Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, November 8, 2010

ஆத்திகத்திற்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவு

               என் சென்ற பதிவு என் blog ஐ பிரபலபடுத்திய அளவு என் மற்ற பதிவுகள் செய்யவில்லை. நான் எடுத்துக்கொண்ட விஷயம் அவ்வளவு sensitive ஆனது என்பதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன். இந்த அளவு கருத்து யுத்தம் நடக்கும் என நினைக்கவில்லை. நான் அந்த பதிவுக்கு முன் வரை நாம் தனிநபர் தாக்குதல், அரசியல் போன்ற விஷயங்கள்  தவிர எதை வேணுமானாலும் எழுதலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். கடவுள் விஷயமும் கவனமாக கையாள வேண்டிய ஒன்று என்பதை புரிந்துகொண்டேன்.

                  நான் அந்த தலைப்பை எடுத்துக்கொண்டது, இந்துக்கள் தங்கள் வழிபாட்டு முறையில் உள்ள விஷயங்களுக்கு, நான் படித்து, கேட்டு, பார்த்து அறிந்து கொண்ட வேறு விதமான dimension ல் கூறப்பட்ட விளக்கங்களை பகிர்ந்து கொள்ளவே. தெக்கிகாட்டான் அவர்கள் குறிப்பிட்ட 'http://dharumi.weblogs.us/2005/09/15/66' எனும் ப்ளாக் உண்மையிலேயே அவர் எப்படி நாத்திகன் ஆனார் என்பதை பண்பட்ட முறையில் விளக்கியுள்ளார். அவர் அளவு தெளிவு என் பதிவில் இல்லாமல் போகலாம். நான் பதிவுலகிற்கு புதியவள், சிறியவள் அல்லவா... எனவே அந்த குறைக்கு மன்னிக்கவும். ஆனால், எனக்கு பதிலாக பல பதிவுலக அன்பர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

       தெளிவாக எங்கே விளக்கி இருக்கிறார்கள்? குழப்பி இருக்கிறார்கள் என்று நாத்திக நண்பர்கள் சொல்லக்கூடும். நான் நாத்திகர்களை பொதுவாக கண்டுகொள்வதில்லை. இவர்கள் மூடநம்பிக்கையையும் கடவுள் தன்மையையும் குழப்பிக்கொண்டு கடவுள் இல்லை என்பார்கள். மேலும் அவர்களுக்கு பகுத்தறிவுக்கு பதிலாக சந்தேகக்கண் தான் இருக்கும். நான் அடுத்து குறிப்பிடும் ஒரு விஷயம் முகம் சுளிக்க வைக்கலாம். எனவே மன்னியுங்கள்.

             ஒரு நாத்திகனிடம் ஒரு குழந்தையின்  அப்பா இவர்தான் என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களுக்கு அந்த பெற்றோரின் கல்யாண பத்திரிக்கையை காட்ட வேண்டும், போட்டோ ஆல்பத்தை காட்ட வேண்டும், கல்யாண வீடியோவை காட்ட வேண்டும். இவை இருந்தால் பத்தாது. அவர்களுக்கு இன்னும் விளக்க வேண்டும். டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து காட்டினால் கூட அவர்கள்  நம்ப மாட்டார்கள். டாக்டர், கம்பவுண்டரிடம் காசு கொடுத்து ரிசல்டை மாற்றியதாக சொல்வார்கள். நாத்திகர்களின் கூற்று எப்படிப்பட்டது என்பதற்கு இது உதாரணம். எனவே நான் இவர்களிடம் கடவுள் தன்மையை விளக்க முயற்சிப்பது கிடையாது.

           நான் ஒரு அறை வாங்கினாலோ, முத்தம் வாங்கினாலோ அது எப்படி இருக்கும் என்பதை நான் மட்டுமே உணர்வேன். அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முயற்சிப்பதே அபத்தம். அது போல தான் கடவுள் தன்மையும். 

