Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, March 17, 2011

நான் திருச்சி போனேனே... பார்ட் 1

எல்லோரும் வியப்புடன் ரசிக்கும் விஷயங்கள் மூன்று
1 . வானம்
2 . கடல்
3 . ரயில்

    மூன்றாவதை ரசித்து அனுபவிக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. பொதுவாக நான் ஒரு Home Bird. வீட்டை விட்டு வெளியே போறதுனா நரக வேதனை. ஆனா நேற்று  அம்மாவின் நெடுநாளைய விருப்பத்தை ஈடேற்ற அம்மாவும், நானும் ஸ்ரீரங்கம் போனோம். பொதுவா நான் பெருமாள் கோவிலுக்கு போகும்போதெல்லாம் எனக்கு தேவையான சவுகரியங்களை அவரே பார்த்துப்பார். எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி ஒரு understanding. இந்த முறை எப்படி இருக்கும்னு காத்துகிட்டு இருந்தேன். 

ரயிலில் ladies compartment தனியாக இருக்கும் என்பதே ஒரு வருடத்திற்கு முந்தைய என் முதல் திருப்பதி பயணத்தின் போது தான் அறிந்துகொண்டேன். அதற்கு அடுத்த பயணமாக இது அமைந்ததால் விழி விரிய ரயிலை பார்த்துக்கொண்டே ladies compartment சென்றால் செம கூட்டம். அம்மா, 'வா வேற கம்பார்ட்மென்ட் போலாம்' என்று இறங்கி விட்டார். நான் அம்மாவை சமாதான படுத்த இறங்கி ரெண்டு நிமிஷம் கூட ஆகல, உள்ளே இருந்த ஒரு சின்ன பையன் கதவை தாழ் போட்டுட்டான். வெளில வேற announcement . ட்ரெயின் கிளம்ப போகுதுன்னு. அவன திறக்க சொன்னா, அவனால மறுபடி திறக்க முடியாதபடி டைட்டா இருக்கு. வேறு வழியின்றி ஜெனரல்ல வேற கம்பார்ட்மென்ட்ல நுழைஞ்சா, எனக்கு முன்னாடி போன என் அம்மா சீட் புடிச்சு வைச்சிருக்காங்க. 'எப்படிமா' ன்னு கேட்டா, 'அதான் பாரேன்'ன்னு அம்மாவும் ஆச்சரியமா சிரிச்சாங்க. பெருமாளுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு, அங்க இருந்த ஆளுங்க, ரயில் பயணம், ஒவ்வொரு ஸ்டேஷன்ல மக்கள், எல்லாத்தையும் வழக்கம் போல கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். அதென்னமோ மக்களை கவனிக்கறது எனக்கு ரொம்ப புடிச்ச விஷயமா இருக்கு. அழகு, நிறம், நாகரிகத்தையும் தாண்டி ஒவ்வொரு முகத்திலும் அவர்கள் குணம் இருப்பதாக தோன்றும். வீட்லயே உக்காந்துகிட்டு அதிகமா படிக்கறதால வர வியாதின்னு நினைக்கறேன். (இது பரவாயில்ல. ஒரு காலத்துல, சுவர் விரிசல், மேகம் இதெல்லாம் பார்த்துகூட அது எந்த எழுத்து மாதிரி இருக்குன்னு உருவகப்படுத்த முயன்ற கூத்தெல்லாம் பண்ணியிருக்கேன்...) 

ரயில் திருச்சி கோட்டை ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடிச்சு உறையூர் வெக்காளி அம்மன் கோவிலுக்கு முதலில் போனோம். போர்ட் போட்டிருந்த வழியில் போனால், பெருமாள் கோவில் தான் முதலில் வந்தது. அங்கிருந்த செருப்பு பாதுகாவலர், 'செருப்ப இங்க விட்டுட்டு போங்கம்மா' என்று கூற, என்ன ஏதென்று கேட்காமல் அம்மாவும் விட போனார். நான் அவசர அவசரமாக அம்மாவை பிடித்து நிறுத்தி, 'ஏங்க, வெக்காளி அம்மன் கோவிலுக்கு போகணுங்க' என்று சொல்ல அவர் 'right left right left' என்று கூறினார். நிறைய பேருக்கு சொல்லி இருப்பார் போல. அவ்வாறே செல்ல, கோவில் வந்தது. 

