Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, December 21, 2010

பல்கலைக்கழக தேர்வில் ஜெயிப்பது எப்படி? (ஒரு அனுபவ அலசல் )

அடேய்.... எவன்டா அவன் எக்ஸாம கண்டுபுடிச்சவன்? அவன கூட மன்னிச்சுடுவேன்டா... எவன்டா அவன் அரியர்செல்லாம் கண்டுபுடிச்சவன்? அவன தான் என்னால மன்னிக்கவே முடியாது. கண்ணை கட்டிடுச்சு... (இவ்வளவு நாள் பதிவு எழுதாததற்கு இதுதான் காரணம் நண்பர்களே... )

ஓர் பலகலையின் தொலைதூரக்கல்வியில் என்னுடைய முதுகலையை படித்துக்கொண்டிருக்கிறேன். (அய்யய்யோ... தொடர் நிகழ்காலமாகி போயிடுமோ?) கடைசி வருடம். ஒரு பேப்பர் அரியர். அதற்காக படிக்க வேண்டியிருந்தது. உண்மையை சொல்லனும்னா படிக்கற மாதிரி சீன் காட்ட வேண்டியிருந்தது. இல்லாட்டி ப்ளாக் டைப் பண்ற விரல எங்க அம்மா ஒடிச்சுடுவாங்க. அதான் அடக்கி வாசிச்சுட்டு, இப்ப சுதந்திரப்பறவையா பறந்து வந்துட்டேன்.

நான் பரீட்சை எழுதின என் அனுபவத்தை சொல்றேன். முதல் வருடம் என்னைப்  பார்த்து  நானே ஆச்சரியப்படும் அளவு படித்தேன் (கொஞ்சம் ஓவரா இருக்கா? விடுங்க... விடுங்க ... ) அந்த வருட பரிட்சையில் சாதாரண மதிப்பெண்களே கிடைத்தன. சரி, இரண்டாம் வருடம் நல்லா டைம் எடுத்து படிச்சு percentage அதிகப்படுத்தனும்னு  நினைச்சு செமினார் வகுப்புகள் எல்லாம் கலந்துகிட்டு, (கலந்துகிட்டு. underline பண்ணிகோங்க. கவனிச்சு இல்ல)'மே மாசம் எழுதறதுக்கு பதிலா டிசம்பர்ல எழுதலாம். அப்பதான் நிறைய டைம் கிடைக்கும். இன்னும் நல்லா படிக்கலாம் 'னு இருந்தேன்.

ஆனா university ல ஒரு வித்யாசமான scheme நடைமுறையில் உள்ளது. அதாவது, எங்கள் கல்வியாண்டில் எழுதாமல், இடையில் எழுதினால், இரண்டுக்கும் அதாவது may, december இரண்டுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டுமாம். (அடப்பாவிங்களா... இப்படியா காசு புடுங்குவீங்க?) சரி காசு எப்படினாலும் கட்டறோம், ஒரு attempt ட்ரை பண்ணலாமே னு கால்குறைமனதோடு (அரைகுறையையும் விட கம்மி) எழுதினேன். 1 இல்ல , 2 இல்ல 5 பேப்பர். உலக அதிசயமா அஞ்சும் அதிக மார்க்கோட பாஸ். பர்செண்டேஜும் எகிறுச்சு.

ஆனா இப்ப மூணாவது வருஷத்துல எனக்கு பயங்கர குழப்பமா போச்சு. படிச்சு எழுதறதா இல்ல கதை விடுறதான்னு. இப்ப எனக்கு மூணு பேப்பர் தான்ங்கறதால என் சோம்பேறித்தனத்துக்கு சப்போர்ட்டா இரண்டு பேப்பர் படிக்காமலும், கடின உழைப்புக்கு சப்போர்ட்டா ஒரு பேப்பர் படிச்சும் எழுதலாம்னு முடிவெடுத்து எழுதினேன்.  ரிசல்டும் வந்தது. படிக்காமல் எழுதிய இரண்டிலும் பாஸ். படித்து எழுதிய ஒன்றில் பெயில். (என்னாங்கடா நடக்குது இங்க....) அந்த அரியர் பேப்பரைத்தான் இந்தமுறை எழுதி வந்திருக்கிறேன். நான் பெற்ற அனுபவத்தின் பயனாக 'படிக்காமல்' எழுதி இருக்கிறேன். ரிசல்ட்டை பாத்துடலாம்...

நானும் ஒவ்வொரு எக்ஸாமுக்கும் பாக்கறேன், அது என்ன மாயமோ தெரியல... ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு முந்தின நாள் அதுவும் முந்தின நைட்டு பதியற மாதிரி எப்பவும் பதியறதே இல்ல. அநேகமா இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும். யாராவது விஞ்ஞானிகள் இதற்கு விளக்கம் குடுத்தா நல்லாஇருக்கும்.

இந்த விஷயம் எவ்வளவு விசித்திரமோ அதே அளவு இன்னொரு விசித்திரமும் உண்டு.

