Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Wednesday, December 1, 2010

பதிவர் சாதாரணமானவள் கோர்ட்டுக்குப் போனார்

            என் இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக நான் நேற்று கோர்ட் வாசல்படியை மிதிக்க வேண்டியதாக போய் விட்டது. என் குடும்பத்தில் யாரும் இப்படி கோர்ட்டுக்குச் சென்றதில்லை. எல்லாம் என் தோழியால் வந்தது...

                     நானும் என் தோழியும் துணி வாங்குவதற்காக கடைவீதி சென்றோம். அவள் வண்டியில் தான். அவள் தான் ஓட்டினாள். நான் நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் 'தேமே' என பின்னால் உட்கார்ந்திருந்தேன். துணிக்கடைக்கு தான் போவாள் என்று இருந்தால், திடீரென ஒரு Beauty Parlour முன் வண்டியை நிறுத்தினாள். தன் புருவத்தை பார்லரில் சரி செய்துகொண்டு, அடுத்து துணிக்கடை செல்லலாம் என்றாள். சரி என்று உடன் சென்றேன்.

                       அந்த பார்லரம்மா துணை தொழிலாக ஆள் பிடிக்கும் வேலையை செய்வார் போல் இருக்கிறது. (அதாங்க M.L.M). காத்திருக்கும் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து இதை படிங்க என்றார். அதில் செல்பேசி உபயோகிப்பவர்களை பாதுகாக்கும் நோக்கோடு சிம் கார்டை விட சிறிய தகடு ஒன்றை போனில் சொருகிக்கொண்டால் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து  தப்பிக்கலாம் என்று எழுதி இருந்தது.

                    அவங்க புத்தகத்த குடுத்த மரியாதைக்காக அந்த தகட்டின் விலை பற்றி விசாரித்தேன். விலை ஆயிரம் ரூபாயாம்.உங்க போன்ல வச்சிருக்கீங்களான்னு கேட்டேன். அவங்க தெளிவா  'நான் புது போன் மாத்தி 2 நாள் தான் ஆச்சு. பழைய போன் ல இருக்கு. புதுசுக்கு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்' னு சொன்னாங்க.  ஆஹா அவங்களா நீங்க னு மனசுல நெனச்சுகிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்.

             ஆண்களே... உங்களுக்கு ஒரு டிப்ஸ். . பெண்களுக்கு நாங்கள் அழகாக இருப்பது தெரிந்துவிட்டால், கண்டிப்பாக அதை சோதித்துப்பார்ப்போம் எத்தனை பேர் நம்மை பார்க்கிறார்கள் என்று. பெரும்பாலும் இதை பா.செ.முன், பா.செ.பின் என இரண்டு வகைக்குள் அடக்கி விடலாம். அதாவது பார்லர் செல்வதற்கு முன், பார்லர் சென்ற பின் :-)

             தோழியின் புருவம் இப்போது நல்ல வடிவமைப்போடு இருந்ததால் இப்போது அவளுக்கு தன்னம்பிக்கை ஏறி இருந்தது. அது என் துரதிர்ஷ்டம். எனவே அம்மணி தன் அழகை செக் செய்ய அடுத்து சென்றது தாலுகா ஆபீஸுக்கு.. இங்க எதுக்கு வந்தன்னு கேட்டேன்.பட்டதாரி கணக்கெடுப்புக்கு பதிவு பண்ணிவிட்டு 5 நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என்றாள். அவள் பட்டதாரி கணக்கெடுப்புக்கு பதில் பார்வையாளர் கணக்கெடுப்பு செய்கிறாள் என்று பின்புதான் தெரிந்தது. என் வாழ்வின் மிக முக்கியமான நேரம் நெருங்கிக்கொண்டிருப்பது தெரியாமல், நானும் போய் ஒரு அப்ளிகேஷன் வாங்கி என் பையில் வைத்தேன்.

            அப்படியே ஒரு அரைமணி நேரம் சென்றது. அவள் நடந்த நடைக்கு அவளின் செருப்பும் அறுந்தது. அவள் ஆர்வமும் பொசுக்கென போய்விட்டது. எனவே இப்போது கடுப்புடன் வேகவேகமாக தன் வேலையை முடித்துக்கொண்டு வண்டியில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தாள். அடுத்ததாவது அவள் துணிக்கடை போவாள் என்று நம்பி, நான் பின்னால் ஏறி அமர்ந்தேன்.

ஆனால்......

அவள் அழைத்துச்சென்றது....

மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கு....

எனக்கு அது நீதிமன்றம் என்றே தெரியவில்லை. அந்தக்கால கட்டிடக்கலையுடன் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை. அதுவும் ஏதோ அரசாங்க அலுவலகம் போல் தான் என்றெண்ணி உள்ளே சென்ற பின்புதான் தெரிந்தது அது ஒரு கோர்ட் என்று. மனம் நடுநடுங்கி போய் விட்டது. என் குடும்பத்தார் யாரும் செல்ல துணியாத ஒரு இடம்... நான் கோர்ட் நடுவில்.... எல்லாம் என் தோழியால் வந்தது.

