Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, March 18, 2011

நான் திருச்சி போனேனே... பார்ட் 2

               அப்புறம் உறையூர் பஸ் ஸ்டாப்பிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து ஸ்ரீரங்கத்துக்கு போனோம். திருச்சி முழுக்க நிறைய மேம்பாலங்கள் இருந்ததால் ரோட்டில் இருந்து எல்லா வீடுகளும் பள்ளத்திலேயே இருப்பது போல் தோன்றியது. சில இடங்களில், பஸ்ஸில் இருந்து பார்த்தால் first floor அப்படியே தெரிந்தது. சரி, இது இந்த ஊர் ஸ்டைல் போல இருக்கு...

                 ஸ்ரீரங்கம் வந்து இறங்கியதும் ரங்கநாதரை நினைப்பதற்கு முன் ரங்கராஜனை நினைத்துக்கொண்டேன். அதாங்க ... நம்ம சுஜாதா சார். ஸ்ரீரங்கத்தை நமக்கு விதவிதமாக அறிமுகப்படுத்தியது அவர்தானே... எது ரங்கு கடையாக இருந்திருக்கும், எது 'மல்லிப்பூ ஐயர்' வீடாக இருந்திருக்கும் என மனதிற்குள் கேள்வி கேட்டுக்கொண்டே வந்த நான், ராஜகோபுரத்தை கண்டதும், விக்கித்து நின்றேன். இதற்கு முன் நிற்கும் ஒருவன், 'இந்த உலகத்தில் நான் தான் பெரியவன்' என்ற மாயையில் விழ முடியுமா என்று தோன்றியது... நாம் எவ்வளவு சிறிய விஷயம் என்று தோன்றியது. இந்த கோபுரம் முதலில் ராஜகோபுரம் இல்லாமலும், 1877 க்கு பிறகோ என்னவோ தான் ராஜகோபுரம் கட்டப்பட்டதாக தெரிந்துகொண்டேன். பிரம்மாண்டம் !  நேர்ல பக்கத்துல பார்க்கும்போது தான் அது தெரியும்.
அதன் பின் இரண்டுமூன்று கோபுரங்களை தாண்டியபின் தான் கோவிலை வந்தடைய முடிந்தது. அதாவது கோவிலுக்கு உள்ளேயும் ஊர் உள்ளது. வழியெங்கும் கடைகள். அவற்றையெல்லாம் தாண்டி உள்ளே நுழைந்ததும் ஒரு திருப்தி படர ஆரம்பித்தது. தலைவர பாக்கப்போறோம் அப்படிங்கற எண்ணமே ஒருவித நெகிழ்ச்சிய கொடுத்தது. 'கைகால் கழுவ மட்டும்'னு குறிப்பிட்டிருந்த இடத்துல சாப்பிட்ட பாத்திரத்த கழுவிகிட்டு இருந்த அக்காவ நகர சொல்லி கைகால் கழுவிட்டு கோவிலுக்குள்ள நுழைஞ்சோம். மதியான நேரம் ஆகிட்டதால பொடி சுட ஆரம்பிச்சுடுச்சு. வேகமா உள்ள ஓடி க்யூவில நின்னோம்.
                   நானும் பாக்கறேன்... ஒவ்வொரு கோவில்லயும்... க்யூவில நிக்கற நேரத்துல என்னதான் அரட்டை அடிப்பாங்களோ... அந்த நேரத்துல கூடவா சாமிய நினைக்க முடியாது? 'ஓம் நமோ நாராயணாய' ன்னோ, ஏதாவது சாமி பாட்டோ, அட்லீஸ்ட் அங்க இருக்கற சுவர்ல எழுதி இருக்கும் பாடல்களை படிக்க முயற்சியாவது செய்யலாமே. அப்படியும் இல்லாட்டி, எனக்கு இது வேணும் அது வேணும்கற லிஸ்ட் கூட போடலாம் இல்லையா. அந்த க்யூவில நிக்கற நேரம் நமக்கும் சாமிக்குமானது. அதை உபயோகப்படுத்திக்கணும். ஏதாவது ஒரு விதத்துல கருவறைல இருக்கும் சக்திகூட நாம தொடர்பு படுத்திக்கணும். அது பெரும்பாலான மக்களுக்கு தெரிவதே இல்லை. மனுஷன் குறிப்பா தமிழன் பேசியே கெடறான். முக்கியமான இடத்துல பேசாம கெடறான். Leave it.