அது என்னன்னா, நாம ஒழுங்கா படிச்சு எழுதற பரிட்சைல வாங்கற மார்க்கை  விட own ஆ கதை விடுற பரிட்சைல தான் அதிக மார்க் வாங்கறோம். இந்த அனுபவமும் பெரும்பாலானவங்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படினா திருத்தறவங்க, நம்ம creative knowledge க்குத்தான் மார்க் போடறாங்களா? நம்ம education system அ புரிஞ்சுக்கவே முடியலையே...


இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்

14 comments:

எல் கே said...

இப்ப படிக்காமயே பின்னூட்டம் போடுவோம்ல அது மாதிரி

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, முதுகலை வரைக்கும் படித்தாலும், படிக்காத மேதைன்னு சொல்லப் போறீங்களா? :)

Anonymous said...

//ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு முந்தின நாள் அதுவும் முந்தின நைட்டு பதியற மாதிரி எப்பவும் பதியறதே இல்ல.//
இத இதத் தான் எதிர் பார்த்தேன். நீங்களும் நம்ம சங்கம் தானா? :)

மாணவன் said...

//அடேய்.... எவன்டா அவன் எக்ஸாம கண்டுபுடிச்சவன்? அவன கூட மன்னிச்சுடுவேன்டா... எவன்டா அவன் அரியர்செல்லாம் கண்டுபுடிச்சவன்? அவன தான் என்னால மன்னிக்கவே முடியாது. கண்ணை கட்டிடுச்சு... //

அரியர் இல்லாத ஒரு டிகிரியா....ச்சே ச்சே... நெவெர்....ஹிஹஹி

மாணவன் said...

தேர்வு அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...

எல் கே said...

அரியர் இல்லாத மாணவன் அரை மாணவன்

ஆமினா said...

ம்ம்...

நல்ல தகவலுங்கோ!!!!

நானும் இனிமே படிக்காமலேயே எக்ஸாம்க்கு போறதா முடிவு பண்ணிடேன்

அருண் பிரசாத் said...

அட நாம சொந்த எழுதுனாதாங்க திருத்தறவங்க ஜெனரல் நாலேட்ஜ் இம்புரூப் ஆகும்..

Anonymous said...

இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலையறீங்க‌

Arun Prasath said...

அது என்னன்னா, நாம ஒழுங்கா படிச்சு எழுதற பரிட்சைல வாங்கற மார்க்கை விட own ஆ கதை விடுற பரிட்சைல தான் அதிக மார்க் வாங்கறோம்.//

நீங்க ரொம்ப லேட் நாங்க எல்லாம் இத எப்பவோ கண்டுபுடிசிடோம்

kavitha said...

அடடா பதிவு அருமையோ அருமை... எங்கேயோ கேட்ட குரல் :)

சுபத்ரா said...

நானும் முதுகலை பண்ணனும்னு அப்ளை பண்ணி, பரீட்சை அன்றைக்கு அதிகாலையில் அந்தப் பாடம் நன்றாகத் தெரிந்த என் நண்பரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 5 யூனிட்டைப் பற்றியும் அவசர அவசரமாக அவர் லக்சர் கொடுப்பதைக் கேட்டுவிட்டுப் போய் பரீட்சை எழுதினேன். இதே போல் 4 பேப்பர்களுக்கும் :-)
முடிவு வெளியானது. நான்கிலும் ஃபர்ஸ்ட் க்ளாசில் பாஸ் :-)
இதை என்னவென்று சொல்வது??

Anonymous said...

//ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு முந்தின நாள் அதுவும் முந்தின நைட்டு பதியற மாதிரி எப்பவும் பதியறதே இல்ல. அநேகமா இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும். யாராவது விஞ்ஞானிகள் இதற்கு விளக்கம் குடுத்தா நல்லாஇருக்கும்// - நீங்க பெட்டெர் ஒரு இன்ஜினியரிங் ஸ்டுடென்ட் கிட்ட கேட்ட இதுக்கு பதில் கிடைக்கும், then என்ன மேடம் நீங்க ஒரு பேப்பர்க்கு பொய் இப்படி பீல் பன்ரிங்க, 1 maths பேப்பர் 5 செமஸ்டர் எழுதன என்ன கேளுங்க நான் சொல்றேன். கொடுமை என்னன்னா கஷ்டமான பேப்பர் எல்லாம் சுலபமா பாஸ் ஆகிட்டேன். சுலபமான அந்த பேப்பர்க்கு என்ன படிச்சாலும் 5 செமஸ்டர் ஒரு மாற்றம் இல்ல. கடைசியா அதிக மார்க் எடுத்து பாஸ் ஆனேன், அந்த ஒரு பேப்பர் என்ன ஒரு software company campus interview kuda அட்டென்ட் பன்ன விடாம பனிடுச்சு
:( - பின் குறிப்பு நான் எழுதன ஒரே arrear பேப்பர் அதான்.
Enna than irunthalum subadra madam mathiri intelligent varamudiyuma :)

”தளிர் சுரேஷ்” said...

வலைச்சரத்தில் உங்களின் இந்த பதிவும் இன்னும் சில பதிவுகளும் அறிமுகம் ஆகியுள்ளன. வாழ்த்துக்கள்! வலைச்சரம் மூலம் முதல்வருகை! இனி தொடர்வேன்! நன்றி!