நானும் குடும்ப இஸ்திரி ஆயிட்டேன்ல. ஒரு சமையல் குறிப்பாவது குடுத்தா தான இந்த உலகம் என்னை நம்பும் என்பதற்காக இந்த பதிவு.
சூடா சப்பாத்தி போட்டுக்கலாம். ஆனா தொட்டுக்க குழம்பு, குருமா, சட்னி என்று ஏதாவது செய்ய வளையாது. இந்த மாதிரி சமயத்தில் சட்டென்று சமைக்க ஒரு ரெசிபி.
ஒரு பெரிய வெங்காயத்துக்கு ஒரு தக்காளி என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியை சிறு சிறு துண்டங்களாகவும் நறுக்கிக்கொள்ளுங்கள். புதிதாக பழகுபவர் எனில் Chop board இல் கத்தியை கொண்டு நறுக்கினால் வேலை வெகு விரைவில் முடியும்.
அடுப்பில் வாணலியை வைத்து 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கட் செய்து வைத்துள்ள வெங்காயத்தை நன்கு வதக்கிக்கொள்ளவும். இனி பிரவுன் கலர் வரப்போகிறது என்று தெரியும் சமயத்தில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். 1 வெங்காயம் = 1 தக்காளி = 1/2 டீ ஸ்பூன் உப்பு என்ற கணக்கில் உப்பு சேர்க்கவும்.
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் கோபுரம் போல எடுத்துக்கொள்ளவும். மிளகாய் பொடியை சேர்த்ததும் மறக்காமல் ஸ்டவ்வை குறைந்த தீயில் வைத்து வனக்கவும். இல்லாட்டி மிளகாய் தூள் பாத்திரத்திலேயே ஒட்டிக்கொண்டு டிஷ்ஷை கருக்கி விடும். மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும் இறக்கி விடவும்.
சப்பாத்தியை சுட்டு எடுத்ததும் இந்த கலவையை நடுவில் கொஞ்சம் வைத்து சப்பாத்தியை ரோல் செய்து பரிமாறவும்.
வெங்காயம் தக்காளி மிளகாய்த்தூள் உப்புசேர்ந்ததால் இதற்கு வெங்காளிமிளப்பு ன்னு பேர் வெச்சுட்டேன். எப்புடி !!!! (No bad words)
நீட்டி நெளிச்சு செஞ்சா இதை செய்ய கால் மணி நேரம் ஆகும். நானா ட்ரை பண்ணி செஞ்சு பார்த்து எங்க வீட்டுக்காரருக்கு கொடுத்தா அவர் 'அருமை அருமை' என்று சாப்டுகிட்டே இருந்தார். அந்த நம்பிக்கைல இந்த பதிவை போட்ருக்கேன்.
ஈசியா? கஷ்டமா என்று செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க
ஒரு வேளை இந்த உணவில் நீங்கள் எதிர்பார்த்த அளவு ருசி இல்லையென்றால் அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். அதில் என் கைமணம் இல்லை என்பதே அந்தக் காரணம் ;)

15 comments:
செய்து பார்த்து சொல்றேங்க....
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...
உங்கள் அருமையான வீட்டுகாரர், நீங்கள் எது தந்தாலும் "அருமை அருமை" என்று சொல்லிதானே ஆகனும்.
செய்து பார்த்துக் கொண்டு சொல்கிறேன்.
அட சமையல் குறிப்பு!
கூடவே ஒரு ஷிம்லா மிர்ச் கட் பண்ணி சேர்த்தா இன்னும் கலர்ஃபுல்லாவும், டேஸ்ட் அதிகமாகவும் இருக்கும்....
காலம் காலமா எல்லார் வீட்டிலும் செய்யப்படும் டிஷ் இது :) சூடாகச் சோறுக்கு வைத்துச் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
நீங்க குடும்ப இஸ்திரினு ஒத்துக்கனும்னா இன்னொரு புதுவிதமான ரெசிபி கொடுங்க ;)
அதுசரி, 6 டேபிள் ஸ்பூன் எண்ணெயா?!!
suppar
@ திண்டுக்கல் தனபாலன்
//செய்து பார்த்து சொல்றேங்க....
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...//
இதென்ன ஒன்றுக்கொன்று முரண் ?
@ Nav Analyst
//உங்கள் அருமையான வீட்டுகாரர், நீங்கள் எது தந்தாலும் "அருமை அருமை" என்று சொல்லிதானே ஆகனும்.//
இல்லாட்டி சும்மா விட்ருவோமா ?
@தொழிற்களம் குழு
செஞ்சு பார்த்தாச்சா?
@ வெங்கட் நாகராஜ்
அடடே... சாருக்கு சமையலில் என்னை விட அனுபவம் போல இருக்கே... சமையல் குறிப்பும் எழுதினீங்கன்னா என்னை போன்ற கத்துக்குட்டிகளும் கற்போம் அல்லவா..
@ சுபா
புது ரெசிபி கொடுக்க இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல தெரியுது மா.
6 டேபிள் ஸ்பூன் தான்.. ஜாஸ்தியா தோணுதா?
6 டேபிள் ஸ்பூன் எனக்குக் கொஞ்சம் ஜாஸ்தி தான் :)
அடுத்த பதிவு எப்போ போடப்போறீங்க?
சகோ,
ஒன்று யாராவது நமக்கு இத்தகைய பண்டங்களை செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் நாம் செய்து கொடுத்ததைச் சாப்பிட யாராவது வேண்டும். நாமே செய்து நாமே தின்பதை நினைத்தால் .............போங்கள் ...........இந்தப் பதிவு எனக்குப் பிடிக்கவில்லை ஸாரி
yanna kodumai saravanan
Post a Comment