             கடவுளை அறிய ஒரே ஒரு வழி தான் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அது சரணாகதி தத்துவம். கடவுளை அடையும் வரை நல்லது கெட்டது என்ன  நேர்ந்தாலும் கடவுளை அடையாமல் விடமாட்டேன், எது நடந்தாலும் உன் பொறுப்பு என்பதே அது. கடலை  தாண்ட வேண்டும் என்றால்  முழுவதும் கடக்கும் வரை பொறுமை வேண்டும். பாதி வழியில் திரும்பியவர்களே இங்கு அதிகம். எனவே தான் இது போன்ற விமர்சனங்கள் இந்து மதத்தில் அதிகம்.

கடவுளும் மின்சாரமும் ஒன்றா?
           மின்சாரம் என்பது கண்ணுக்கு தெரிவதில்லை. அதனுடன் எது தொடர்பு கொள்கிறதோ, எது தன்னை மின்சாரத்துடன் தொடர்பு கொள்ளும் விதமாக தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அது மட்டுமே மின்சாரத்தின் பயனை அடைகிறது. உதாரணமாக மரக்கட்டையாக இருக்கும்போது பயன்பெறாதது நிலக்கரியாக மாறிய பின் பயன் பெறுகிறது. அதனால் தான் கடவுளை பற்றி அறிய பொறுமை முக்கியம் என்றேன்.
     
       நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள். இல்லை என்ற ஒன்றை பற்றி இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒரு அறையில் பூனை இருக்கிறது என்று சொன்னால், சொன்னவர்கள்  தான் பூனையை பிடிக்க வேண்டும். பூனை இல்லை என்பவர்கள் அந்த அறைக்கே போக தேவை இல்லை. நாங்கள், ஆத்திகர்கள், கடவுள் இருக்கிறார் என்பவர்கள், தோண்டி துருவி பார்த்து பிறகு தெரிந்து கொள்கிறோமே.

              ஒரு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்போது கூட பின்னால் ஒருவர் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்று நம்புகிறோம். இவ்வளவு நீளமான வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள கடவுள் உதவுகிறார் என்பதில் நம்பிக்கை வைக்ககூடாதா? கடவுள் என்பது ஒரு நம்பிக்கையாகவே இருக்கட்டுமே. . எங்கள் நம்பிக்கையை வீணாக்குவதில் உங்களுக்கு என்ன சந்தோஷம்?

       ஆத்திகர்கள்  முன்பு  குறிப்பிட்ட குழந்தையின் தந்தை குறிப்பிட்டவர்தான் என்கிறோம். எனவே  எல்லோர் மனத்திலும் தெளிவு இருக்கும். நாத்திகர்கள் 'அவர் இல்லை' என்கிறீர்கள். குழப்பம் தான். சந்தேகம் தான். குடி கெட்டது தான்.

      இன்னொரு விஷயம், நான் நாத்திக வாதத்தை எப்போது கேட்டாலும் ஒரு விஷயம் அங்கு உறுதியாக இருக்கும்.  கடவுளை நம்புகிறவர்கள் காயப்படுத்தாமல் எப்படி சொல்வது என்று பேசுவார்கள். கண்டிப்பாக விதி விலக்குகள் உண்டு. ஒத்துக்கொள்கிறேன். அதே போல நாத்திகர்கள் தெளிவாக பேசுவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்களை காயப்படுத்துவார்கள், இதமான தன்மையுடம் பேசவே மாட்டார்கள். கனிவு இருக்கவே இருக்காது. ஒரே ஒரு விதிவிலக்கு 'தருமி' மட்டுமே.

என் சந்தேகம்:
            அணு தான் உலகில் தோன்றிய அனைத்துக்கும் மூலம் என்னும் கூற்று அறிவியல் கூறியது என்றால் முழு முதல் அணு எப்படி வந்தது? இதை உருவாகியது யார்? அது எப்படி தானே உருவாகி இருக்கும்? இந்த கேள்விக்கு உண்மையிலேயே விடை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். அறிவியல் அறிந்த பக்குவப்பட்ட நாத்திகவாதி விடை அளித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால், ஆத்திகவாதிகளின் விடை அனைவருக்கும் தெரியும் என்பதால் இதை நாத்திகரிடம் கேட்கிறேன்.