சொல்ல மறந்து விட்டேனே... அவள் ஒரு வழக்குரைஞர்.

அதன் பின் அங்கும் அவள் வேலையை முடித்துக்கொண்டு, துணிக்கடை சென்று துணி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். (செம experience இல்ல)

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்குமுன்கூட்டியே நன்றிகள். கடுப்பாகாமல் பின்னூட்டம் இருபவர்களுக்கு இன்னும் நன்றிகள்.

30 comments:

KANA VARO said...

என்ன கொடுமை அக்கா இது?

எல் கே said...

அடக் கொடுமையே .. இப்படி கொடுமை பண்ணதுக்கு உங்கள் மேல கேஸ் போடலாம்னு இருக்கேன்

சாதாரணமானவள் said...

அக்கா அக்கான்னு சொல்லி கடுப்பேத்தாதீங்க ப்ளீஸ்.. சகோ ன்னு சொன்னா கூட பரவாயில்ல. எனக்கென்னமோ வயசான மாதிரி இருக்கு. (ஆண்களே.. நோட் பண்ணிக்கங்க.. பொண்ணுங்கள உங்கள விட அதிக வயசுங்கற மாதிரி கூப்பிட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. என்னை மாதிரி)

சாதாரணமானவள் said...

//அடக் கொடுமையே .. இப்படி கொடுமை பண்ணதுக்கு உங்கள் மேல கேஸ் போடலாம்னு இருக்கேன்//ஹா ஹா ஹா போடறது தான் போடறிங்க இன்டேன் கேஸா போடுங்க. எங்க வீட்ல அதன் யூஸ் பண்றோம்.

வெங்கட் நாகராஜ் said...

அச்சச்சோ, நீங்க கோர்ட் வாசலை மிதிச்சுட்டீங்களா, போச்சு போச்சு ! அதை வேற தைரியமா சொல்றீங்க. நான் கூட நேற்று தான் சுப்ரீம் கோர்டுக்குப் போய்ட்டு வந்தேன், உங்க மாதிரி தான்.... நண்பரைப் பாக்க.

Arun Prasath said...

நான் கேஸ் போட்டு, மறுபடியும் உங்கள கோர்ட் வாசல் மிதிக்க வெக்கலாம்னு இருக்கேன். என்ன கேஸ்ஸா, எல்லாரையும் ஓவர்ரா எதிர்பாக்க வெச்சிட்டு புஸ் னு போச்சே அதுவே போதும்.

எல் கே said...

//ஹா போடறது தான் போடறிங்க இன்டேன் கேஸா போடுங்க. எங்க வீட்ல அதன் யூஸ் பண்றோம்//

முடியாது . HP தான் போடுவேன்

எல் கே said...

//அக்கா அக்கான்னு சொல்லி கடுப்பேத்தாதீங்க ப்ளீஸ்.. //

அப்ப ஆன்டி.பாட்டி இதெல்லாம் சொல்லலாமா ??

sathishsangkavi.blogspot.com said...

என்னது கோர்ட் வாசல மிதிச்சீங்களா...

பவங்க கோர்ட் வாசல்...

சாதாரணமானவள் said...

//அப்ப ஆன்டி.பாட்டி இதெல்லாம் சொல்லலாமா ??//
//என்னது கோர்ட் வாசல மிதிச்சீங்களா...

பவங்க கோர்ட் வாசல்...//

ஹல்லோ... என்னை சந்திரமுகி ஆக்காம விடமாட்டீங்க போல இருக்கே...

எல் கே said...

//ஹல்லோ... என்னை சந்திரமுகி ஆக்காம விடமாட்டீங்க போல இருக்கே.//

சீக்கிரம் சந்திரமுகி ஆகுங்க. ஒருமுறை நாங்களும் பார்த்த மாதிரி இருக்கும்

a said...

மொதல்லயெ துணிக்க்டைக்கு போயிருக்கலாமில்ல???

சாதாரணமானவள் said...

அப்படி போயிருந்தா Blog எழுதியிருக்க முடியாதில்ல....

துளசி கோபால் said...

அட ராமா!!!!!
நம்ம கதையைக் கொஞ்சம் நேரமிருந்தா பாருங்க.நான் வழக்குரைஞர்கூட இல்லீங்க

http://thulasidhalam.blogspot.com/2005/04/blog-post_27.html

http://thulasidhalam.blogspot.com/2005/04/blog-post_28.html

Anonymous said...

