கடை போட்டு ரெண்டு மாசமாகியும் பதிவு சம்பந்தமான பல சந்தேகங்கள் இன்னும் இருக்கின்றன. சந்தேகங்களுக்கு சமமாக குழப்பங்களும் உண்டு. இந்த சந்தேகங்களும் குழப்பங்களும் என் பதிவு சம்பந்தமாக மட்டும் இல்லை. முழு பதிவுலகம் சம்பந்தப்பட்டது. ஆனால் இந்த பதிவில், நாம், நம் பதிவு, நம் பின்னூட்டம் என்றே குறிப்பிடுகிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. இந்த பதிவு போடும்போது ஏற்படும் சந்தேகங்களை இப்போது கேட்கிறேன். அவ்வப்போது தோன்றுவதை இனி ஒவ்வொரு பதிவிலும் கேட்கிறேன். இந்த சந்தேகங்களில் திமிர் போன்ற ஒரு தொனி தெரியலாம். ஆனால் சத்தியமாக அவை தெரிந்துகொள்ளும் ஆவலில் தான் கேட்கப்படுகிறது. உதவுங்கள். (அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும் :-) )
1 . பின்னூட்டம் போடும் அனைவருக்கும் நாமும் கண்டிப்பாக பதிலுக்கு பதில் தந்தே ஆக வேண்டுமா? ஏனெனில் நான் பார்த்த பதிவர்களின் பதிவுகளில் அப்படிதான் செய்திருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் தலைப்பில் இருந்து விலகி விடுகின்றனவே..
(அப்படி இல்லைங்க. அது நம்ம இஷ்டம் தான். ஒருத்தருக்கொருத்தர் நேரில் பேசிக்கறதுக்கு பதிலா இப்படி பேசிக்கறோம்)
2. பதிவு சம்பந்தமான தங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டம் இடாமல், அதற்கு பதிலாக 'உங்கள் பதிவு அருமை' 'சூப்பர்' 'நல்ல பதிவு' என்று மட்டும் பதிவிடுவதால் என்ன உபயோகம்? அந்த பதிவு பற்றிய சொந்த கருத்துகளை இரண்டொரு வார்த்தைகளில் சொல்லிவிட்டு, பாராட்டலாமே.. பாராட்டை நான் குற்றம் சொல்லவில்லை. பாராட்டு என்பது மற்றவர்களை ஊக்குவிக்கும் விஷயம். வாலி சொன்னது போல 'ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்' தான். ஆனால் வெறும் பாராட்டு மட்டும் சலிக்காமல் கேட்டுக்கொண்டிருக்க நாம் என்ன மிஸ்டர் எக்ஸா? பாராட்டுடன் உங்கள் அனுபவ கருத்துகளையும் பதிவு செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே. (சூப்பர் சந்தேகங்க)
3 . நம் பதிவில் யார்யார் பின்னூட்டம் இடுகிறார்களோ, அவர்களுடைய பதிவில் நாமும் பின்னூட்டம் இட வேண்டுமா? பதிவுலக சம்ப்ரதாயங்கள் பற்றி எனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை. ( அது நம்ம இஷ்டம் 2 )
4 . நம் பதிவிற்கு யார் follower ஆகி இருக்கிறார்களோ அவர்களுக்கு நாமும் follower ஆக வேண்டுமா? தொழில்நுட்ப பதிவுகள் நீங்கலாக பொது தலைப்புகளில் பதிவிடுபவர்களை குறிப்பிட்டு கேட்கிறேன். (அது நம்ம இஷ்டம் 3)
5 . சிலருடைய ப்ளாகில் follower ஆகும் option இல்லையே. என்ன செய்வது? (போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாமே)
6 . ஓட்டு போடுவதன் பயன் என்ன? காரணம் தெரியாமலேயே நான் படிக்கும் பக்கங்கள் அனைத்திற்கும் ஓட்டு போட்டுக்கொண்டிருக்கிறேன். நானும் ஓட்டு பட்டை வைத்துக்கொண்டிருக்கிறேன். பிரபலமாகவா? ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் நம்மிடம் சரக்கு இருந்தால் வந்து பார்ப்பார்கள் அல்லவா? Ad sense இருந்தாலாவது உபயோகம். தமிழ் பதிவர்களுக்கு அதுவும் இல்லை. பின் எதற்கு? நிஜமாகவே தெரியவில்லை. (ஓட்டு போட்டா காசு தருவாங்கன்னு தான்)
7 . நாம் எழுதும் அனைத்து பதிவுகளையும் submit பண்ணவேண்டுமா? இது போன்ற சந்தேகம், நான் விருது வாங்கிட்டேன், இத்தன பேர் என் பதிவ பாக்கறாங்க அப்படின்னு எல்லாம் நான் அப்பப்ப பதிவு போடுவேன். இந்த மொக்கை எல்லாம் கூட submit பண்ணனுமா? (ஹப்பா.. மொக்கைனு அவங்களே ஒத்துகிட்டாங்க)
