Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, February 5, 2012

காதல் - ஒரு அலசல்

பிப்ரவரி மாதத்திற்கு அடையாளம் காதலர் தினம் தான். அதனால் இந்த பதிவு. சுதந்திர தினமும், குடியரசு தினமும் கொண்டாடப்படுவதை விட அதிக எதிர்பார்ப்பு காதலர் தினத்துக்கே உண்டு. இது வருந்தத்தக்கது என்றாலும் உண்மை. ஆனால் இதற்கு வேறொரு பரிணாமம் உண்டு.


                  பொதுவாக இது காதலர்களுக்காக  என்று சொல்லப்பட்டாலும் நம்ம ஆளுங்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் நாள் என்று குறிப்பிடுவது மிகையாகாது. அட உண்மை தாங்க... எத்தனை பேர் ப்ரபோஸ் பண்றாங்க என்பதை பொறுத்து அவர்கள் தன்னம்பிக்கை வளரும். பொதுவாவே எதிராளிக்கு முதலில் தெரிவது முக அழகு தானே தவிர, அக அழகு அல்ல. அது போகபோகத்தான் தெரியும். அதனால முக அழகுல பாஸ் மார்க் வாங்கறது முக்கியமா இந்த மாதிரி காதலர் தினங்களில் தான்.

                      எத்தனபேர கவர்ந்து இருக்கோங்கறது அந்த நாளில் வரும் ப்ரபோசல்களை வைத்து தான் கணக்கிடப்படுகிறது என்பதால் இது பெண்களுக்கு மிக முக்கியமான நாள். அதே போல ஆண்களுக்கு, தான் விரும்பிய பெண் தன் காதலை ஏற்றுக்கொண்டால்தான், தன்னை எலிஜிபிலாக எண்ணிக்கொள்கிறார்கள். 

                  முந்தைய காதல்களில் தோற்றாலும், அடுத்து அவர்கள் தேடும் பார்ட்னர் நிச்சயம் முந்தைய லவ்வை விட ஏதாவது விஷயத்தில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். புதிய பார்ட்னரை கைப்பிடிக்க தங்கள்  நிலையையும் உயர்த்திக்கொள்கிறார்கள். எதுக்கு? ஒருவேளை எங்காவது திருவிழா, பொருட்காட்சில தன்னை நிராகரித்தவரை பார்க்கும்போது உன்னை விட பெரிய ஆள் என்னை கட்டிக்கிட்டாங்க பாத்தியா என்று காட்டத்தான். 

                   எது எப்படியோ, இன்றைய காதலர்கள் பெரும்பாலும் தானும் உயர்ந்து தன் பார்ட்னரையும் உயர்த்துபவர்களாகவே இருக்கிறார்கள். கேம்பஸில் தன் காதலி செலக்ட் ஆகி தான் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவள் சேர்ந்த கம்பெனியில், விடாமுயற்சியுடன் முயன்று டைரெக்ட் இன்டர்வியுவில் அதே கம்பெனியில் சேர்ந்த பையன், ஜூனியர் பையனை காதலித்து, அவனுக்கு வேலை கிடைக்கும் வரை காத்திருந்து அவன் நல்ல இடத்தில் பிளேஸ்மென்ட்  ஆனதும் வீட்டில் சொல்லி அவனையே திருமணம் செய்த பெண்  என்று காதலால் முன்னேறியவர்கள் பலரை அறிவேன்.

            அதே சமயம், காதலால் சீரழிந்தவர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. 'நீங்க டாஸ்மாக்கில் வேலை செய்வதால் எங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறாங்க' என்று சொல்லி வேலையை விடச்செய்து, திருமணத்திற்கு பின் அவன் பார்க்கும் வேலையும் சம்பளமும் போதவில்லை என்று குறைசொல்லி மீண்டும் பெற்றோரிடமே வந்து சேர்ந்த பெண், முக அழகில் மயங்கி திருமணம் செய்து திருமணம் ஆன பின் அவளை விட அழகான வேறொரு பெண்ணின் அழகில் மயங்கி குடும்பத்தை சீரழித்த பையன் என்றும் வீணானவர்களையும் அறிவேன். 
                 வெற்றி பெற்றதற்கு காரணமானதை காதல் என்றும், தோல்விக்கு காரணமானதை இன்பாக்சுவேஷன் என்றும் சர்வ சாதாரணமாக சொல்லி தப்பி விடுகிறோம். ஈர்ப்பின் மூலம் காதலித்தவர்கள் கூட ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் காதலிக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. காதல் எல்லா சமயங்களிலும் ஒன்றுதான். நாம் தான் அதற்கு ஈர்ப்பு, பப்பி லவ், பக்குவ லவ் என்றெல்லாம் பேர் வைக்கிறோம். குறுகிய காலத்தில் பிரிந்தால் பப்பி லவ். நீண்ட காலம் இருந்தால் அது பக்குவ லவ். இப்படி சிங்கள் லைனில் விளக்கம் கொடுத்து விடுகிறோம். எந்த மொழியில் கூறினாலும் ரோஜா ரோஜாதான் என்பது போல, எத்தனை நாள் நேசித்தாலும் காதல் காதல் தான்.
 

5 comments:

கோவை நேரம் said...

காதலர் தின வாழ்த்துக்கள்... பதிவு அருமை...

Anonymous said...

"காதல் என் காதல் அது கண்ணீரிலே" பாட்டு தான் ஞாபகம் வருது உங்க பதிவ படிச்சதும். என்ன ஒரு ஆழமான அலசல் காதலை பற்றி இந்த சின்ன வயசுல :) . இதையெல்லாம் நானும் அனுபவித்ததே. அதிலும் பள்ளிபருவத்தில் காதலிச்ச பெண் செலக்ட் ஆன கம்பெனில செலேக்ட்டாக மெனகெட்டது. தோல்வியடைந்த காதல் infactuation ஆனதே தவிர. வேற எந்த புது காதலிலும் மனம் ஒன்றிடவில்லை. Infactuation is called foolish love. ஆமாம் காதல் என்பது முட்டாள் தனமாக,பயதியகாரதனமாக, உண்மையாக இருக்க வேண்டும். அது இது எதுவானாலும் சரி காதல் காதலே.

சாதாரணமானவள் said...

//என்ன ஒரு ஆழமான அலசல் காதலை பற்றி இந்த சின்ன வயசுல //

I like it :)

சம்பத்குமார் said...

வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்


அன்புடன்
சம்பத்குமார்

அனைவருக்கும் அன்பு  said...

வலைசரம் மூலம் எனக்கு உங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி எளிய நடையில் எதார்த்தங்களை பகிரும் உங்கள் எழுத்துக்கள் வசீகரமானது தொடர்ந்து எழுதுங்கள் அப்படியே எங்கள் வலை பக்கமும் வந்து செல்லுங்கள் பெண் என்னும் புதுமைkovaimusaraladevi.blogspot.com