//சொல்ல மறந்து விட்டேனே... அவள் ஒரு வழக்குரைஞர். //
அய்யய்யோ இப்போவே சொல்லிட்டீங்க.. இன்னும் ஒரு நாலஞ்சு பதிவுக்கு அப்புறம் சொல்லியிருக்கலாமே.. ஹி ஹி :)

Bala said...

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. இதெக்கெல்லாம் டென்சன் ஆகுற ஆட்கள் நாங்க இல்ல. எனக்கு ஒரு சந்தேகம். பெண்கள் அழகாக இருப்பது தெரிந்து விட்டால் சோதித்து பார்ப்பார்களா? இல்லை அழகாக இருக்கிறோமா என்று சோதித்து பார்ப்பார்களா? பியுட்டி பார்லர் சென்று தற்காலிகமாக அழகாகும் பெண்களை கண்டுபிடிப்பது எப்படி. கொஞ்சம் விளக்கினால் இளைய சமூகம் நன்றியோடு இருக்கும்.

ஹரிஸ் Harish said...

சோதித்துப்பார்ப்போம் எத்தனை பேர் நம்மை பார்க்கிறார்கள் என்று. பெரும்பாலும் இதை பா.செ.முன், பா.செ.பின் என இரண்டு வகைக்குள் அடக்கி விடலாம்.//ஆகா இது வேறயா?..உங்க சோதனைகள கொஞ்சம் சொன்னீங்கன்ன கொஞ்சம் அலார்ட்டா இருப்போம்..

ஹரிஸ் Harish said...
This comment has been removed by the author.
அருண் பிரசாத் said...

வலைசரத்துல உங்களை அறிமுகப்படுத்தி இருக்கேன் அங்க வரலைனா கண்டிப்பா கோர்ட்டுக்கு போக வேண்டியதுதான்... நான்... :)

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யோ ஜாமீன் ஏதாச்சும் வேணுமா?

தாராபுரத்தான் said...

விருதைப் பார்த்து வந்தேன்..படித்தா சாதரணமாக தெரியவில்லை..அடிக்கடி வரவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது உங்க எழுத்து.

தேவன் மாயம் said...

ஆட்டோவில் ஏறி விட்டேன். அட்ரஸ் சொல்லுங்க! எங்கே வீடு?

சாதாரணமானவள் said...

//அய்யய்யோ இப்போவே சொல்லிட்டீங்க.. இன்னும் ஒரு நாலஞ்சு பதிவுக்கு அப்புறம் சொல்லியிருக்கலாமே.. // அடடா... அவசரப்பட்டுட்டேனே பாலாஜி சரவணன்...

பாலாவும் ஹரிஸும் இதை மட்டும் விளக்கமா கேக்கறீங்களே... கடவுள் பத்தின பதிவ படிச்சாவது பாத்தீங்களா... பாருங்க மக்களே.. இளைய சமுதாயத்தின் ஆர்வத்தை...

அருண்ப்ரசாத்.... எல்.கே மாதிரி உங்களுக்கும் நல்ல டேஸ்ட்னு நிரூபிச்சுட்டீங்க... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள்.

ஜாமீன் எல்லாம் வேணாம் ரமேஷ். நாங்களும் பதிவுலகுல‌ ரவுடினு ஃபார்ம் ஆகணுமே...

ரொம்ப நன்றி தாராபுரத்தான்...

//தேவன் மாயம்// என்னது.... ஆட்டோவா... சாரி ராங் நம்பர்..

சௌந்தர் said...

நல்ல வேலை நான் இந்த பதிவை படிக்கலை.....

Unknown said...

ம்ம் தலைய பிச்சுகலாம்போல இருக்கு .உங்க பதிவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப போறேன்

kavitha said...

என்ன கொடுமட பழனியப்பா...

நிசமா ஒரு பயங்கர ஆர்வத்தோட படிச்சா...!!!
இப்டி பொசுக்குனு அவங்க வழக்குரைஞர்னு சொல்லிடீங்க . அக்கா :)

மாணவன் said...

//சொல்ல மறந்து விட்டேனே... அவள் ஒரு வழக்குரைஞர். //

ம்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க...

Unknown said...

பதிவை படித்த எனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ ?

Unknown said...

அக்கா அக்கான்னு சொல்லி கடுப்பேத்தாதீங்க ப்ளீஸ்.. சகோ ன்னு சொன்னா கூட பரவாயில்ல. எனக்கென்னமோ வயசான மாதிரி இருக்கு. (ஆண்களே.. நோட் பண்ணிக்கங்க.. பொண்ணுங்கள உங்கள விட அதிக வயசுங்கற மாதிரி கூப்பிட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. என்னை மாதிரி)///

ம் நோடேத் வித் தேங்க்ஸ் உங்க வயதை சொல்லிடுங்க தோழி...பிறகு பிரச்சனை இல்லையே?

J.P Josephine Baba said...

சுவாரசியமான எழுத்து! வாழ்த்துக்கள்!