Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, February 20, 2012

என்னிடமிருந்து விருது வாங்கிய ஐந்து பேர்

பதிவெழுத வந்த புதிதில் விருது வாங்கியது. அதுக்கப்பறம் நாமளும் எந்த விருதையும் தேடி போகல. எந்த விருதும் நம்ம தேடி வரல. இவ்ளோ நாள் கழிச்சு, நண்பர் வெங்கட் நாகராஜ் விருது வழங்கி இருக்கிறார். அவருடைய 'அன்பின் விருது ' அப்படிங்கற பதிவுல இந்த விருதை வழங்கி இருக்கறார். ஜோரா ஒரு தடவை கை தட்டுங்களேன் பிரெண்ட்ஸ்....

ரொம்ப நன்றி வெங்கட் நாகராஜ்.

இந்த விருதுல என்ன ஒரு விசேஷம் னா நாம பாட்டுக்கு வாங்கினோமா, நம்ம வேலைய பார்த்தோமான்னு இல்லாம, நம்மள அஞ்சு பேருக்கு குடுக்க சொல்றாங்க. அதுவும் யாருக்கு? இருநூறுக்கும் குறைவா followers வெச்சிருக்கறவங்களுக்கு குடுக்கணுமாம். ஊக்குவிப்பதில் புதிய முறை. நல்லா இருக்குல்ல...
அஞ்சு பேருக்குதான் குடுக்கணுமா இல்ல எத்தனை பேருக்கு வேணும்னாலும் குடுக்கலாமான்னு தெரியல. அவங்க குறிப்பிட்டதால் இங்கே ஐவருக்கே விருது தரேன். 

1.  சுபத்ரா பேசுகிறேன் 
2. கேனக்கிறுக்கன்
3. வெறும்பய 
4. வீடு    
5. பதிவுலகில் பாபு 
 
 Liebster னா ஜெர்மன்ல Dearest ன்னு அர்த்தமாம். இந்த விருது குடுப்பதால் இவங்க மட்டும் தான் dearest ன்னு நீங்களும்  நினைக்க மாட்டீங்க. அவங்களும் நினைக்க மாட்டாங்கன்னு தெரியும். இன்னும் ஒரு மாசத்துல இருநூறுக்கும் குறைவா followers வைச்சிருக்கற அத்தனை பேருக்குமே இந்த விருது reach ஆகிடும்னு நினைக்கறேன். MLM மெத்தட்ல எல்லாரும் எல்லாரையும் பாராட்டிக்கறோம். நல்லது தான..

அப்பறம், இந்த விருது வாங்கிக்கறதுல சில ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்   இருக்கு. மறுபடியும் அதை சொல்லிடறேன்.
1 இந்த விருதை வாங்கினதும் உங்க பதிவுல வெச்சுக்கோங்க.
2 இந்த விருதை யார் உங்களுக்கு கொடுத்தாங்களோ அவங்க பதிவை இணைக்க வேண்டும் .
3 நீங்களும் 5 பேருக்கு விருது குடுக்கணும்
4 அந்த 5 பேருக்கும் 200 க்கும் குறைவான followers இருக்கணும்.
5 இது சம்பந்தமா ஒரு பதிவை உங்க தளத்துல பதியனும்

இதை பெரிய மலைப்போட செய்யாம உங்க விருது புதியவர்களுக்கு ஊக்கம் தரும் அப்படிங்கற காரணத்துக்காகவே செய்யுங்க நண்பர்களே..

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்... உங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெற்றவர்களுக்கும்....

arasan said...

வாழ்த்துக்கள் விருது பெற்றமைக்கும் , வழங்கியமைக்கும் ..

kavitha said...

எனக்கெல்லாம் விருது கிருது கிடையாதா?. பள்ளிக்கோடத்துல படிக்கும் போது தான் யாருமே தர மாட்டேனுட்டாங்க நீங்களுமா !!?? (உங்களுக்கு முட்ட கிட்ட மந்திருச்சு வச்சிடப் போறேன் ) :)

Unknown said...

இனிய இணைய உறவே
இந்த கேனக்கிருக்கன் பதிவு எழுதியதை மதித்து என்னுடைய பதிவுகளை வரவேற்று என்னை ஊக்கப்படுத்தி விருதுகள் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

விருதுக்கு நன்றி தோழி...

இந்த விருது ரொம்ப நாளைக்கு முன்னாடியே குடுக்கனுமின்னு நினசிருப்பீங்க போலிருக்கே..

ஆமா கண்டிப்பா நானும் விருது குடுத்தே ஆகணுமா.??

சாதாரணமானவள் said...

@ வெங்கட் நாகராஜ், அரசன்

நன்றிங்க

சாதாரணமானவள் said...

@ கவிதா

ஹஹஹா... உங்களுக்கு எத்தனை followers ன்னு தெரியலைங்க. அதனால தான் குடுக்கல.

சாதாரணமானவள் said...

@ சிகா லெனின்



You deserve it

சாதாரணமானவள் said...

@ வெறும் பய

உங்களுக்கு விருது கொடுத்தப்ப நீங்க சந்தோஷப்பட்டிருந்தீங்கன்னா அந்த சந்தோஷத்தை மத்தவங்களுக்கும் கொடுக்க விருது கொடுக்கலாம். இது நம்ம இஷ்டம். ஆனா எனக்கு குடுத்தவங்க, மத்தவங்களுக்கும் கொடுக்க சொல்லி தான் குடுத்தாங்க நண்பா

சாம் ஆண்டர்சன் said...

ஹெலோ மேடம்.... இன்னும் முழுசா 50 பதிவு கூட எழுதல அதுக்குள்ள நீங்க விருது குடுக்குறீங்களா.....

சாதாரணமானவள் said...

@ சாம்

சாமுக்கு நடிக்கதான் தெரியாதுன்னு நினைச்சேன், கணக்குமா தெரியாது?

என்னை குடுக்க சொல்லி எனக்கு குடுத்தாங்க சாம். அதனாலதான் குடுத்தேன். தப்புங்களா?

Unknown said...

அன்புடைய சகோதரி சாதரணமானவள் அவர்களுக்கு,சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை எனக்கு நீங்கள் அளித்ததை ஐந்து நண்பர்களுக்கு அளித்துள்ளேன் நீங்களும் வாழ்த்த வாருங்கள்!

"விருதுகள் எனும் ஊக்கமருந்து!"

சாம் ஆண்டர்சன் said...

Enna madam ulloorkaarana nadikka theriyaadhunnu sabayila vachu asingappaduththitteengale :(