எவ்வளவு புகழ் பெற்ற கோவில்! அழகாக, நீட்டா, சிம்பிளா இருந்தது. அம்மன் அவ்வளவு அழகு... இதுவரை மற்ற கோவில்களில் இல்லாத அளவு லைட் செட்டிங் பிரமாதமாக இருந்தது. முழு உருவமும் பளிச்சென்று தெரிந்தது.  lighting  எப்படி செட் பண்ணியிருப்பார்கள் என்று யோசித்து பார்த்தும் பிடிபடவில்லை. அப்பறம் பிரகாரத்தை சுற்றும்போது தான் தெரிந்தது, அது நேரடி சூரிய ஒளி. அம்மனுக்கு மேலே வைக்கோல் போன்ற ஏதோ ஒன்றை வைத்து கூரைபோலும் அமைத்திருந்தார்களே தவிர, அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருந்தார். அம்மாவிடம் கேட்டபோது , 'சுற்றிலும் அடைத்திருந்ததால் அம்மனுக்கு அம்மை வந்ததாகவும், அவர் காற்றாட இருக்கவே விரும்புவதாகவும், அதனால் இந்த அமைப்பில் கோவில் கட்டினார்கள் என்றும்' சொன்னார்கள். இது குறித்த விரிவான கதை இருந்தால் நீங்களும் தெரியப்படுத்தலாம். திருப்தியாக கும்பிட்டு வெளியே வந்தோம். 

திரும்பி சத்திரம் பஸ் ஸ்டான்ட் போக வேண்டி இருந்ததால் வந்த வழியே 'right left right left' போட்டு வந்தோம். வரும் வழியில்  சிறுவன் என்றும் ஆள் என்றும் கூற இயலாத ஒரு பதின்ம வயது பையன் அவ்வளவு பப்ளிக்காக தன் டிரவுசரையோ பேன்ட்டையோ கழற்றி விட்டு காலை கடன் கழிக்க உட்கார போகும் நிலையில் பார்த்தேன். அவனை நிர்வாணமாக நான் பார்க்காவிட்டாலும் அவன் இடுப்புக்கு கீழ் ஆடை அணிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டென்று என் மனம் துணுக்குற்றது.

         கங்கை கரையில் ஒரு சண்டாளன் போலும் தோற்றமுள்ளவன் அமர்ந்து அங்கு வருவோர் போவோரிடம் தன்னை கங்கையில் குளிக்க வைக்குமாறு தினமும் வேண்டுவானாம். அவனை தொட்டால் பாவம் ஒட்டிக்கொள்ளும் என்று மற்றவர்கள் கூறுவதால், யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லையாம். ஒருநாள் ஒருவர் மட்டும் (பேர் மறந்துடுச்சு) மற்றவர்களின் எச்சரிக்கையை புறம்தள்ளி அவனை தன் கைகளாலேயே தூக்கிச்சென்று குளிக்க வைத்தாராம். அப்போது அந்த சண்டாளன்  "என்னை தொட்டு உங்களுக்கு பாவம் பிடித்து விட்டதே, உங்கள் பாவத்தை எப்படி போக்கிக்கொள்வீர்கள்?" என்றுகேட்டானாம். அதற்கு அவர் "பாவம் தீர்ப்பதற்க்காகதானே இந்த கங்கையே இங்கே இருக்கிறது. இந்த கங்கை நீரில் குளித்து போக்கிக்கொள்வேன், கங்கை பாவம் போக்கும் என்று அவர்கள் நம்பி இருந்தால் உன்னை எப்போதோ குளிக்க வைத்து உதவி செய்திருப்பார்கள். அவர்கள் கங்கையை நம்பாமல் கங்கையில் குளித்து என்ன பயன்?" என்றாராம். அப்போது அந்த சண்டாளன் தன் தேவ உருவத்தை காட்டி அவருக்கு அருள் பாலித்ததாக ஒரு கதை படித்துள்ளேன். அது போல அம்மனிடம் அவ்வளவு அருளை வாங்கிக்கொண்டு வந்ததாக நம்பும் நான் அதில் கொஞ்சமேனும் இந்த பையனுக்கு கொடுப்பதில் என்ன  தவறு என்று வர வரவே அந்த பையனுக்காக வேண்டிக்கொண்டு வந்தேன். 
 