இதற்கு பின்னூட்டம் தருபவர்கள் தனிநபர் தாக்குதல் செய்யாமல், கோபம் இல்லாத தரமான வார்த்தைகளை உபயோகித்தால், நான் மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன். ஏனென்றால், நீங்கள் ஆத்திகரோ நாத்திகரோ, என்னை பொறுத்தவரை நட்பு, சகோ, முக்கியமாக மனிதர். மனிதத்தை கொன்று தன் கருத்தை வளர்ப்பது  முக்கியம் என நினைப்பது  முட்டாள்தனமல்லவா...

பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு முன்கூட்டியே நன்றி..

17 comments:

பாலா said...

மிகவும் அருமை. உங்களின் கட்டுரை அப்படியே என்னுடய கருத்துக்களுடன் ஒத்து போகின்றன.

//மூடநம்பிக்கையையும் கடவுள் தன்மையையும் குழப்பிக்கொண்டு கடவுள் இல்லை என்பார்கள்

இது முற்றிலும் உண்மை. எல்லா மனிதர்கள் வாழ்விலும் சிற்சில மூட நம்பிக்கைகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். இல்லையேல் புதிதாக வெள்ளை அடிக்கப்பட்ட சுவர் போல இருக்கும்.

பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களின் மீது கொண்ட துவேசத்தாலேயே கடவுள்களை எதிர்க்கிறார்கள். (நான் பார்ப்பனன் அல்லன்)

//என்னை பொறுத்தவரை நட்பு, சகோ, முக்கியமாக மனிதர்.

உண்மையான ஆத்திகரிடம் இருக்க வேண்டிய பண்பு.
வாழ்த்துக்கள் :)

பாலா said...

நேரம் கிடைக்கும்போது நம்ம கடை பக்கமும் வாங்க...

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

சாதாரணமானவள் எனும் பெயரில் எழுதும் அறிவு ஜீவியே! வாழ்க.

உனக்கா தெரியாது முதலில் தோன்றியது எது என்று?

அதனை தெரிந்தபின் இங்கென்ன வாழ்க்கை.

அன்புடன்..

மாணவன் said...

"இதற்கு பின்னூட்டம் தருபவர்கள் தனிநபர் தாக்குதல் செய்யாமல், கோபம் இல்லாத தரமான வார்த்தைகளை உபயோகித்தால், நான் மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன். ஏனென்றால், நீங்கள் ஆத்திகரோ நாத்திகரோ, என்னை பொறுத்தவரை நட்பு, சகோ, முக்கியமாக மனிதர். மனிதத்தை கொன்று தன் கருத்தை வளர்ப்பது முக்கியம் என நினைப்பது முட்டாள்தனமல்லவா..."

ரொம்பவும் யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் அதே நேரத்தில் சிந்திக்கக்கூடியதாகவும் கூறியுள்ளீர்கள் அருமை,

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

எல் கே said...

உண்மையான கடவுள் நம்பிக்கையாளரிடம் அன்பு இருக்கும். மனிதர்களை மதிக்கும் தன்மை இருக்கும்.

நல்ல பகிர்வு

உமர் | Umar said...

//அணு தான் உலகில் தோன்றிய அனைத்துக்கும் மூலம் என்னும் கூற்று அறிவியல் கூறியது என்றால் முழு முதல் அணு எப்படி வந்தது? இதை உருவாகியது யார்? அது எப்படி தானே உருவாகி இருக்கும்? இந்த கேள்விக்கு உண்மையிலேயே விடை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். //

இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்று. இந்தச் சுட்டியில் பாருங்கள்.

