Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, February 24, 2012

நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 2 ( டைரி பதிவு)

முந்தைய பதிவு:
 நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 1 (டைரி பதிவு)

       குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டதால், எங்கள் ராமேஸ்வர பயணம் தள்ளிப்போனது. அடுத்து மீண்டும் திட்டமிட்டபோது, ஒவ்வொரு குடும்பத்திலும் பரீட்சை வந்துடுச்சு, காலேஜ் ப்ராஜக்ட், கடைக்கு ஆள் வேண்டும் என்று ஒவ்வொரு காரணங்கள். என் அப்பாவோ எங்கள் குடும்பம் மட்டும் தனியாக அவ்வளவு தூரம் போக பயப்பட்டார். அதனால் எங்க பிரேமா அத்தை, முத்துசாமி மாமா, அவங்க பொண்ணு கலை, அவ பையன் நிகேஷ் குட்டியுடன் என் அம்மா, அப்பா மற்றும் நான் மொத்தம் ஏழு பேரும் ஒரு டவேராவில் கிளம்பினோம். பொதுவாக குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு தான் இந்த மாதிரி யாத்திரை போகணும்னு சொல்லுவாங்க. அப்படி போக முடியாதவங்க ஒரு மஞ்சள் துணில காசை முடிஞ்சு வெச்சுட்டு பயணம் கிளம்பலாமாம். நாங்களும் அப்படியே செய்துவிட்டு கிளம்பினோம்.

       ஜன்னல் சீட் உங்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு எனக்கு டிரைவரின் பக்கத்து சீட் பிடிக்கும். 180 டிகிரியில் வேடிக்கை பார்க்கலாம். பெரும்பாலும் ஆணாதிக்கம் காரணமாக இந்த இடம் எனக்கு கிடைக்காது. ஆனால் இந்த முறை அதிசயமாக அப்பாவும் சரி, மாமாவும் சரி இந்த இடத்தை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. முழு பயணத்திலும் நானே என்ஜாய் செய்தேன். வண்டி மதியம் 2.45 க்கு ஈரோட்டிலிருந்து கிளம்பியது. எனக்கு வண்டி எந்த ரூட்டில் ராமேஸ்வரம் போகும் என்று துளி ஐடியா கிடையாது. கரூர் வழியாக பயணம் என்பது வண்டியில் போகப்போகத்தான் தெரியும். வழியில் தான் எங்கள் குலதெய்வ கோவில் இருக்கிறது என்பதால் குலதெய்வ கோவில் விசிட்டும் திருப்திகரமாக நடந்தேறியது.

பின்தொடரும் வானம். அருமையான பைபாஸ் சாலை. சிட்டிக்குள் போகாமலேயே 5.45 அளவில் திண்டுக்கல் நோக்கி பயணம். 7 மணிக்கு மதுரை. அங்கு கொஞ்சம் வழி மாறியதால் சுற்றிவிட்டு 8.30 க்கு மானாமதுரை. வழியெங்கும் ஒவ்வொரு ஏரியாவாக கரண்ட் கட். இரவு உணவை ஜெனரேட்டர் வைத்திருந்த ஒரு ஹோட்டலில் முடித்துவிட்டு தொடர் பயணம். 10.40 அளவில் பாம்பன் பாலம். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த லாட்ஜில் இரவு தங்கல். பெரிதாக சலிப்பு ஒன்றும் தெரியவில்லை. Long tour செல்பவர்களுக்கு நல்ல வண்டியும், திறமைசாலி டிரைவரும் வரம்.

அடுத்த பதிவில் ராமேஸ்வரம் கோவில்.
(தொடரும்)


7 comments:

வெளங்காதவன் said...

:-)

கோவை நேரம் said...

அப்புறம்.......

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட பயணம் - அதுவும் முன் இருக்கையில் அமர்ந்து - ரசிக்க முடியும் முழுமையாக....

தொடருங்கள்... தொடர்கிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

Long tour செல்பவர்களுக்கு நல்ல வண்டியும், திறமைசாலி டிரைவரும் வரம்.

அருமையான வரத்திற்கு வாழ்த்துகள்..

rishvan said...

உங்களுக்கு வெர்சாட்டைல் பிளாக்கர் அவார்ட் கொடுத்து பரிந்துரை செய்கிறேன்.. தாங்கள் பெற்றுக்கொண்டு, பின்வரும் என்னுடைய தளத்தில் http://www.rishvan.com/2012/02/blog-post_25.html உள்ள வழிமுறையை பின்பற்றவும். வாழ்த்துக்கள்....ரிஷ்வன்.

திவ்யா @ தேன்மொழி said...

இரசிக்கத் தூண்டும் பயணப்பதிவு.. தொடருங்கள்..!:)

வியபதி said...

இரண்டாம் பகுதியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். (திருக்குறள் விளக்கப் பதிவு அருமை என் வலைப்பதிவையும் பாருங்களேன். http://viyapathy.blogspot.in)