Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, August 15, 2011

'என்னத்த சுதந்திரம் வாங்கி...' கட்சியா நீங்கள்?

உங்களுக்காகத்தான் இந்த பதிவு...
 
68  வருஷத்துக்கு முன்னாடி இந்த காந்தி தாத்தா பண்ணின தப்பு சுதந்திரம் வாங்கி குடுத்தது. வெள்ளைகாரங்க ஆட்சில எல்லாம் ஒழுங்கா நடந்துட்டு இருந்துது. நம்ம ஆளுங்க பெருசா கழட்டுற மாதிரி 'சுதந்திரம் குடு சுதந்திரம் குடு' னு வாங்கி எல்லாத்தையும் வீணாக்கிட்டாங்க. இப்ப மட்டும் நாம என்னமோ அடிமை இல்லாத மாதிரி சுதந்திர தினம் கொண்டாடுறோம். இப்பவும் நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு அடிமையாதான இருக்கோம். எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, இன்னும் என்னெல்லாம் நாட்டை கெடுக்க முடியுமோ அத்தனையும் நடக்குது. இதுக்கு பேசாம ஆங்கிலேயருக்கே  அடிமையாவே இருந்திருக்கலாம். விதவிதமா வசதிகளாவது கிடைச்சிருக்கும்

                   இப்படி பேசுபவர்களிடம் பொதுவான வெறும் ஐந்து கேள்விகள். இந்த கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று பதிலளித்தால் போதுமானது. பதில்களை உங்கள் மனசாட்சி படி உங்களுக்குள் சொல்லிக்கொண்டால் போதும்
    1 . Traffic Signal லில் (எனக்கு முன் யாரும் இல்லாத நிலையில்) கோட்டுக்கு முன் என் வண்டியின் நிழல் கூட விழாது. பச்சை விழுவதற்கு முன் அல்லது 0 நொடிக்கு முன் நான் வண்டியை கிளப்புவதில்லை.
     
    2.  தியேட்டரில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நான் க்யூ முறையையே பின்பற்றுகிறேன். உதா: ரேஷன் கடை, கோவில், இன்ன பிற இடங்கள்.
     
    3. இதுவரை அரசு அலுவலகங்களில் நான் லஞ்சம் கொடுக்க மறுத்து, எவ்வளவு நாள் ஆனாலும், நேர்மையான வழிமுறையிலேயே எனக்கு தேவையான ஆவணங்களை பெற்றிருக்கிறேன்.
     
    4. கல்வியறிவு இல்லாதவர் யாரேனும் எனக்கு தெரிந்தவராக இருந்தால், அவருக்கு என்னால் முடிந்தவரை  குறைந்தபட்சம் உயிரெழுத்து மெய்யெழுத்து மட்டுமாவது கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
     
    5. என் வீட்டு குப்பையை பக்கத்து வீட்டுக்கு தள்ளி என் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போலல்லாமல், நிஜமாகவே என் வீட்டை போலவே என் தெருவையும் என்னால் முடிந்த அளவு சுத்தமாக வைத்திருக்கிறேன். உதா: தெரு குண்டும் குழியுமாக  இருந்தால், அதை என் போன்ற அக்கறையாளர்களுடன் சேர்ந்தோ தனியாகவோ அடைக்கிறேன். குறைந்தபட்சம் முனிசிபாலிடியில் புகாராவது செய்கிறேன். 
     
       ஆம் என்று பதில் சொன்னவர்கள் மேற்கொண்டு புலம்பலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. (இவர்கள் புலம்புவதில்லை என்பது என் கணிப்பு)