இங்கு நடைபெறும் ஆராய்ச்சியை, தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். இன்னும் சில ஆண்டுகள் அந்த ஆராய்ச்சி நடைபெறும். அதன் முடிவில் உங்களுக்கு பல விஷயங்கள், உலகம் உருவானது தொடர்பாய், புரியக்கூடும்.

Higgs-Boson particle பற்றி இதுவரை என்ன கண்டுபிடித்திருக்கின்றனர் என்று தெரிந்துகொண்டு, ஆராய்ச்சி செய்திகளை படிக்கத் தொடங்கினால், நன்றாக புரியக்கூடும்.

-----
கடவுள் உங்களது நம்பிக்கை என்று கூறினால், அது உங்களது தனிப்பட்ட விஷயம் என்று அனைவரும் அமைதியாகிவிடுவர். ஆனால், கடவுளை நிறுவுவதற்கு அறிவியலை துணைக்கழைத்தால், நிச்சயம் கேள்விகள் வரத்தான் செய்யும். அறிவியல் பற்றி பேசினால், ஆதாரம் கொடுங்கள். இங்கே கூட, நீங்கள் மின்சாரம் பற்றி கூறிய விஷயத்தில் என்ன தவறு செய்திருக்கிறீர்கள் என்று சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் விவாதிக்க விரும்பாததால், அதனை அப்படியே விடுகின்றோம்.

----
என்னுடைய பின்னூட்டங்களில் நான் கருத்துக்களைத்தான் தெரிவிக்கின்றேன். என் கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல், என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்களிடம், அவர்கள் பாணியிலேயே பதில் சொல்கின்றேன். இப்பொழுது கூட சிலர் முக்காடு அணிந்து வரக்கூடும். வரட்டும்.

கையேடு said...

//அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முயற்சிப்பதே அபத்தம். அது போல தான் கடவுள் தன்மையும். //

அப்புறம் ஏங்க இந்த "கடவுள் தன்மை" பற்றி மட்டும் விடாது எழுதிகிட்டு, பேசிகிட்டு, போதிச்சிகிட்டு, நடுவீதில வந்து தொந்தரவு பண்ணிகிட்டே இருக்காங்க.

//கடவுளை அடையும் வரை நல்லது கெட்டது என்ன நேர்ந்தாலும் கடவுளை அடையாமல் விடமாட்டேன்,//

கடவுளை ஏன் அடையனும்?

//பூனை இல்லை என்பவர்கள் அந்த அறைக்கே போக தேவை இல்லை.//

பூனை உங்கள் வீட்டின் அறைக்குள் மட்டும் இருந்தால் யாருங்க கேக்கப் போறாங்க.. அது வீதிக்கு வருவதோடு எல்லோருடைய அறையிலும் ஒரு பூனை இருக்கலாம் என்பதை உண்மையென நிறுவ முற்படும்போது கவலைப்பட்டுதானே ஆகணும்.

அது என்னமோ கடவுள் பத்தி பேசுனாலே அறிவியல் தானா வந்துடுது.. ஒன்னு பிரபஞ்சத் தோற்றம் இல்லை பரிணாமம்.

சாதாரணமானவள் said...

நான் கும்மி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். அவரை குறிப்பிட்டு தாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். சகோ கும்மி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் சுட்டியை குறிப்பிடுவது சரி தான். இருப்பினும் அதில் என்ன கருத்து சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.

கடவுளை ஏன் அடையணும் என்று கேட்டுள்ள கையேடு அவர்களுக்கு, ஏன் சம்பாதிக்கணும், ஏன் சாப்பிடனும், ஏன் ப்ளாக் எழுதனும், ஏன் பின்னூட்டம் குடுக்கணும் என்பது போல இருக்கிறது உங்கள் கேள்வி. உங்களுக்கு ஒரு குறிக்கோள். எங்களுக்கு ஒரு குறிக்கோள். அவ்வளவு தான். உங்களுக்கு மாத சம்பளம் பிடித்திருக்கலாம், எங்களுக்கு சொந்த தொழில் பிடித்திருக்கலாம். அது போல தான் இதுவும்.
உங்கள் வீட்டில் பூனை இல்லை என்பதற்காக எங்கள் வீட்டில் இருக்கும் பூனைக்கு உணவு கொடுக்காதே என்று கூறாதீர்கள்.