8 . பல site களில் ஏதோ script கொடுத்து காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள் னு கொடுத்திருக்காங்களே. அதை design -> edit Html ல எந்த இடத்தில் பேஸ்ட் செய்யவேண்டும்? (இருக்கறதிலேயே இது ஒண்ணு தான் உருப்படியான சந்தேகம்)
9 . Last But not Least இங்கும் பாலிடிக்ஸ் உள்ளது என கேள்விப்பட்டேன். பெண் பெயரில் எழுதுபவர்கள், நண்பர்கள், ஒரே ஊர்க்காரர்கள், என இன்னும் சில காரணங்களுக்காக ஓட்டு போடுவார்களாமே? அப்படி என்றால் கருத்துக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் இல்லையா? (அப்படியா... இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே... உடனே பேர, ஊர மாத்தறேன்)
இப்போதைக்கு இவ்வளவு தான் தோணுது. இதற்கு நீங்கள் பின்னூட்டம் இடும்போது அப்ப விளக்கம் கேட்டுக்கறேன். யாரையும் காயப்படுத்தி இருந்தால், அது நான் தெரியாமல் செய்த பிழையாக மட்டுமே இருக்கும். மன்னியுங்கள். இவ்வளவு சந்தேகம் கேட்டு, யாராவது அதற்கு விளக்கம் குடுக்காம, 'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள், ' அப்படின்னு பின்னூட்டம் போட்டுடாதீங்க....
விளக்கம் கொடுக்கும் அனைவருக்கும் முன்கூட்டியே நன்றிகள்.
17 comments:
நாம எழுதறதையும் மதிச்சு பின்னூட்டம் போடறாங்க இல்லை, அதுக்கு ஒரு நன்றி சொல்லவேண்டாமா?
பதில் பின்னூட்டம் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேல் சொன்ன கேள்விக்கு சொன்ன அதே பதில்
ஓட்டு போட்டால் அந்தப் பதிவு பிரபலம் ஆகும். பலர் படிக்க வாய்ப்புள்ளது அடுத்த கேள்விக்கும் இதேதான் பதில். சப்மிட் பண்றது பண்ணாம இருக்கறதும் உங்க இஷ்டம் .
பாலிடிக்ஸ் நெறைய இருக்கு
good
வந்த புதுசுல எனக்கும் இருந்த சந்தேகங்கள்தான்...
1. எல்லாத்துக்கும் பதில் போடனும்னு இல்லை, பதில் போடவேணியதுக்கு போடனும் (உதா...சிலர் கேள்வி கேட்டு இருப்பாங்க)
2. சில பதிவுகளுக்கு அருமை, சூப்பர் இப்படிதான் கமெண்ட் போட முடியும் (டாப் 10 சாங்ஸ்) மத்ததுக்கு சொந்த கருத்தைதான் எல்லோரும் எதிர் பார்கறாங்க... வரது இல்லை (படிக்கறவங்க பிசியா இருக்கலாம்)
3. சம்பிரதாயம் செய்வது நல்லது... ஒரு வித மார்கெட்டிங் டெக்னிக் (நல்ல மீனாக இருந்தாலும் கூவி வித்தாதான் விலை போகும்)
4. பாயிண்ட் 3 படிச்சிக்கோங்க
5. உங்க dashboardல் ADD button click செய்து அவங்க blog URL கொடுங்க....automaticaa follow aagidum
6. நிறைய விசிட்டர் வருவாங்க, பலர் பார்க்க வாய்ப்பு உண்டு
7. உங்க பதிவை பொருத்தது. mandatory கிடையாது. உங்கள் விருப்பம்
8. depends on the script. widgets means தனியா add as widget ல போய் சேர்த்துக்கலாம். template சம்பந்த பட்டதுனா edit html போகனும்
9. No comments
'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள், '
கோக்குமாக்க கமெண்ட் போடுறவர் சங்கம்
நானும் புதுசு தான்.... அனுபவம் உள்ளவங்க சொல்றத வேடிக்கை பாக்கிறேன்
இந்த சந்தேகத்துகெல்லாம் பதில் தெரியல ஏன்னா நானே பதிவுலகத்துக்கு புதியவன்தான் பிரபல பதிவர்கள் பதிவுலக ஆசான்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்....
வலையுலகத்தில் இருப்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தானே! அரசியலும் இருக்கத்தான் செய்யும். நாம் உண்டு நம் வலைப்பூ உண்டு என்று இருந்தால், பிரச்சினை இல்லை.
1.அவசியம் இல்லை. அவர்கள் கேள்வியாக கேட்டிருந்தால் அளிக்கலாம்.
2.கமெண்ட் என்பது பதிவை படித்தவுடன் மனதில் தோன்றுவது. நல்ல பதிவு என்று கமெண்ட் அடிப்பதில் தவறில்லையே?