           ரங்கநாதர் காலடியில காவேரி ஆறு பாயும் னு கேள்விபட்டிருந்தேன். அவர பார்க்கும்போது அந்த இடத்தையும் பார்க்க ட்ரை பண்ணினேன். ப்ச். முடியல. of course தெரியல. வெக்காளியம்மன் அம்மன் கோவில் வெளிச்சமான வெளிச்சம். இங்க அதுக்கு நேர்மாறாக இருந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், ஈரோடு கஸ்தூரி ரங்கநாதரும் தான் பள்ளிகொண்ட நிலையில இருப்பாங்க. ஈரோட்ல கொஞ்சம் வெளிச்சம் இருக்கும். இங்க இருட்டு. இறைவனை தேடிதான் நாம அடையணும்ங்கற தத்துவத்துல அமைச்சிருப்பாங்க போல.  பண்ற குறும்பெல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி அழகா, புன்னகையோட படுத்திருந்தார் ரங்கர். வழக்கம்போல கண்ணீர் மல்க இறைவனை தரிசிச்சு, வேண்டிட்டு வெளியே வந்தா, அங்க ஆரம்பிச்சாங்க கலெக்ஷன...  பெரும்பாலான ஐயர்கள் கேட்டு கேட்டு வாங்கறாங்க. எங்க கிட்ட கேக்கறதுக்கு பதிலா ரங்கநாதர்கிட்டயே  கேட்டிருந்தா அவரே கொடுத்திருப்பாரேனு தோணுச்சு. போன பதிவுல போட்ட கதை மாதிரி. 


வெளியே வந்தா, இந்த இடத்துலதான் ராமானுஜர் மாதிரியான பெரிய பெரிய ஜீயர்கள் நடந்து போயிருப்பாங்க. இந்த இடத்த ஆண்ட ராஜாக்கள் இந்த வழியாதான் உள்ள போயிருப்பாங்க. இந்த அழகான சிற்பத்தை செதுக்கிட்டு இருந்த சிற்பிகள் தினம் தினம் ரங்கநாதர தரிசிச்சிருப்பாங்க அப்படின்னு இடம் சார்ந்த எண்ணங்களும், அங்கு வாழ்ந்த மனிதர்கள் பத்தியும் யோசிக்க வச்சுச்சு. ஒரு ஐயர் கூப்பிட்டு தங்க கோபுர தரிசனம் செய்ய வச்சு, அதே மண்டபத்துல தகடு பதிச்சிருந்த இடத்துல கால வச்சு அங்க இருந்து வாசுதேவன் முகம் னு சொல்லி கோபுரத்துல இருந்த பெருமாள தரிசிக்க வைத்தார். அதற்காக சன்மானமும் வாங்கிக்கிட்டார். அது வேற விஷயம்.

இந்த பதிவும் நீளமா போனதால தாயார தரிசிச்ச கதை அடுத்த போஸ்ட் ல.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

அந்த ஐயரிடம் ரங்கனாதர்கிட்டேயே
கேட்கலாமே எனச்சொல்லிப் பாருங்கோ
தெய்வம் மனித வடிவில்தானே வரும்
அதுதான் உங்களிடம் கேட்கிறேன் என
அதற்கேதேனும் தத்துவம் சொல்லிவிடுவார்
படங்களும் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

எல் கே said...

இப்ப சமீபத்தில்தான் போனேன் ஆனால் ரங்கராஜனை (ரங்கநாதர் ) பார்க்க இயலவில்லை.

Anonymous said...

Dear Sister,Nice Emperumaan tharisanam. I went two times to Em Peruman Sannathi...the trip was very amazing and unforgettable...whoever visit there�. I�m sure that they will feel very satisfaction and mind blowing. Is it the photo taken from actual place �Emperumal Sayana Kolam�? Thank you. By P.Dhanagopal.

shanuk2305 said...

அப்படியே பெமினா போக மறக்காதீங்க

சாதாரணமானவள் said...

சூப்பரா சொன்னீங்க ரமணி சார்
@ எல்.கே
அடடா...
@ P. Dhanagopal
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. google image ல இருந்து தான் எடுத்தேங்க. அங்கேயே எடுத்த படம் என்று தான் தோன்றுகிறது. Original Posture ம் இதுவேதான்.
@ Shanuk
பெமினா?

mouna guru said...

சோழ மண்ணின் கோவில்கள் அனைத்தும் வெறும் பக்தியை மட்டும் சொல்லாமல் மனிதனின் வாழ்க்கை முறையையும் அற்புதமான நம் நாகரிகத்தையும் நாம் திரும்பி பார்க்க உதவுகின்றன. திருவரங்கம் ஒரு அற்புதம் தோழி.

R. Gopi said...

\\ஸ்ரீரங்கம் வந்து இறங்கியதும் ரங்கநாதரை நினைப்பதற்கு முன் ரங்கராஜனை நினைத்துக்கொண்டேன். அதாங்க ... நம்ம சுஜாதா சார். ஸ்ரீரங்கத்தை நமக்கு விதவிதமாக அறிமுகப்படுத்தியது அவர்தானே... எது ரங்கு கடையாக இருந்திருக்கும், எது 'மல்லிப்பூ ஐயர்' வீடாக இருந்திருக்கும் என மனதிற்குள் கேள்வி கேட்டுக்கொண்டே \\

good one