேடல்)

3 . நண்பனின் காதலி சந்தோஷுக்கு என்ன முறை (நகைச்சுவை)

அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது இது பெரிய பெரிய ஆளுங்க போட்டி போடற இடம். நாம வேடிக்கை பாக்கத்தான் லாயக்குன்னு. அதனால நான் போட்டிக்கு பேர் குடுத்தத கமுக்கமாவே வச்சுகிட்டேன். யார்கிட்டயும்  ஓட்டும் கேக்கல. நான் பாட்டுக்கு யாருடையது பிடிச்சிருந்ததோ அவங்களுக்கு போட்டுட்டு வந்துட்டேன். இப்ப ஒரு பதிவரின் 'நன்றி' பதிவை படிச்சு பாத்துட்டு இரண்டாம் கட்ட ஓட்டுக்கு அவரோடது வந்திருக்குன்னு அவருக்கு ஓட்டு போட போய் பாத்தா ..................
...........
..............
.......................
என்னுடைய முதல் ரெண்டு பதிவும் அங்க 'present madam' சொல்லி உக்காந்திருக்கு... எனக்கு சர்ப்ரைசே தாங்கல... அதனால நானும் எனக்கு சாரி என் பதிவுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நன்றி சொல்ல இந்த பதிவ போட்டே ஆகணும் இல்லையா... அதனால விளம்பரப்படுத்தாமலே எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...

இரண்டாம் கட்டத்துக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நண்பன், ஊர்காரன், போன்ற எல்லா எல்லைகளையும் தவிர்த்து தகுதி இருக்கற பதிவுகளுக்கு ஓட்டு போடலாம் வாங்க.

சந்தேகம்: இது தமிழ்மணம் சம்பந்தப்பட்ட பதிவாச்சே. இதை மற்றவைகளில் இணைக்கலாமா?

இதற்கு பின்னூட்டம் இடும் அனைவருக்கும் நன்றிகள்.

13 comments:

மாணவன் said...

வாழ்த்துக்கள்
தமிழ்மணத்தில் தொடர்ந்து வெற்றிப்பெற மீண்டும் எனது வாழ்த்துக்கள்

மாணவன் said...

.//சந்தேகம்: இது தமிழ்மணம் சம்பந்தப்பட்ட பதிவாச்சே. இதை மற்றவைகளில் இணைக்கலாமா?//

இணைக்கலாம்... நான் ஒட்டு போட்டுவிட்டேன்

சென்னை பித்தன் said...

வாழ்த்துகள்!

சென்னை பித்தன் said...

வாழ்த்துகள்!

மாணவன் said...

//நல்லா இருக்கா...
பகிர்ந்த துன்பம் பாதியாகிறது
பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது//

தினமும் ஒரு தகவலா இது நல்லாருக்கே...

தொடருங்கள்........

R. Gopi said...

:))))

தினேஷ்குமார் said...

வாழ்த்துக்கள் சகோ....

உண்மைத்தமிழன் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நண்பரே..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் சகோ....

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

தமிழ்மணத்தில் வெற்றிப்பெற எனது வாழ்த்துக்கள்

kavitha said...

வாழ்த்துக்கள் தோழி, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது, உண்மையைச் சொன்னால் எனக்கே கிடைத்தது போல் இருக்கிறது (இன்னொரு பக்கம் இருக்கு அத சொல்ல மாட்டேன்)

சாதாரணமானவள் said...

மாணவன், சென்னை பித்தன், கோபி, வெங்கட், உண்மைத்தமிழன், வெறும்பய, குமார், கவி அனைவருக்கும் நன்றிகள் . உண்மைத்தமிழன் அவர்களே, நண்பருக்கு பெண்பால் தோழி