இது வரை என் பதிவை படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து நாத்திக அன்பர்களுக்கும் நன்றி. நான் சென்ற பதிவை எழுதியது எதற்கென்றால், வழிபாட்டு முறையில் நம் முன்னோர்கள் வைத்துச்சென்ற, எப்போதும் உடலுக்கும் மனதுக்கும் நல்லது செய்யக்கூடிய உடற்பயிற்சிகள், மன பயிற்சிகள் மறைந்துள்ளன. அவை என்னென்ன என்னும் விதமாக பதியலாம் என்ற எண்ணத்தில் தான். இப்போது தான் தெரிகிறது பதிவுலகிலும் இரண்டு கோஷ்டிகள் உண்டு என்று, எனவே தயவு செய்து நாத்திக நண்பர்கள் கடவுள் விஷயத்தை கொண்டு வாதம் செய்யாமல், முடிந்தால் சாமி பேரை சொல்லி நம் முன்னோர் தந்த அறிவியல் உண்மைகளை பதியுங்கள்.
அனைத்து பதிவுலக நண்பர்களும் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
சாதாரணமானவள்

கையேடு said...

//உங்கள் வீட்டில் பூனை இல்லை என்பதற்காக எங்கள் வீட்டில் இருக்கும் பூனைக்கு உணவு கொடுக்காதே என்று கூறாதீர்கள். //

நான் அப்படி சொல்லலைங்க..

நன்றியும் வாழ்த்துக்களும் தொடருங்கள் உங்கள் தேடலை.

Atheist said...

கும்மிக்கு,

***கடவுள் உங்களது நம்பிக்கை என்று கூறினால், அது உங்களது தனிப்பட்ட விஷயம் என்று அனைவரும் அமைதியாகிவிடுவர். ஆனால், கடவுளை நிறுவுவதற்கு அறிவியலை துணைக்கழைத்தால், நிச்சயம் கேள்விகள் வரத்தான் செய்யும்.**

அதத்தான் நானும் சொல்றேன். நாத்திகம் என்பது உங்க நம்பிக்க. ஆனால், நாத்திகத்தை நிறுவதற்கு அறிவியலை துணைக்கழைத்தால், நிச்சயம் கேள்விகள் வரத்தான் செய்யும்.

***அறிவியல் பற்றி பேசினால், ஆதாரம் கொடுங்கள்***

அதா நீங்க சொல்றீங்க. போன பதிவுல போற போக்குல ஒரு பொய்ய அவுத்து விட்டுட்டு அதுக்கு இப்ப வரைக்கும் ஆதாரத்த காட்டவே இல்ல. அடுத்தவங்கள சொல்றதுக்கு முன்னாடி நீங்க ஒழுங்கா இருக்கீங்களான்னு பார்த்துக்குங்க

**இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்று. இந்தச் சுட்டியில்பாருங்கள்**

அடுத்து பிக் பேங்க்கு போயாச்சா. சூப்பர்

**என்னுடைய பின்னூட்டங்களில் நான் கருத்துக்களைத்தான் தெரிவிக்கின்றேன். என் கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல், என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்களிடம்**

சார் இத நான் தான் சொல்லணும். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம ஏதேதோ உளறியது நீங்க தான். இப்ப வரைக்கும் பதில் சொல்லாம இருக்கீங்க. பாருங்களேன், இந்த கமெண்ட்டுக்கு பதில் சொல்றேன்னு சொல்லி ஆதரத்த காட்டாம என்ன திட்டுவீங்க. ஸ்டார்ட்

"நாடி ஜோதிட நல்லாசான்"க.சேரன் D.A. said...

நம்புபவர்களுக்கு எந்த ஆதாரமும் தேவை இல்லை.

நம்பாதவர்களுக்கு எத்தனை ஆதாரங்களும் போதாது..