      ஒருவேளை மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள்
      1. signal பார்த்துக்கிட்டு wait பண்ணிட்டு இருந்தா, எனக்கு நான் போற வேலை முடிஞ்ச மாதிரிதான். Moreover, நான் வெயிட் பண்ணி நின்னுட்டு இருந்தா, எனக்கு பின்னாடி இருக்கறவனுங்க போற வேகத்துல என்னை அடிச்சுபோட்டு போய்ட்டே இருப்பானுங்க.
      2. ஐயோ... க்யுவா ? அது எனக்கு அலர்ஜி. அதனாலதான் நான் எங்க போனாலும் சிறப்பு டிக்கெட் வாங்கிடுவேன். இல்லாட்டி புகுந்தடிச்சு உள்ள புகுந்துவேன். வலிமையுள்ளவருக்கே உலகம் சொந்தம்ன்னு நம்பற ஆளு நான்.
      3. கிழிஞ்சுது போங்க... காசு குடுத்தோமா வேலைய ஒரே நாள்ல முடிச்சோமா னு இல்லாம... அவனுங்க எத்தன நாள் இழுத்தடிப்பாங்க தெரியுமா? ஆபீஸ்ல லீவ் யாரு உங்க அப்பனா தருவான்? அந்த loss of pay க்கு பயந்துட்டு தான ஒரே நாள்ல காசை குடுத்து வேலைய முடிக்கறோம்
      4. என்னது? class எடுக்கறதா? நான் என் குழந்தைக்கே டியுஷன் தான் வெச்சிருக்கேன். இதுல எவன் படிச்சா என்ன? நாசமா போனா என்ன?
      5. C'mon Dude! R u Crazy? நான்? ரோட்ல வேலை செய்யறதா? நான் இன்ன கம்பெனில இன்ன வேலை பாக்கறேன். என் மானம் மரியாதை என்ன ஆகறது? இதெல்லாம்  அரசாங்கத்தோட வேலை. எதாவது  பிகர் நம்பர் வேணா கஷ்டப்பட்டு  அவனை  புடிச்சு இவனை புடிச்சு கண்டுபிடிப்பேனே  தவிர, இந்த மாதிரி முனிசிபாலிடி நம்பரெல்லாம் யாரு கண்டுபிடிச்சுட்டு இருக்கறது?
      என்று  இருந்தால்  புலம்ப தகுதி இல்லாதவர்கள் என்று உங்களுக்கே தெரிந்துவிடும். 
                 நம் அனைவருக்கும் அடிப்படை உரிமை அடிப்படை உரிமை என்று வாய் கிழிய கத்துகிறோமே... நம்மில் எத்தனை பேருக்கு அடிப்படை கடமைகள் பற்றி தெரியும்?
      1. தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்கணு ம்.
      2. எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதிக்கணு ம்..
      3. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை பின்பற்றி நடக்கணு ம்..
      4. எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்கணு ம். நாட்டுக்காக தேவைப்படும்போது, சேவை செய்ய தயாராக இருக்கணு ம்.
      5. அனைவரும் சாதி, மத, மொழி, இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்கணு ம்.
      6. நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்கணு ம்.
      7. காடுகள், நதிகள், ஏரிகள்  உள்ளிட்ட இயற்கையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கணு ம்..
      8. அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்கணு ம்..
      9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துகளை பாதுகாக்கணு ம்..
      10. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தரணு ம்.
                      இந்த கடமைகளை ஒண்ணு ரெண்டு இல்ல, எல்லாமே பின்பற்றுபவர்கள் மட்டுமே புலம்புங்க. மத்தவங்க,  இந்த கடமை எல்லாம் செஞ்சுட்டு அப்பறம் புலம்பலாம். இந்த கடமைகளையும் செய்யும்போது அதில் நாடு சார்ந்த சுயநலம் இருக்கிறதா? நம்மை மட்டுமே சார்ந்த சுயநலம் இருக்கிறதா என்று கவனித்து செய்யுங்க. 
       
      உதாரணமா, நம்மில் பலர் கடைசி கடமையை முழு மூச்சா செய்யறோம்.அதுக்கு நாடு சார்ந்த நலனை விட, நம்மளோட குழந்தை நல்லா படிச்சா, நிறைய சம்பாதிக்கும் அப்படிங்கற எண்ணமே மேலோங்கி இருக்கும். யாருக்காவது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்து, அவர்களில் ஒருவரையாவது இராணுவ சேவை அல்லது விவசாயம் அல்லது குறைந்த கட்டணத்திலோ இலவசமாகவோ சேவை செய்யும் துறை போன்ற ஏதேனும் ஒரு துறைக்கு அனுப்ப மனம் வருகிறதா? (எனக்கு இப்போதைக்கு நினைவுக்கு வந்த துறைகளையே எழுதியுள்ளேன். உண்மையில் நிறைய துறைகள் உள்ளன. Where there is a will, there is a way). நான் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக படிக்க வைத்தேன் என்பதை விட நாட்டுக்காக படிக்க வைத்தேன் என்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? 

      இத்தனைக்கும் இந்த பதிவை நான் உண்மையில் குறுகிய கண்ணோட்டத்தில் தான் எழுதி இருக்கிறேன். அதற்கே நாம் வெட்கப்படவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் புலம்புகிறோம்?
      இந்தியா முன்னேற தடையாக உள்ள விஷயம் ஊழல், லஞ்சம், அரசியல்வாதி கிடையாது. 

      உண்மையான காரணம் நம்மோட சுயநலம் தான்.

      எல்லாருக்கும் சுயநலம், எல்லா விஷயத்திலும் சுயநலம்.

