Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, December 18, 2011

ஈரோடு சங்கமம் 2011 - நடந்தது என்ன ?


ஆஹா... ஈரோடு சங்கமம் பத்தி நான் தான் சுடச்சுட முதல் பதிவு தர போறேனா? Good na....

Alright! திங்கள் கிழமையோ செவ்வாய் கிழமையோ சங்கவி போன் பண்ணி இருந்தார். 'ஈரோட்டில் சங்கமம் நடக்க போகுது. நீங்க கண்டிப்பா வர்றீங்க. போன வருஷமும் வரேன்னு சொல்லிட்டு வரவே இல்ல. இந்த முறை கண்டிப்பா வாங்க. நிறைய பெண் பதிவர்களும் வர்றாங்க'ன்னு சொன்னார். போன வருஷமே சங்கவி எழுதுன பதிவுல எல்லார் வாயிலும் ஜொள்ளு வடியற அளவு, உணவு ஏற்பாடு பத்தி எழுதி இருந்தாரா... எங்க இந்த தடவை மிஸ் ஆயிடுமோன்னு வேற ஒரு எண்ணம். நாமளும் இந்த வருஷம் கொஞ்சம் வளந்துட்டோமா... (அட உயரத்துலப்பா...) அதனால கண்டிப்பா வரேன்னு துண்டு போட்டுட்டேன்.

எப்படா ஞாயித்து கிழமை வரும்...எல்லாரையும் பார்க்கலாம்னு நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். ஞாயித்து கிழமை காலை சங்கவிக்கு 'எப்ப வரட்டும்? ஆரம்பிச்சுட்டாங்களான்னு'  போன் பண்ணினேன்.  9.30 க்கு வந்துடுங்கன்னு சொன்னார். நம்ம நாட்டோட தேசிய வியாதியே லேட்டா வர்றது தான? அதனால மேடம் (நாந்தான்) கரெக்டா பத்து மணிக்கு போயிட்டேன். போனதும் நம்ம பேரு , ப்ளாக் அட்ரஸ் எல்லாம் எழுத சொல்லி உள்ள அனுப்பினாங்க. ஏசி ஹால்ல நிறைய பேர் உக்கார்ந்திருந்தாங்க. ஒரு குறும்படம் காமிச்சாங்க. நான் படம் முடியும் நேரத்துல போனதால அதை பத்தி எழுத முடியல.

மணி பத்தரை ஆச்சு. ஈரோடு கதிர், மகேஸ்வரன், பொதிகை செய்தி வாசிப்பாளர் அருள்மொழி மூணு பேரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிச்சாங்க. மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தான் chief  guest . தலைவர் தாமோதர் சந்துரு அருமையா நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அப்பறம் பெரிய தலைகளா பார்த்து ஒரு 15 பேருக்கு விருது வழங்கினாங்க. எழுத்துல பார்த்தவங்களை நேர்ல பார்க்கறது வித்யாசமா இருந்துது. அட இவங்களா அவங்க, அவங்களா இவங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.  சிலபேரை அங்க தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி அறிமுகம் இல்லை. இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள்.

விருது வழங்கினதும், ஸ்டாலின் சாரின் உரை. விருது பெற்றவர்களின் ஏற்புரை. பாலாசியின் நன்றியுரை. அப்பறம் எல்லா ப்ளாகர்சும் உங்களை அறிமுகப்படுத்திக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அப்பவே கால்வாசி கூட்டம் கிளம்பி வெளில போய்டுச்சு. அப்பறம் ஒவ்வொருத்தரா இன்ட்ரோ குடுத்துட்டு அவங்கவங்க பிரெண்ட்ஸ கூட்டிட்டு வெளில போய்ட்டாங்க. அப்ப பாதி கூட்டம் வெளில போய்டுச்சு.