தோழி சாதாரனமானவளே அந்த இறைவன் மீது பாரத்தைப் போட்டு உனது திருப்பணியை தொடர்..

உனது முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்..

உமர் | Umar said...

@சாதாரணமானவள்

பின்னூட்டம் நீண்டு விடும் என்பதற்காக, முழு செய்தியையும் அளிக்காமல், செய்திகளின் சுட்டியை கொடுத்தேன். இனி சுருக்கமாக நிகழ்வுகளைக் கூறி சுட்டிகளை கொடுக்கின்றேன்.

---
நண்பர் கையேடு (ரஞ்சித்) அவர்களின் உரையாடலை தவறாக புரிந்துகொண்டு பதிலளித்துள்ளீர்கள். பிறர் கூறும் கருத்துக்களை தற்காப்பு மனநிலையில் பார்க்கும்போது, இது போன்று நேரிடலாம்.

---
// முடிந்தால் சாமி பேரை சொல்லி நம் முன்னோர் தந்த அறிவியல் உண்மைகளை பதியுங்கள்.//

இது போன்ற தொடர்புபடுத்தல்களைதான் நீங்கள் முக்கியமாக கைவிட வேண்டும். கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது போன்ற serendipity discoveries முக்கியமானதாய் இருக்கலாம். கடவுள், பிழைப்பின் அடிப்படை ஆதாரம் என்றில்லாதவர்கள், உங்களுக்குள்ளாக வைத்துக்கொண்டால் யாருக்கும் பாதகமில்லை. என்னுடைய கடவுள், என்னுடைய மதம், என்னுடைய பழக்கவழக்கங்களே சிறந்தவை என்று பொதுவில் பேசத்தொடங்கும்போது, பிறர் நிச்சயம் மாற்றுக் கருத்தை முன்வைப்பார்கள். அதனை எதிர்கொள்ள முடிந்தால், தாராளமாக, உங்கள் மதப் பழக்க வழக்கங்களை, உங்கள் கடவுளை, உங்கள் மதத்தை தூக்கிப் பிடியுங்கள்.

---

உமர் | Umar said...

@மிஸ்டர் முக்காடு

உட்டாலக்கடி நோபல் பரிசு போட்டோவை, உங்கள் ப்ரோபைல் இமேஜ் ஆக வைத்தால், நன்றாக இருக்குமே. அனைவரும் உங்களைப் பார்த்து அதிசயிப்பார்கள்.

கமல் அடுத்த கெட்டப்ப போட ஆரம்பிச்சிட்டாராம். நீங்க எப்ப அடுத்த கெட்டப் போடப் போறீங்க? சீக்கிரமா போட்டுட்டு வாங்க. இல்லைன்னா, அடிக்கடி கெட்டப் மாத்துற போட்டில, அவர் உங்களை ஜெயிச்சிர போறாரு.

.

சாதாரணமானவள் said...

உண்மைதான். கையேடு அவர்கள் குதர்க்கமாக பேசுவதாக எண்ணி அப்படி சொல்லி விட்டேன். மன்னியுங்கள்.
// முடிந்தால் சாமி பேரை சொல்லி நம் முன்னோர் தந்த அறிவியல் உண்மைகளை பதியுங்கள்.// இந்த வரிகளில் எந்த தவறும் இருப்பதாக நான் எண்ணவில்லை. கடவுள் பெயரை சொல்லி கறி சாப்பிடுவதில் அறிவியல் உண்மை இல்லை தான். ஆனால் சூரிய நமஸ்காரம் செய்வதில் உள்ள அறிவியல் உண்மையை பகிரலாமே...

சாதாரணமானவள் said...

கும்மி அண்ணனுக்கும் atheists அண்ணனுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களில் யார் பக்குவப்பட்டவர்களோ அவர் மற்றவரை பற்றி எந்த கருத்தும் சொல்லாதீர்கள். பொதுவாக பெரியவர்கள் குழந்தைகள் திட்டுவதை பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பெரியவர்களாக இருங்களேன்.