      'எனக்கு மட்டும் முன்னுரிமை கிடைக்கணும், நான் முதல்ல அனுபவிக்கணும்'. இந்த எண்ணத்தை எப்ப மாத்துறோமோ, அப்ப தான் நம்ம நாடு பற்றி நாம பெருமைப்படும் நிலைமையை அடைவோம். 

      Anyway, சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே! இந்தியனாய் பிறந்ததற்கு பெருமைப்படுவோம்! ஜெய் ஹிந்த் !

      31 comments:

      நண்டு @நொரண்டு -ஈரோடு said...

      அருமை.

      இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .

      மாணவன் said...

      //இத்தனைக்கும் இந்த பதிவை நான் உண்மையில் குறுகிய கண்ணோட்டத்தில் தான் எழுதி இருக்கிறேன். அதற்கே நாம் வெட்கப்படவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் புலம்புகிறோம்?
      இந்தியா முன்னேற தடையாக உள்ள விஷயம் ஊழல், லஞ்சம், அரசியல்வாதி கிடையாது.

      உண்மையான காரணம் நம்மோட சுயநலம் தான்.

      எல்லாருக்கும் சுயநலம், எல்லா விஷயத்திலும் சுயநலம்.

      'எனக்கு மட்டும் முன்னுரிமை கிடைக்கணும், நான் முதல்ல அனுபவிக்கணும்'. இந்த எண்ணத்தை எப்ப மாத்துறோமோ, அப்ப தான் நம்ம நாடு பற்றி நாம பெருமைப்படும் நிலைமையை அடைவோம். ///

      முற்றிலும் உண்மையான கருத்து...

      மாணவன் said...

      //Anyway, சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே! இந்தியனாய் பிறந்ததற்கு பெருமைப்படுவோம்! ஜெய் ஹிந்த் !///

      உங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! :)

      அக்கினிக் குஞ்சு said...

      நெத்தி அடி. மிகவும் சிறப்பான, நேர்மையான பதிப்பு. வாழ்த்துக்கள் நண்பரே.
      விமலன்

      Reflections said...

      மிக அருமையான கட்டுரை, நல்ல சாடல், நம்ம மேல தான் தவறு என்று. இந்த சுதந்திர தினத்தில், நீங்கள் தமிழராக இருக்கும் பட்சத்தில், இந்த ஹிந்திய அரசு, தமிழர்கள் மேல் அக்கறை கொண்டு இருகிறதா என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் இன்னும் நிறைய படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், ஏனென்றால் , நம் மொழி பேசும் தமிழக மீவர்களை இன்று வரை காப்பாற்ற வில்லை இந்த தேசியம், கொன்றவர்களை நீதியின் முன்னால் கொண்டு வரவில்லை, இன்று தேசிய நாளை நீங்கள் எல்லாம் கொண்டாடும் வேளையில், மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தாக்க பட்டார்கள், அந்நிய நாட்டு இராணுவத்தினால். நம் தமிழ் மொழி பேசும் மக்களை கொன்று குவிக்க ஆயுதமும் , பயிற்சியும் கொடுத்தது இந்த தேசம் தான். இந்தியனாய் பிறந்ததற்கு அவமான படுகிறேன், 1700 முன்பு வரை இங்கு யாரும் ஹிந்தியர்கள் இல்லை, ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நாம் எல்லாம் ஹிந்தியர்கள் ஆனோம், ஆனால் எக் காலத்திலும் நாம் தமிழர்.

      டக்கால்டி said...

      Nalla pathivu...

      aanaal Yaarum maarapovathillai...
      naanum en nanbargalidam vaai kizhiya pesi tired aavathu thaan micham...

      ithai patthi pesinaa communism pesaatha endru solraanga...

      'பரிவை' சே.குமார் said...

      அப்படிப் போடு...
      மிகச் சரியான பதிவு.

      மனோ said...

      நல்ல அலசல் . நாம் மாறினால்தான் நம் நாடு மாறும். மாற்றம் நமிடமிருந்து ஆரம்பிக்கட்டும் .

      பாலா said...

      செருப்பால் அடித்த மாதிரி ஒரு பதிவு.

      aotspr said...

      நல்ல பதிவு.நன்றி,பிரியாhttp://www.tamilcomedyworld.com

      அம்பாளடியாள் said...

      'எனக்கு மட்டும் முன்னுரிமை கிடைக்கணும், நான் முதல்ல அனுபவிக்கணும்'. இந்த எண்ணத்தை எப்ப மாத்துறோமோ, அப்ப தான் நம்ம நாடு பற்றி நாம பெருமைப்படும் நிலைமையை அடைவோம்.