போச்சுடா... நாம இன்ட்ரோ பண்ணிக்கறதுக்குள்ள
மீதி கூட்டமும் போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு போய் நானும் பண்ணிக்கிட்டேன். நல்ல வேளை.... நான் சாதாரணமானவள் அப்படிங்கற பேர்ல ப்ளாக் எழுதறேன்னு சொன்னப்ப 'ஒ...நீங்க தானா' அப்டின்னு கணிசமான அளவுல சொன்னாங்க. (எவ்ளோ பேர்னு கேக்காதீங்க. இருந்த கால்வாசி கூட்டத்துல  கணிசமான பேர்) அதுலயும் அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் சாரும், கோகுலத்தில் சூரியன் வெங்கட் சாரும் கான்பிடன்டா சொன்னதுக்கு அவங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

அதுக்கப்பறம் லஞ்ச். இது குறித்த detail தகவலுக்கு சங்கவியோட பதிவு நாளைக்கு வரும். சுருக்கமா, மட்டன், சிக்கன், தலைக்கறி, முட்டை பணியாரம், எலும்பு குழம்பு, பருப்பு பாயாசம். சாப்டுட்டு வெத்தலை பாக்கு போட்டுட்டு வந்தாச்ச்ச்ச்ச்ச்.....

 வேற யாராவது பதிவு போட்ருப்பாங்க. படிக்கலாம்னு பார்த்தேன். யாரும் போடல. நம்மள மாதிரி நீங்களும் என்ன ஆச்சுன்னு எதிர்பார்த்திட்டு இருப்பீங்களேன்னு நானே பதிவை போட்டுட்டேன். போட்டோஸ் எங்கன்னு தான கேக்கறீங்க? சி.பி சார் ஒரே பதிவுல 600 போட்டோ போடறேன்னு சொல்லி இருக்கார். அவரோடதுல பார்த்துக்கங்க..

 

44 comments:

Admin said...

அனுபவத்த சொன்னதுக்கு..நன்றி..

முனைவர் இரா.குணசீலன் said...

நானும் இன்று கூட்டத்திற்கு வந்திருந்தேன் தங்களையும் பார்த்தேன்.. தங்கள் பேச்சையும் கேட்டேன்..தங்களுக்கு முன்பாகவே நான் பதிவிட்டுவிட்டேனே!!!http://gunathamizh.blogspot.com/2011/12/blog-post_18.html

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா முந்திக்கிட்டீங்களே, மீ 10 நிமிஷம் லேட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

>>. நான் சாதாரணமானவள் அப்படிங்கற பேர்ல ப்ளாக் எழுதறேன்னு சொன்னப்ப 'ஒ...நீங்க தானா' அப்டின்னு கணிசமான அளவுல சொன்னாங்க

haa haa மேடம், ரீல் அந்து போச்சு, அவ்வ்வ்வ்

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் சந்திப்பு வாழ்த்துக்கள்...!!

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

நிகழ்ச்சி அருமை !
நானும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன் ! introவில் கலந்து கொள்ளவில்லை !
facebook ID: Geneva Yuva (pictures post பண்ணியுள்ளேன் !)

கோவை நேரம் said...

பதிவர் சந்திப்பு பாகம் வெளி வருமா...? சீக்கிரம் முடித்து விட்டீர்களே ..

everestdurai said...

அருமையான நிகழ்வு உங்களுடை படைப்பு அருமை நானும் வந்திந்தேன்

மாணவன் said...

//போச்சுடா... நாம இன்ட்ரோ பண்ணிக்கறதுக்குள்ள
மீதி கூட்டமும் போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு போய் நானும் பண்ணிக்கிட்டேன். நல்ல வேளை.... நான் சாதாரணமானவள் அப்படிங்கற பேர்ல ப்ளாக் எழுதறேன்னு சொன்னப்ப 'ஒ...நீங்க தானா' அப்டின்னு கணிசமான அளவுல சொன்னாங்க. (எவ்ளோ பேர்னு கேக்காதீங்க. இருந்த கால்வாசி கூட்டத்துல கணிசமான பேர்) //

lol.... :-)

வாழ்த்துகள்!

பதிவர் சந்திப்பின் முதல் பதிவு பகிர்வுக்கு நன்றிங்க!

Yaathoramani.blogspot.com said...

நேரடியாக நிகழ்ச்சியைப் பார்ப்பது போல இருந்த்து பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 4

மின்துறை செய்திகள் said...