3.பதிலுக்கு கமெண்ட் போடவேண்டும் என்று இல்லை. படைத்த உடன் மனதில் பட்டதை கருத்திட்டால் "நாம் பதிவையும் படிக்கிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைவார்கள்
4. இதுமும் அவசியம் இல்லாதது
5. கமெண்டில் அவர்களிடமே கம்ப்ளைண்ட் பண்ணுங்கள்.
6. ஒரு சிலர் மட்டும் படிக்கும் பதிவுகள் பலரை சென்று அடைய வோட்டு முக்கியம்.
7. எல்லா வற்றையும் சப்மிட் பண்ணனும்னு அவசியம் இல்லை.
8. பெரும்பாலானவை add widget பகுதியில் java/script என்று ஒரு widget இணைப்புக்காகத்தான் இருக்கும். மற்றபடி main program என்றால் சம்பந்தப்பட்ட siteலேயே எங்கே பேஸ்ட் செய்யவேண்டும் என்று உதவி இருப்பார்கள்
9. அரசியல் இல்லாத இடம் ஏது? நல்ல பதிவுகளை (நாம் நல்ல பதிவுகள் என்று நினைப்பவை அல்ல) எல்லோரும் விரும்பி படிப்பார்கள். அதை விடுத்து குறுக்கு வழியில் வோட்டு வாங்கி பிரபலமவதால் எந்த பயனும் இல்லை.
நன்றி
'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள்,
1)நம்மள மதிச்சு கமெண்ட் போட்டவங்களுக்கு முடிஞ்ச அளவு நன்றி சொல்லனுங்க.
2)நேரமில்லதப்ப, ஒன்னுமே சொல்லாம போறதுக்கு இதையாவது சொல்லலாமுல்ல!
3), 4)அப்படியொன்னும் அவசியமில்ல!
5)நானும் உங்க பின்னூட்டத்த படிச்சி தான் கத்துகிட்டேன்.
6)இதப்பத்தி நான் ரொம்ப கவலைப் படறது இல்ல (போடறத்துக்கும், வாங்கறதுக்கும்)
7)பிரபலமானவங்க எழுதின லாண்டரி கணக்குக்கு கூட ஆயிரம் பொன்.
8)இதையும் இங்கேயிருந்து தான் கத்துகிட்டேன்.
9)அப்படி ஏதாவது ஐடியா இருந்தா உங்க குரூப்பில என்னையும் சேர்த்துக்கோங்க.
2 வது சந்தேகம் மிக பிடித்திருக்கிறது. கண்டிப்பாக இனி யாருக்கெல்லாம் பின்னோட்டம் இடுகிறேனோ எனக்கு தெரிந்த கருத்தைப் பதிகிறேன் ( தெரிந்தால் தானே 2 வரியாவது போடமுடியும், எனக்கு தான் ஒண்ணுமே தெரியாதே. அப்பாடா தப்பிசிடோம் டண்டணக்கா ஏ டனக்குனக்கா )
நீங்க என்ன ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க.
1. நம்முடைய விருப்பம் தான்
2. நிச்சயம் எனக்குத் தெரிந்தால் பதில் கூறுகிறேன். இல்லையென்றால் வெறும் வாழ்த்து மட்டும் தான் சொல்வேன்.
3.௦100௦௦% நம்முடைய சுய விருப்பத்தைப் பொருத்தது
4. 100௦௦% நம்முடைய சுய விருப்பத்தைப் பொருத்தது
5.கண்டிப்பா காவல்துறையின் உதவி தேவை தான்.
6.ஓட்டு போடுவதன் பயன் என்ன? ---- நம்முடைய பதிவு பிடித்திருக்கலாம், நான் ஒட்டு போடுவதில்லை அப்படியே போட்டாலும் பிடித்தால் மட்டுமே போடுவேன் ( உண்மையா சொல்லவா? எப்படி ஒட்டு போடுவதென்று தெரியாது. ஏ டண்டணக்கா ஏ டனக்குனக்க)
7. பாஸ் பாஸ்
8. பாஸ் பாஸ்
9. நீங்கள் சொல்வது போல் மட்டும் இருந்தால் நாம் நிறைய விசயங்களை தவற விடுவோம்
சந்தேகங்களுக்கு பதில் அளித்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையாகவே உதவிகரமாக இருந்தன.
மறுபடியும் அடங்காம லொள்ளு ரிப்ளை கொடுத்த அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை... 'அவர்' படம் வரப்போகுது.... ஆட்டோல டிவிடி அனுப்பி வச்சுடுவேன்... ஜாக்கிரதை.
"அவர்" னு நீங்க சொன்னது நம்ம இளைய தளபதி "விஜய் " அவர்களை தான?
"அவர்" னு நீங்க சொன்னது நம்ம இளைய தளபதி "விஜய் " அவர்களை தான?
http://usetamil.net
Post a Comment