      நிட்சயமாகத் தோழி உங்கள் உணர்வை மதிக்கின்றேன் .வாழ்த்துக்கள் சிறப்பான ஆக்கங்களைத் தொடரும்
      தங்கள் முயற்சிகள் வெற்றிபெற.... .நன்றி பகிர்வுக்கு..........

      சாதாரணமானவள் said...

      @ நண்டு, மாணவன்
      வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

      சாதாரணமானவள் said...

      @ அக்னி குஞ்சு
      நன்றி விமலன். நான் தோழி

      சாதாரணமானவள் said...

      @ Reflection
      உங்கள் வேதனை எங்களுக்கும் உண்டு. இந்தியனாய் பிறந்ததற்கு வெட்கப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. வெறும் புலம்பல் எதையும் மாற்றாது. மாறாக என்ன செய்யலாம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள் நண்பரே

      சாதாரணமானவள் said...

      @ டக்கால்டி
      உண்மைதான். பிரச்சனை என்னவென்றால் நாம் பேசுகிறோம், மற்றவர்கள் பின்பற்றவேண்டும் என்று நினைக்கிறோம். எப்ப நாம மத்தவங்கள பத்தி கவலை படாம நமக்கு நேர்மையான வழின்னு நெனைக்கறத பின்பற்றுகிறோமோ, அப்பதான் எல்லாம் சரியாகும் சகோ. உங்க நண்பர்கள் பின்பற்றனும்னு நீங்க நெனைக்கறத, வார்த்தைல சொல்லாம செயல்ல காட்டிபாருங்க... நிச்சயம் உங்க நண்பர்களும் பின்பற்றுவாங்க சகோ.

      சாதாரணமானவள் said...

      @ சே.குமார்
      நன்றிங்க

      சாதாரணமானவள் said...

      @ மனோ
      நீங்க ஒரு கேள்வி கேட்டிருந்தீங்க. அதுக்கு பதில் ஆமாம்.

      சாதாரணமானவள் said...

      @ பாலா
      அடடா... அது கொஞ்சம் சூடான வார்த்தையா இருக்குங்களே...

      சாதாரணமானவள் said...

      @ பிரியா
      வருகைக்கு நன்றிகள்

      தமிழ் வண்ணம் திரட்டி said...

      மெயில் அனுப்பி விட்டேன் இணையலாம்

      Unknown said...

      எவ்ளோ நல்லவங்களா நீங்க
      வாழ்க வளமுடன்
      சந்தோசம்
      பதிவு கண்டு ..

      உங்கள் முயற்சிக்கும்
      உங்களின் பங்களிப்புக்கும்
      வயதில்லை வாழ்த்த
      வார்த்தை இல்லை பாராட்ட.
      இருந்தாலும் பாராட்டுக்கள்

      Reflections said...

      @சாதாரணமானவள்- பதில் ரொம்ப சுலபம், போராடுங்க நம் தமிழ் மீனவர்களின் உரிமைகளுக்காக போராடுங்க, தமிழ் நம் நாடாளுமன்றத்தில் ஒழிக்க வழி செய்ய வேண்டும். தமிழ் அரசியல் ஒரு நல்ல நிலமைக்கு வருவதற்கு உங்களால் முடிந்த நல்ல தலைவனை தேர்ந்தெடுங்கள்.

      kavitha said...

      மிகவும் ஆணிதரமானது. யோசிக்க வைக்கிறது அனைத்துமே. இனி உங்கள் பதிவை படிக்க பதுங்கி பதுங்கி தான் வருவேன்னு நினைக்கிறேன்.என்னை பார்த்து கேட்கிறது போலவே இருக்கே உங்க எல்லா பதிவும்?. :)

      SURYAJEEVA said...

      நான் ஒரு படி மேலே, நான் இந்தியன் அல்ல நான் உலகன்

      சாதாரணமானவள் said...
      This comment has been removed by the author.
      சாதாரணமானவள் said...
      This comment has been removed by the author.
      சாதாரணமானவள் said...

      @ அம்பாளடியாள் , சிவா
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

      சாதாரணமானவள் said...

      @ reflection
      என்னை பொறுத்தவரை இப்படி பதிவிடுவதே ஒரு வகையில் நல்ல தலைமை தேடி ஒரு போராட்டம் தான்.
      /தமிழ் நம் நாடாளுமன்றத்தில் ஒழிக்க வழி செய்ய வேண்டும்/
      ஒலிக்க என்று எழுத வந்தது தவறாகிவிட்டதா நண்பரே?

      சாதாரணமானவள் said...

      @ கவி
      hahahaha

      சாதாரணமானவள் said...

      @ thirumathi BS sundar
      wow.... ரொம்ப நன்றிங்க

      சாதாரணமானவள் said...

      @ சூர்யாஜீவா
      கலக்குங்க....