நானும் இன்று கூட்டத்திற்கு வந்திருந்தேன் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது தங்களை புகைப்படம் எடுக்கமுடியவில்லை மன்னிக்கவும்.இது எனக்கு முதல் சங்கமம் பயன் உள்ளதாக இருந்தது

இராஜராஜேஸ்வரி said...

அனுபவப் பகிர்வுக்கு வாழ்த்துகள்..

ஆமினா said...

நடந்தது என்ன???//

கிரைம் ஸ்டோரி மாதிரி இருக்கே நீங்க தான் கிரிமினல்லா? ஹி..ஹி...ஹி...

அருமையான எழுத்துநடை. இப்போ தான் உங்களை பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்க.

வாழ்த்துகள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

செம ஸ்பீடு போஸ்ட்...
நல்ல பகிர்வு...


வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...

வெங்கட் said...

// அதுலயும் அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் சாரும், கோகுலத்தில் சூரியன் வெங்கட் சாரும் கான்பிடன்டா சொன்னதுக்கு அவங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். //

உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன்..
சாப்பிட்ட உடனே ஜூட் ஆகிட்டீங்க
போல.. காரியத்துல கண்ணா இருந்து இருக்கீங்க.. :)

மின்துறை செய்திகள் said...

ஈரோடு சங்கமம் 2011 புகைப்படங்களை காண இங்கே செல்லுங்கள்

https://plus.google.com/photos/112050002889092683008/albums/5687676028124969137?authkey=CJSb69ewvsLKnwE

ஆமினா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கண்டிப்பா எழுதுவீங்கன்னு தெரியும் :-)

http://kuttisuvarkkam.blogspot.com/2011/12/blog-post_19.html

சம்பத்குமார் said...

வணக்கம் சகோ..

வலைபதிவர் சந்திப்பில் பதிவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

தங்களின் பார்வையில் சங்கமம்..

உரைநடை அருமை

நன்றி
சம்பத்குமார்
தமிழ்பேரன்ட்ஸ்

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

படம் இல்லையென்றாலும் அருமையான பதிவு.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

சாதாரணமானவள் said...

@மதுமதி, மனோ, வெளங்காதவன், ராஜராஜேஸ்வரி, ரத்னவேல்

நன்றிங்க..

சாதாரணமானவள் said...

@ Guna thamizh

//தங்களுக்கு முன்பாகவே நான் பதிவிட்டுவிட்டேனே//
சரி... பெண் பதிவர்கள்ல முதல்ன்னு வெச்சுகோங்க :)

சாதாரணமானவள் said...

@ சி.பி.செந்தில்குமார்

//மீ 10 நிமிஷம் லேட்//

பரவாயில்ல விடுங்க.. நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்கன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே



// மேடம், ரீல் அந்து போச்சு,//

அந்துபோனது தெரியாத அளவு படம் காட்ட நாங்க என்ன செந்தில் சாரா? இப்ப தாங்க Initial stage ல இருக்கோம்.

சாதாரணமானவள் said...

@ ஆகாய மனிதன்

போட்டோஸ் பார்த்தேங்க. அருமை.

சாதாரணமானவள் said...

@ கோவைநேரம்

சீக்கிரம் முடிச்சுட்டேனா? வராதவர்கள் என்ன ஆச்சுன்னு ஆர்வமா காத்திருப்பாங்களேன்னு எழுதினது. அதனால அப்படி இருக்கும்.

சாதாரணமானவள் said...

@ Everest durai

நல்லா இருந்துச்சு இல்ல..

சாதாரணமானவள் said...

@ மாணவன்

Welcome :)

சாதாரணமானவள் said...

@ ரமணி

நன்றிங்க

சாதாரணமானவள் said...

@ கணேஷ் மூர்த்தி

// தங்களை புகைப்படம் எடுக்கமுடியவில்லை மன்னிக்கவும்.//

அட பரவா இல்லைங்க ... நல்லது தான். ஒண்ணும் பிரச்சனை இல்ல. என் படத்த ப்ளோக்ல போட்டவங்களையே என் போட்டோவ எடுத்துடுங்கன்னு கெஞ்சிகிட்டு இருக்கேன். (அப்பா திட்டுவாரு)

சாதாரணமானவள் said...

