Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Wednesday, February 22, 2012

ரீசார்ஜ் செய்பவர்களே... உஷார்!

என் கஸின் செல்போன் கடை வைத்திருக்கிறார். எப்போதாவது வெளியூர் செல்லும்போது EC Recharge போனை என்னிடம் கொடுத்து யாராவது ரீசார்ஜ் செய்ய சொன்னால் செய்து விட சொல்லுவார். அப்படித்தான் நேற்றும் போனை என்னிடம் கொடுத்திருந்தார். மதியம் பணம் தீர்ந்து விட்டதால், ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டு சென்றிருந்தார்.
 
மாலை எனக்கு ஒரு போன்கால் வந்தது.யாரோ வடஇந்தியர் ஹிந்தி வாசம் வீசும் ஆங்கிலத்தில் பேசினார்.
வ.இ: வணக்கம் மேடம், நாங்க airtel customer care ல இருந்து பேசறோம். நீங்க EC Recharge செய்யறீங்களா?
நான்: ஆமாங்க
வ.இ: உங்க நம்பர் (00000 000000) இது தான?
நான்: ஆமாங்க.
வ.இ:  இப்ப உங்க பேலன்ஸ் எவ்வளவு வெச்சிருக்கீங்க?
நான்:  1080 ரூபாய்னு நினைக்கறேங்க.
வ.இ:  மேடம், நாங்க உங்க சேவைய ஊக்கப்படுத்தறதுக்காக உங்க நம்பருக்கு 3333 ரூபாய் கிப்ட்ரீசார்ஜ் செஞ்சிருக்கோம். அது உங்க அக்கவுண்ட்ல add ஆகிடுச்சான்னு செக் பண்ணிக்கோங்க மேடம். உங்ககிட்ட வேற பர்சனல் நம்பர் இருக்கும்ல. அந்த நம்பர சொல்லுங்க.
நான்: எதுக்கு?
வ.இ: மேடம். நாங்க உங்களுக்கு 3333 ரூபாய் கிப்ட்ரீசார்ஜ் செஞ்சிருக்கோம். எங்க கிட்ட நம்பர் சொல்ல மாட்டீங்களா?
நான்: அதுக்கு? சொல்லனுமா? என்கிட்டே பர்சனல் நம்பர் இல்ல.
வ.இ: அட்லீஸ்ட் landline நம்பராவது சொல்லுங்க.

நான் சொன்னேன். உடனே அந்த நம்பருக்கு கால் செய்து, கன்பார்ம் செய்து கொண்டு மொபைல் லைனை கட் செய்து விட்டான்.  பின் பேலன்ஸ் பார்க்கும் வழிமுறையை சொன்னான். சாதாரண சிம்களில் இருக்கும் service option க்கும், ரீசார்ஜ் சிம்களில் இருக்கும் service option க்கும் வித்தியாசம் உண்டு. நானும் அவன் சொன்ன வழிமுறையில் போய் பார்த்தால் எந்த பணமும் அதிகரித்திருக்கவில்லை.

நான்:  அப்படி எதுவும் add ஆகலையே சார்
வ.இ: ஓகே. பணம் உங்க கணக்குல வரல இல்லையா? பணம் add ஆகணும்னா நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல 99xxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க. (அவன் ஒரு போன் நம்பர் சொன்னான்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல 01000 ன்னு டைப் பண்ணுங்க
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: PIN நம்பர் குடுங்க
நான்:  இருங்க. எனக்கு சந்தேகமா இருக்கு. நான் கஸ்டமர் கேர் ல கேட்டுட்டு இதை பண்ணறேங்க.
வ.இ:  மேடம்... மேடம்... ஒரு நிமிஷம். இப்ப மறுபடியும் ஒருமுறை டைப் பண்ணுங்க. வேணும்னா உங்க நம்பருக்கே பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல xxxxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க.
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல *1000 ன்னு டைப் பண்ணுங்க (நோட் பண்ணிக்கங்க. இந்த முறை *)
நான்: பண்ணிட்டேன்
வ.இ: பின் நம்பர் குடுங்க
நான்:  குடுத்துட்டேன்
(இப்ப மெசேஜ் வருது. அதுல நீங்க குடுத்த அமௌன்ட் invalid  ன்னு சொல்லிடுச்சு.)
நான்:    Invalid Amount ன்னு வருது சார்
வ.இ:இப்ப மறுபடியும் டைப் பண்ணுங்க. நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல xxxxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க. (இந்த முறை அவன் சொன்ன நம்பர்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல 01000 ன்னு டைப் பண்ணுங்க
(எனக்கு சந்தேகம் போய் விட்டது. கண்டிப்பா இவன் பிராடு தான். அதனால வேணும்னே மறுபடியும் முதல் 0  க்கு பதிலாக * கொடுத்தேன்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: PIN நம்பர் குடுங்க
நான்:  குடுத்துட்டேன்
இப்ப மெசேஜ் மறுபடியும்  amount invalid ன்னு  வருது. நான் 0 போட்டிருந்தால் நிச்சயம் அந்த நம்பருக்கு 1000 ரூபாய் போய் இருக்கும். அவனுக்கு குழப்பம். சரியாதான சொன்னோம். ஏன் வரலன்னு குழப்பத்துக்கு போயிட்டான்.  நான் 'வேலை இருக்கு. பணம் வராட்டி பரவாயில்ல. அப்படி இப்படின்னு' நானும் தவிர்த்து பார்த்தேன். மறுபடியும் 2 ,3 முறை இதே மாதிரி பண்ண சொல்லி கெஞ்சினான். நானும் மனதுக்குள் சிரித்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் 0  க்கு பதிலாக * மட்டுமே கொடுத்தேன். 
(சலித்துப்போன அவன் )
வ.இ: உங்க PIN நம்பரை சொல்லுங்க மேடம்
நான்:  இல்லைங்க. PIN நம்பரை கஸ்டமர் கேர் ல இருந்து கேட்டா கூட சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. 