ஸ்ரீ ரங்க பயணம் என் அடுத்த பதிவில். 

15 comments:

logu.. said...

\\மூன்றாவதை ரசித்து அனுபவிக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. பொதுவாக நான் ஒரு Home Bird.\\

அப்பூடியா?

logu.. said...

\\ (இது பரவாயில்ல. ஒரு காலத்துல, சுவர் விரிசல், மேகம் இதெல்லாம் பார்த்துகூட அது எந்த எழுத்து மாதிரி இருக்குன்னு உருவகப்படுத்த முயன்ற கூத்தெல்லாம் பண்ணியிருக்கேன்...) \\

பீல் பண்ணாதீங்க..
லூசுங்க அப்டிதானாம்.

சக்தி கல்வி மையம் said...

Nice.,

லிவிங்ஸ்டன் said...

சூப்பர் நன்றாக இருந்தது

jayakumar said...

good article...

சி.பி.செந்தில்குமார் said...

>>அவர்கள் கங்கையை நம்பாமல் கங்கையில் குளித்து என்ன பயன்?"

ஆன்மீகக்கட்டுரையில் பகுத்தறிவுக்கருத்து.. அடடே

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓவரா இருக்கோ...

இல்லைங்க.. ஓவர்னா 6 இருக்கனும். 2 அவார்டு தானே இருக்கு.. ஹி ஹி

கோவை நேரம் said...

அருமை .எளிமையான நடையில் உங்களின் பயணம் ....

Yaathoramani.blogspot.com said...

பயண அனுபவங்களை பிரமாதமாகச் சொல்லிப் போகிறீர்கள்
படங்களும் இடையில் கதைசொல்லிப் போதலும் அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கோவை நேரம் said...

அருமை .எளிமையான நடையில் உங்களின் பயணம் ....

சாதாரணமானவள் said...

@ logu said
\\அப்பூடியா?\\
அப்படிதாங்க
\\பீல் பண்ணாதீங்க..
லூசுங்க அப்டிதானாம்.\\
நான் கொஞ்சம் டீசண்டா சொன்னேன். நீங்க இமேஜ் அ டேமேஜ் பண்றீங்க. அவ்ளோ தான்.

சாதாரணமானவள் said...

நன்றி வேடந்தாங்கல் கருண், லிவிங்க்ஸ்டன் பாபா, ஜெயகுமார், கோவை நேரம் மற்றும் ரமணி

சாதாரணமானவள் said...

@சி.பி. செந்தில் குமார்
\\ஆன்மீகக்கட்டுரையில் பகுத்தறிவுக்கருத்து.. அடடே\\
ஆன்மிகம் நம்பிக்கையையே அடிப்படையாக கொண்டதுன்னு பலருக்கும் தெரிவதில்லை. இது பகுத்தறிவு னு சொல்லலாமா னு தெரியலையே...

\\இல்லைங்க.. ஓவர்னா 6 இருக்கனும். 2 அவார்டு தானே இருக்கு.. ஹி ஹி\\
ரூம் போட்டு யோசிப்பீங்களோ....

Anonymous said...

Dear Sister,

Your article the way of wrote very nice and touch my heart. Right now i'm working in Singapore and I like to visit Em Perumaan Sri Renganatha Swami Temple, Sri Samayapuram Mariyamman and my Mother Uraiyur Sri Vekkaliamman Temple next month April 2011. Thank you.

Kepp it up. Expect more from you smailler this.

Unknown said...

பகவானே இந்த புள்ளைய காப்பது உன்கடமை
பதிவை படிக்கும் எங்களை காப்பதும்