@ ஆமினா

நடந்தது என்னன்னாவே கிரிமினல் ஸ்டோரி தானா? :)

சாதாரணமானவள் said...

@ பிரகாஷ், சம்பத்குமார்

Thank you :)

சாதாரணமானவள் said...

@ வெங்கட்

அட... நானும் உங்ககிட்ட பேசணும்னு தான் நினைச்சேன். உங்கள சுத்தி செம Fans ஆ.. நெருங்கவே முடியல. நான் சாப்டுட்டு கை கழுவிட்டு வர்றப்ப, நீங்க காரியத்துல கண்ணா இருக்க கெளம்பிட்டு இருந்தீங்க. ;-) வண்டி எடுக்க வந்தப்ப பேசலாம்னு இருந்தேன். தயக்கமா இருந்துச்சு. அதான் வந்துட்டேன்.

சாதாரணமானவள் said...

@ எனக்கு பிடித்தவை

நானும் போன வருஷம் சூழ்நிலையை காரணம் சொல்லிட்டு இருந்தேன். மனமிருந்தால் மார்க்கபந்து சாரி மார்க்கமுண்டு.. :)

சாதாரணமானவள் said...

@ தென்காசி தமிழ்பைங்கிளி

மேடம்... உங்கள் கவிதைகள் ரியல்லி சூபர்ப்...

ஈரோடு கதிர் said...

நன்றிம்மா!

சாந்தி மாரியப்பன் said...

அருமையான சந்திப்பு.. பகிர்வுக்கு நன்றி

N.H. Narasimma Prasad said...

ஈரோடு பதிவர் சந்திப்பை பற்றி மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள் மேடம். பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

சுருக்கமானு சொலிட்டு சாப்பிட்டு வெத்தல பாக்கு போட்ட வரைக்கும் சொல்லி ஆச்சு :)

rishvan said...

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.....அருமை...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

Anonymous said...

//சாதாரணமானவள் said...
@ எனக்கு பிடித்தவை

நானும் போன வருஷம் சூழ்நிலையை காரணம் சொல்லிட்டு இருந்தேன். மனமிருந்தால் மார்க்கபந்து சாரி மார்க்கமுண்டு.. :)//

அடுத்த பதிவுலக சந்திப்புக்கு வர முயற்சி பன்றேனுங்க

வாங்க வாழ்த்துங்க

செல்லக் குட்டி பிறந்தநாள்

சாதாரணமானவள் said...

@ Ameena
ஹல்லோ...
தொடர்பதிவுன்னா என்னனே எனக்கெல்லாம் தெரியாதுங்க.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க. நீங்க எதிர்பார்க்கற அளவு நம்ம கிட்ட சரக்கு இல்லைங்க. (உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்லைன்னு பொலம்ப வெச்சுட்டீங்களே...)

மழை said...

எல்லாரும் கட்டு கட்டுன்னு கட்டி இருக்கீங்க.. நாங்கள்லாம் கலந்துக்கவே முடியாதுபோல:(

ASHIQ said...

சாதாராணமாவே நான் ப்ளாக் படிக்கிறதில்ல, ஏன்னா அது எனக்குபிடிக்கிறதில்ல.அப்படியே சாதாரணமா இணைய உலா வரும்போது “சாதாராணமானவள்” என்ற டைட்டில் கண்ணுல மாட்டிச்சு. ”சாதாராணமானவள்” என்ற டைட்டில் சாதாராணமான டைட்டில் இல்ல, டைட்டுல இருந்தா கூட இந்தமாதிரி டைட்டில் சாதாராணமா யாருக்கும் தோனாது.இது சாதாராணம் இல்ல, சதா திங்க் பன்னிகிட்டே இருக்கிறவங்களுக்குத்தான் இப்படில்லாம் தோனும்.நவ் ஐ திங் இது சம்’திங்’ ஸ்பெஷல்.
இப்ப ப்ளாக் படிக்கிற மூட் இல்ல, அதுனால கமெண்டிங் மட்டும் சரியா?
இன்னொரு நாள் வந்து படிச்சுக்கிறேன். ஆனா நோ கமெண்ட் ஓகே வா? ஓகே. பை பை
இவண்,
இவன்