 இப்படி அவன் விடாக்கண்டனாகவும் நான் கொடாக்கண்டனாகவும் நடந்துகொண்டோம். கடைசியில் இவன் நம்மள விட மாட்டான்னு போனையும் கட் செய்து விட்டு, வயரையும் பிடுங்கி விட்டேன். மொபைலையும் switch off செய்துவிட்டேன்.  


எப்படியோ நம் ரீசார்ஜ் நம்பரை தெரிந்து கொண்டு, கஸ்டமர் கேர் என்று சொல்லி அவர்கள் சொல்லும் instruction ஐ செய்ய வைக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே... சாதாரண ஆட்களிடம் கூட கஸ்டமர் கேரிலிருந்து பேசுகிறேன் என்று சொல்லி அட்ரஸ் முதலிய விஷயங்களை கறக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். உஷார்...

18 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா சாதாரணமனாவர் அசாதாரணமனாவர் னு காட்டிட்டீங்க :)

Admin said...

இது போன்று பல மோசடிகள் நடக்கிறது. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி சகோ.!

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..

Unknown said...

oh my god என்னமா ஏமாத்த பாக்குராங்கய்யா!..பதிவிட்டமைக்கு நன்றி சகோ!

ஆச்சி ஸ்ரீதர் said...

எம்புட்டு விவரமா இருக்காங்கப்பா?...

முத்தரசு said...

விழிப்புணர்வு பதிவு - உசார் மக்களே

தகவலுக்கு நன்றி

கோவை நேரம் said...

தெளிவா இருக்கீங்களே ....தமிழா...கொக்கா...?

வெங்கட் நாகராஜ் said...

பார்த்து சூதானமா நடந்துக்கணும்...

நல்ல விழிப்புணர்வு பகிர்வு....

chinnathambi said...

தகவலுக்கு நன்றி

வெளங்காதவன்™ said...

:-)

விச்சு said...

இப்படி ஒரு வழிமுறையா? நீங்க ரொம்ப அலெர்ட். நல்ல விழிப்புணர்வு பதிவு.

சாதாரணமானவள் said...

@ சிபி.

பின்ன? சும்மாவா? உங்க ஊர் பக்கமாச்சே...

சாதாரணமானவள் said...

@ Abdul Basith, இராஜராஜேஸ்வரி, விக்கியுலகம், மனசாட்சி, வெங்கட் நாகராஜ், கோவைநேரம், சின்னத்தம்பி, விளங்காதவன், விச்சு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

சாதாரணமானவள் said...

@திருமதி BS ஸ்ரீதர்

என்னை சொல்றீங்களா? மோசடி பேர்வழிய சொல்றீங்களா? :)

Anbu said...

பயனுள்ள தகவல், நன்றி

கே. பி. ஜனா... said...

தகவலுக்கு நன்றி...
என்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்திருக்கிற தொடர் இது.
'அன்புடன் ஒரு நிமிடம்'
முதல் பகுதி.
'எண்ணிச் சிந்திடுவோம்...'
http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html

Avainayagan said...

இது போன்ற ஏமாற்று வேலைகளை இப்படி எழுதினால்தானே மற்றவர்களுக்கு தெரியவரும். பதிவுக்கு நன்றி

Naanjil Kishore ♥♥♥ said...

இப்படி ஒரு வழிமுறையா? நீங்க ரொம்ப அலெர்ட். தகவலுக்கு நன்றி