Radhakrishnan said...

விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடையாக இருப்பவர் இறைவன் என்றுதான் இந்த உலகம் அறிந்து கொண்டிருக்கிறது. இறைவன் இந்த உலகம் இருக்கும் வரை அழிய போவதில்லை. இந்த உலகம் மொத்தமாக அழிந்தபின்னரும் இறைவன் இல்லாமல் ஒழியப் போவதில்லை. இதுதான் சத்திய வாக்கு என நம்புவர்களும் உளர்.

இறைவன் பற்றி தெரியாத, உணராத மனிதர்களும் உலகில் உண்டு. இறைவன் பற்றியே சதா சிந்தித்து வாழும் மனிதர்களும் உண்டு. எனவே இறைவன் தத்துவம் அவரவர் விருப்பம்.

ஒருவர் வணங்கினால் தான் இறைவன் இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல. ஒருவர் வணங்காமல் போனால் இறைவன் இல்லை என்று அர்த்தமும் அல்ல.

மனிதர் இறப்போடு பிறப்பும் இறை சிறப்பும்.

//அணு தான் உலகில் தோன்றிய அனைத்துக்கும் மூலம் என்னும் கூற்று அறிவியல் கூறியது என்றால் முழு முதல் அணு எப்படி வந்தது? இதை உருவாகியது யார்? அது எப்படி தானே உருவாகி இருக்கும்? இந்த கேள்விக்கு உண்மையிலேயே விடை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.//

மன்னிக்கவும், அணு உலகின் மூலம் இல்லை என இப்போதைய அறிவியல் சொல்லி கொண்டிருக்கிறது. மேலும் 'பெரு வெடிப்பு கொள்கை' ஏற்கபட்டாலும் அதற்கு முன்னர் என்ன நடந்திருக்கும் என எந்த அறிவியலும் விளக்க இயல்வதில்லை. காரணம் காலம் என்ற ஒன்று இல்லாத நிலை என்றே அறிவியல் தர்க்கம் பண்ணுகிறது. பல ஆராய்ச்சிகள் இன்றைய சூழல் வைத்தே நடத்தபடுகின்றன. உலகம் தோன்றிய பின்னர் நடத்தப்படும் ஆராய்ச்சிகள், உலகம் தோன்றுவதற்கு முன்னர் என்ன நடந்திருக்கும் என்பதை விளக்க முனைவது அறிவியல் கோட்பாடுக்கு உட்படாது என்பதை அறிவியல் வல்லுனர்கள் அறிவார்கள். இருப்பினும் இப்படி நடந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் சொல்லிவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் தலையாட்டி பொம்மைகள் தான் மனிதர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை.

இருப்பினும் அறிவியலும், ஆன்மிகமும் கேள்விக்கு உட்படாமல் போவதில்லை. அறிவியல் பதில் சொல்ல முயற்சிக்கும். ஆன்மிகம் நம்பிக்கை என ஒரு வார்த்தையில் சொல்லி விலகி போகும்.

அறிவியல் படித்தால் விளங்கிக் கொள்ளலாம். ஆன்மிகம் படித்தாலும் புரிய முடியாதது. உணர்வுக்கு உட்பட்ட விசயம் என்றே பலரும் சொல்கிறார்கள். இறை உணர்வு என்று ஒன்று இருக்கிறதா என்ன! இருக்கிறது என்கிறார்கள் பலர்.

நல்ல கட்டுரை, தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

மூட நம்பிக்கை, நாத்திகம், ஆத்திகம், மறு பிறப்பு, அறிவியல், இவையெல்லாம் தொடர்பற்றவை. ஒரு ஆத்திகன் அறிவியலையும் நம்பலாம். நாத்திகன் மறு பிறப்பையும் நம்பலாம். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் அவர் இருக்கிறார் என்று நிரூபிக்க ஏன் படாத பாடு படுகிறார்கள். எல்லாம் தாம் நினைத்தை மற்றவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக தான்.